சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

தமிழில் இன்னும் நிறைய தேசிய விருதுகள் பெற வேண்டும்: இயக்குனர் வசந்த்
Updated on : 03 April 2016

63-வது தேசிய விருதுகளில் வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் தேசிய விருது பெற்றவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பாக நேற்று(02.04.2016) பாராட்டு விழா நடைபெற்றது.



 



இதில், யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி அவர்கள் குறித்த ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெற்ற அம்ஷன் குமார் அவர்களும், எ ஃபேர் ஆப்டர் நூன்: எ பெயிண்டட் சகா(A Far Afternoon: A Painted Saga) ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெற்ற சுருதி ஹரிஹர சுப்ரமணியன் அவர்களும், இதே படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற அரவிந்த்-ஷங்கர் மற்றும் தாயரிப்பாளர் அஷ்வின் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.



 



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய விருதுகள் தேர்வு குழுவில் இடம்பெற்ற இயக்குனர் வசந்த், படத்தொகுப்பாளர் பி.லெனின், சென்னை திரைப்பட விழாவின் தலைவர் தங்கராஜ், தேசிய திரைப்பட விழாக்களின் இயக்குனராக இருந்த சந்தானம், ஊடாவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



விழாவில் பேசிய இயக்குனர் வசந்த், "வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் மொத்தம் 24 தேசிய விருது வழங்கப்படுகின்றன. இதில், இந்த ஆண்டு தமிழ் படைப்பாளிகள் 3 விருதுகளை மட்டுமே பெற்றுள்ளனர். எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை உயர வேண்டும். வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் வழங்கப்படும் தேசிய விருதுகள் குறித்த புரிதல் நமது படைப்பாளிகளுக்கு இன்னும் அதிகமாக ஏற்பட வேண்டுமென்று" கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா