சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்கும் சந்தானம்,
Updated on : 25 October 2018

சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Circle Box Entertainment) என்ற நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி (Tara Alisha Berry)  என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் ஹிந்தியில் வெளியான மாஸ்ட்ரம் (Mastram), த பர்ஃபெக்ட் கேர்ள்  (The Perfect Girl), லவ் கேம்ஸ் ( Love Games) என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.  அத்துடன் முக்கிய கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் (Yatin Karyekar) நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு நடிகர் சாய்குமார்  ஒரு முக்கியமான கேரக்டரில் 

நடிக்கிறார்



இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி ’, காலா, மற்றும் தற்போது வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வடசென்னை’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லியோ ஜான் பால் படத் தொகுப்பாளராக பணியாற்ற, ராஜா கலை இயக்கத்தை கவனிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜான்சன். இவர் நாளைய இயக்குநர் சீஸன்-4 ல் வெற்றிப் பெற்றவர் என்பதும், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



தற்போது ‘புரொடக்சன் நம்பர் 1 ’ என்ற பெயரில் இந்த படத்திற்கான பணிகள் தொடங்கியிருக்கிறது. விரைவில் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகும் ‘தில்லுக்கு துட்டு-2 ’படம் வெளிவரவிருக்கும்  நிலையில், அவர் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா