சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

இரண்டு வருட காத்திருப்பிற்கு பலன் - ஜானி ஹரி உற்சாகம்!
Updated on : 23 October 2018

"மெட்ராஸ்", " கபாலி" என இயக்குநர் பா.இரஞ்சித் பட்டறையில் இருந்து வந்திருக்கும் மற்றுமொரு இளம் நடிகர் "ஜானி" ஹரி. "மெட்ராஸ்" திரைப்படத்தில் இவர் நடித்த "ஜானி" கதாபாத்திரத்தின் பெயராலேயே ரசிகர்களால் அறியப்படும் ஹரி, அடுத்தடுத்து "பரியேறும் பெருமாள்", " வட சென்னை" மற்றும் "சண்டக்கோழி 2" ஆகிய திரைப்படங்களின் மூலம் பரபரப்பான நடிகராகி இருக்கிறார்.



தான் நடித்திருக்கும்  மூன்று பெரிய படங்களும் வரிசையாக வெளியாகி இருக்கும் உற்சாகத்தில் இருக்கும் ஹரி, தனது அனுபவத்தைக் கூறும்போது,



"இந்த வருசம் நிஜமாவே எனக்கு சூப்பரான வருசம். இடையில் இரண்டு வருசம் பெரிய இடைவெளி இருந்தது. அதை மறக்கடிக்கும் வகையில் " அண்ணனுக்கு ஜே", "பரியேறும் பெருமாள்", " வட சென்னை" மற்றும் "சண்டக்கோழி 2" என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி இருக்கு. சொல்லப்போனா "பரியேறும் பெருமாள்" நடிப்பதற்கு முன்னாடியே "வட சென்னை", " சண்டக்கோழி 2" படங்களில் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். நான்கு படங்களுமே வெவ்வேறு களம், வெவ்வேறு ஜானர்.. அதனால் இந்த படங்களில் வேலை செய்தது நல்ல அனுபவமா இருந்தது. இவ்வளவு பெரிய படங்களில் ஒரு முக்கியமான ரோல் கிடைக்கிறதெல்லாம் சாதாரணமான விசயமில்லை. இவை அனைத்திற்கும் காரணம் "ஜானி" தான். "ஜானி" மூலமாகத் தான் எனக்கு இங்கே வெளிச்சம் கிடைத்தது. அதற்காக இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு என் முதல நன்றி. மேலும், எனக்கு இவ்வளவு பெரிய வாப்பினை வழங்கிய இயக்குநர் வெற்றிமாறன், லிங்குசாமி, மாரி செல்வராஜ் ஆகியோருக்கும் எனது நன்றிகள்" என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா