சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா
Updated on : 09 October 2018

தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி , ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான "ஐரா" படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். "அறம்" படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை  லட்சுமி, மா, ஆகிய குறும்படங்களை இயக்கிய, "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்" திரை படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி  இயக்குகிறார்.   ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, "அவள்" படத்தின் கலை இயக்குனர் சிவசங்கர்  அரங்கு அமைக்க,டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.





" நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து "ஐரா" படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.  சர்ஜூன் கதை  சொன்ன மாத்திரத்தில்  இந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை என புரிந்தது. இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார்.   "ஐரா" என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு horror படமாகும்" என்கிறார் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா