சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

விருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம்
Updated on : 22 October 2018

1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின்  அடிப்படையில் தொரட்டி தமிழ் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர்.



இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்த கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறாரகள். 



படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்காக அந்த பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் இரண்டர கலந்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.



அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை , அன்பை , காதலை , உறவுகளின் உணர்வுகளை , கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்டத்தோடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைவரும் எழந்து நின்று கைதட்டி பாராட்டி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த குமார் ஶ்ரீதருக்கு அளித்தனர்.



 செக்கோஸ்லோவேகியாவில் நடந்த PRAGUE மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது தொரட்டி படத்தின் கதையின்நாயகனான ஷமன் மித்ரூ வுக்கு வழங்கபட்டது.



கலந்து கொண்ட அனைத்து திரைப்பட விழாக்களிலும் மிகுந்த வரவேற்பையும் . பாராட்டையும் பெற்ற , வரவிருக்கும் மாதங்களில் மேலும் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள உள்ள இப்படத்தினை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் வாங்கி வெளியிடுகிறது. 



தரமான படங்களுக்கு எப்பொழுதும் ஆதரவு அளித்து கொண்டாடும் பத்திரிக்கையாளர் சமூகமும் , தமிழ்ச்சமூகமும் இப்படத்திற்கும்  ஆதரவை அளிக்க வேண்டுகிறோம்.



ஷமன் மித்ரு

ஷமன் பிக்சர்ஸ்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா