சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் 'SK 13' படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்
Updated on : 25 October 2018

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தளத்தை நேர்மறையான விஷயங்கள் தான் அலங்கரித்து வருகின்றன. ராஜேஷ் போன்ற மிகவும் எளிமையான, ஜாலியான ஒரு இயக்குனர் இருக்கும்போதே படப்பிடிப்பு தளம் கலகலப்பாக,பாசிட்டாவாக  இருக்கும். தற்போது இன்னும் ஒரு பாசிட்டாவான நபர் படத்துக்குள் வந்திருக்கிறார். ஆம்! SK13 படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை  ராதிகா சரத்குமார். 



இது குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, "எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும்,  நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது. கேஈ ஞானவேல்ராஜா  போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம்.  நிச்சயமாக, சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்வோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருப்பார். நயன்தாரா இத்தனை ஆண்டுகள் கழித்தும் உச்சத்தில் இருப்பதை வைத்தே அவரின் ஆற்றலை அறிந்து கொள்ளலாம். இப்போது, ராதிகா மேடம் இந்த படத்தில் சேர்ந்தது, படத்துக்குள் இன்னும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. ராதிகா மேடம் அவர்களுக்கு என்றே வடிவைமைத்த கதாபாத்திரம் இது என சொல்லலாம். அவரை தவிர இத்தகைய கதாபாத்திரங்களுக்கு யாரும் உயிர் தந்து விட முடியாது. சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், இத்தகைய பெரிய இயல்பான மனிதர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது எங்களது படத்தை மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்க உதவுகிறது என்பதை  உறுதியாக நம்புகிறேன்" என்றார்.ஹிப் ஹாப் ஆதியின் இசை படத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.



SK13 படத்தை ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கேஈ ஞானவேல்ராஜா   தயாரிக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா