சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

தெற்கு ஆசியாவின் ஒரே ஐஸ் க்ரீம் கண்காட்சி! - சென்னையில் நடைபெறுகிறது
Updated on : 09 October 2018

தெற்கு ஆசியாவின் ஒரே ஐஸ் க்ரீம் நிகழ்ச்சியாக நடைபெறும் ‘இந்தியன் ஐஸ் க்ரீம் காங்கிரஸ் மற்றும் 





கண்காட்சி’ (IICE) 8 வது முறையாக சென்னையில் அக்டோபர் 8,9 ஆகிய இரண்டு தினங்கள், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் செண்டரில் நடைபெறுகிறது.



 



இன்று (அக்டோபர் 8) நடைபெற்ற துவக்க விழாவில் மாண்புமிகு தமிழக கவர்னர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் கலந்துக்கொண்டு ஐஸ் க்ரீம் காங்கிரஸ் மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.



 



இந்நிகழ்வில் வரவேற்பு நிகழ்த்திய ஐ.ஐ.சி.எம்.ஏ-வின் தலைவர் ராஜேஷ் காந்தி, “இந்தியன் ஐஸ் க்ரீம்  காங்கிரஸ் மற்றும் கண்காட்சி அனைத்து ஐஸ் க்ரீம் நிறுவனங்களுக்கும் சிறந்த வழிக்காட்டியாகவும், சிறந்த தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த தளமாக விளங்குவதோடு, புதிய யுக்திகள் 

மற்றும் டிரெண்டான விஷயங்களை அறிந்துக்கொள்வதற்கு வழிவகுக்கிறது. இந்திய ஐஸ் கிரீம் தொழிலுக்கான வருடாந்திர மிகப்பெரிய விழாவாகவும் கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இங்கு ஐஸ் க்ரீம் நிறுவனங்கள் தங்களது விநியோகஸ்தர்களை மட்டும் சந்திப்பதில்லை, பலவிதமான சேவைகளுடன், இந்தியாவின் அனைத்துப் பகுதிகள், கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் 

சேர்ந்த பல வகைகளையும் இங்கு சந்திக்கிறார்கள்.



 



வாடிக்கையாளர்களிடன் தேவைக்கு ஏற்பவும், காலத்தின் மாற்றத்திற்கு ஏற்பவும் புதிய வகைகளில் ஐஸ் க்ரீம்களை தயாரிக்கவும், புதிய யுக்திகளை பயன்படுத்த அறிந்துக்கொள்வதற்கும் இந்த நிகழ்வு முக்கியமான ஒன்றாகும்.” என்று தெரிவித்தார்.



 



 



ஐ.ஐ.சி.எம்.ஏ-வின் செயலாளர் சுதிர் ஷா பேசுகையில், “இந்திய ஐஸ் க்ரீம் தொழில், பால் அல்லது உணவு பதப்படுத்தும் தொழில்துரையின் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.9000 கோடியாக இருந்த இந்திய ஐஸ் க்ரீம் பொருளாதாரம், 2018 ஆம் ஆண்டு ரூ.12,000 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், ஐஸ் க்ரீம் தொழில் ஒவ்வொரு ஆண்டும் 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சி பெற்று வருகிறது.” என்றார்.



 



150 ஸ்டால்கள் போடப்பட்டிருக்கும் இந்த இரண்டு நாட்கள் கண்காட்சியில் சுமார் 5500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், கண்காட்சியுடன் ஐஸ் க்ரீம் துறையில் வர இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த கருத்தரங்கும் நடைபெறுகிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா