சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் இருட்டு
Updated on : 27 September 2018

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “. இப்படம் இதுவரை நாம் யாரும் கண்டிடாத புது வகை ஹாரர் திரைப்படமாக இருக்கும். 



சுந்தர் C இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஹாரர் காமெடி படமான  “ அரண்மனையின் ” இரண்டு பாகங்களையும் சுந்தர் C இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படம் புதுமையான டார்க் ஹாரர் படமாக இருக்கும். முகவரி , நேபாளி , தொட்டி ஜெயா , 6 மெழுகுவர்த்திகள் போன்ற கல்ட் படங்களை இயக்கிய VZ துரை இப்படத்தை இயக்கியுள்ளார். 



படத்தை பற்றி இயக்குனர் கூறியது , ஆம் , இது புதுமையான ஹாரர் படம் தான். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன் என்றார். 



படத்தின் 85 % படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில்  ஊட்டியில் வைத்து நடைபெற்றது. இன்னும் படத்தின் சில காட்சிகள் ஹைராபாத் மற்றும் சூரத்தில் நடைபெறவுள்ளது.



படத்தில் சுந்தர் C உடன்  தன்ஷிகா , சாக்சி பர்வீந்தர் , VTV கணேஷ் , யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.கேமரா  E. கிருஷ்ணசாமி , எடிட்டிங் R. சுதர்ஷன் , கலை AK முத்து , ஸ்டில்ஸ் சாரதி , டிசைன்ஸ் விருமாண்டி , நிர்வாக தயாரிப்பு APV மாறன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா