சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

துலாம் படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்ட சோனியா அகர்வால்
Updated on : 23 October 2018

வி மூவி சார்பில் விஜய் விகாஸ் துலாம் படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டிய நடிகை சோனியா அகர்வால், இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசித்தார். 'எங்கு இருந்தாய் நீ எங்கு இருந்தாய்' என்ற பாடலும், அம்மாவை பற்றிய 'பெத்த உசுரு ரத்த உசுரு'  என்று தொடங்கும் பாடலை மிகவும் கேட்டு ரசித்தவர் அன்னையை நேசிக்கும் அனைவருக்கும் இப்பாடல் பிடிக்கும் என்றார்.



மேலும்  கானா பாலா பாடிய 'ஜிகினா,ஜிகினா' என்ற பாடல் அனைவரையும்  குத்து ஆட்டம் போடவைக்கும் என்றுகூறி  இசையமைப்பாளர் அலெக்ஸ் பிரேம்நாத்தை வாழ்த்தினார்.



இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்



" இந்தப் படத்தின் கதைக்கரு  இன்றைய மாணவர்கள் போதை கலாச்சாரத்தால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற  மையக்கருவை கொண்டது.அதே சமயம் இன்று சட்டம் என்பது எப்படி இருக்கிறது சமூகத்தில் இன்று அப்பாவிகள் சட்டத்தினால்  எப்படியெல்லாம்  பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்தஸ்தில் உள்ளவர்கள்  சமூகத்தில் பெரும் குற்றங்கள் செய்துவிட்டு எளிதாக அதிலிருந்து எப்படி தப்பித்து கொள்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறது. இப்படத்தில் நாயகனாக விவாத் ,நாயகியாக  ஜெயஸ்ரீயும் நடித்துள்ளனர். இவர்களுடன் மனோபாலா, சிவா பொன்னம்பலம்,மணிமாறன்,அஞ்சலி  மற்றும் பலர் நடித்துள்ளனர் 



இப்படத்திற்கு  ஒளிப்பதிவு கொலஞ்சி குமார்  இசை அலெக்ஸ் பிரேம்நாத்.படத்தொகுப்பு  சுரேஷ் அர்ஸ்.பாடல்கள்  நா.முத்துக்குமார், கானா பாலா, விஜயகுமார்.



இது ஒரு மிகசிறந்த படமாக இருக்கும் என்று பிரபல கதாநாயகி நடிகை சோனியா அகர்வால் அவர்கள் இத்திரைப்படத்தை பாராட்டினார்...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா