சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீஸர் அக்டோபர் 29ம் தேதி வெளியீடு
Updated on : 24 October 2018

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், 2016ம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த மாபெரும் வெற்றிபெற்ற படம் 'தில்லுக்கு துட்டு'. இதில் கதாநாயகியாக ஏஞ்சல் சிங் நடித்திருந்தார். இவர்களுடன் ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடல்களுக்கு இசை S.தமனும், பின்னணி இசை கார்த்திக் ராஜாவும் அமைத்திருந்தனர்.



இப்படம் நகைச்சுவைக் கலந்த பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து 'தில்லுக்கு துட்டு 2' வெளிவரவுள்ளது. சந்தானம் தான் இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தைவிட இரண்டு மடங்கு நகைச்சுவையோடு எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் நகைச்சுவை கலந்த காமெடி படமாக மட்டுமல்லாமல் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டுள்ளது எனவும், ஷிர்த்தா சிவதாஸ் நடிக்கிறார் எனவும் தெரிவித்தார்.



முதல் பாகத்தில் நடித்த குழுவுடன் 'கலக்கப்போவது யாரு' புகழ் ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் 'standup காமெடி'யில் புகழ்பெற்ற அய்யப்பா பைஜூவும் மற்றும் பலரும் நடிக்கின்றனர்.



ஆனால் இப்படத்தை ஹாண்ட்மேட் பிலிம்ஸ்-ன் (Handmade films) N.சந்தானம்  தயாரிக்கிறார். 'சாகா' மூலம் புகழ்பெற்ற ஷபீர் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, மாதவன் எடிட்டிங் செய்கிறார்.



'தில்லுக்கு துட்டு 2' டீஸர் வருகிற அக்டோபர் 29ம் தேதி வெளியிடப் போவதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா