சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

மீ டூ வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.வி உதயகுமார்
Updated on : 29 October 2018

எஸ் .விஜயசேகரன் இயக்கத்தில் உருவான எவனும் புத்தனில்லை படத்தின் விழாவில் இயக்குனர் ஆர்.வி .உதயகுமார் பேசியதாவது.,..



இந்த விழாவில் பேசிய சிலர் மீ டூ பற்றி குறிப்பிட்டார்கள்...



இது என்ன மீ டூ.?



ஏ டூ பி டூ?



இங்கே என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே புரியவில்லை.



ஒரு ஆணும் இன்னொரு ஆணும் உடலுறவு கொள்வதும் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் அனுமதி கொடுக்கிறது சட்டம்.



ஒரு ஆண் ஒரு பெண் உறவு கொள்வது தவறு என்கிறது.



ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கவரப்பட்டு உறவு கொள்வது எப்படி தவறாகும்.



அப்படி கவரப்படாமல் போனால் பிறப்பு என்கிற லிங்கே விடுபட்டு போகும்.



இது போல் பிரச்சனை வராமல் இருக்கவே நான் படப்பிடிப்புக் ஆரம்பித்த உடனேயே ஹீரோயின்களை திட்டியும் அடித்தும் விடுவேன்...அதற்கு பிறகு எப்படி என்கிட்டே நெருங்குவார்கள்.



என் இயக்கத்தில் நடித்த  ரஜினிகாந்த் கமல் விஜய்காந்த் கார்த்திக் எல்லோருமே கட்சி ஆரம்பித்து விட்டார்கள்..எனக்கு அப்படி ஒரு ராசியோ என்னவோ?



சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்க வில்லை என்று புகார் சொல்லும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ..



தரமான படங்களாக எடுங்கள்..மக்கள் ரசிக்கிற மாதிரி படங்களை எடுங்கள்..தியேட்டர் தருவார்கள்.



நான் வரி விலக்குக்காக பல படங்களை பார்த்திருக்கிறேன்..அதில் பெரும்பாலான படங்கள் குப்பையோ குப்பை...அப்படி ஒரு படத்தை எவன் காசு கொடுத்து பார்ப்பான்...அப்புறம் எப்படி தியேட்டர் கிடைக்கும்.



இந்த பத்திரிகைகாரங்க பாவம்...எவ்வளவு குப்பை படமாக இருந்தாலும் இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து தண்டணையை அனுபவித்தே வருகிறார்கள்..படம் ஆரம்பித்த உடனேயே டைரக்டர் வெளியே வந்து விடுகிறார்.



பத்திரிக்கையாளர்களும் இந்த சீனுக்கு அடுத்த சீனும் நல்லா இருக்கும் .பாராட்டி எழுதுவோமே என்று கடைசி வரை பார்த்து விடுகிறார்கள்.



பத்திரிக்கையாளர்களை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது...



இவ்வாறு ஆர்.வி உதயகுமார் பேசினார்..



விழாவில் இயக்குனர் தளபதி நடிகர்கள் நபி நந்தி ,சரத்



சுவாசிகா எலிசபெத் சுப்புராஜ் இயக்குனர் எஸ்.விஜயசேகரன்  இசையமைப்பாளர் மரியா மனோகர் ஆகியோர் பேசினார்கள். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா