சற்று முன்

ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ள 'கல்கி 2898 கிபி'!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!   |    #NaniOdela2 திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது!   |    'அமரன்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் #D55   |    ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடியாக கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்!   |    அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |    ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!   |    3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!   |    நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!   |    ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வரும் 'ஐந்தாம் வேதம்’ சீரிஸ்!   |    யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |    நீருக்கடியில் பயிற்சி எடுப்பது போன்ற தத்ரூபமாக காட்சிகளுடன் வெளிவரவிருக்கும் 'தென் சென்னை'   |    ரத்தம் தெறிக்க தெறிக்க, காதலைச் சொல்லும் 'ஹேப்பி எண்டிங்' டைட்டில் டீசர் வெளியீடு!   |    ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!   |   

சினிமா செய்திகள்

சினிமா என்பது ஒரு வழிப்பாதை, வந்தால் திரும்ப முடியாது: பாக்யராஜ்
Updated on : 05 April 2016

'பூனை மீசை' நூல் வெள்யீட்டு விழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. 'டூ', 'மாப்பிள்ளை விநாயகர் ' படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் எழுதிய இந்த சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்துக்கொண்டார்.



 



எழுத்தாளர் பாஸ்கர் சக்தி நூலை வெளியிட, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் நூலை பெற்றுக்கொண்டார்.



 



இவ்விழாவில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், "இந்த ஸ்ரீராம் 'டூ' படத்தை முதலில் இயக்கினார். அடுத்த படம் 'மாப்பிள்ளை விநாயகர்' வெளிவரத் தாமதம் ஆனது. ஆனாலும் சோர்ந்து சும்மா இருக்காமல் இருக்கிற இடைவெளியில் ஏதாவது செய்ய வேண்டுமென்று இந்த நூலை எழுதியிருக்கிறார். அவருக்கு நம்பிக்கை வைத்து ஆதரவு தந்து ஊக்கப்படுத்தும் ஸ்ரீராமின் பெற்றோரைப் பாராட்டுகிறேன். பொதுவாக சினிமாவுக்கு வருகிறோம் என்றால் யாரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள்' 'சினிமாவுக்குப் போக வேண்டாம் உருப்படுற வழியைப் பாரு' என்றுதான் சொல்வார்கள்.



 



சினிமா என்பது ஒரு வழிப்பாதை; வந்தால் திரும்ப முடியாது. எங்கள் ஊரில் ஒருவர் சுருள் முடியோடு அலைவார். ஊரில் எல்லாரும் ,அவரை ,ஜெமினி ஜெமினி என்று கிண்டல் செய்வார்கள். அவர் ஒருமுறை சென்னை வந்து நடிக்க வாய்ப்புக்கு அலைந்து தோல்வியடைந்து திரும்பியதுதான் காரணம்.



 



நான் சில ஆண்டுகள் இங்கு அலைந்து விட்டு ஊரில் போய் சில மாதம் தங்கினால் என்னை எல்லாரும் விக்கிரமாதித்தன் வந்துட்டாருப்பா என்று கேலி பேசுவார்கள். விக்கிரமாதித்தன்  என்றால் நாடாறு மாதம் காடாறு மாதம் என்று இருப்பவனாம் .இப்படி நிறைய கேலி பேசி வேதனைப் படுத்துவார்கள், அது பெரிய கொடுமை. ஸ்ரீராமுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைத்து இருக்கிறது .அவர் கொடுத்து வைத்தவர்.



 



என்னை சினிமாவுக்கு அனுப்ப அம்மாவைத் தவிர யாருக்கும் விருப்பமில்லை,யாரும் என்னை  நம்ப வில்லை. என்னை எங்கள் ஒர்க் ஷாப்பில் போட்டு விடலாம் என்று என் அண்ணன், சித்தப்பா, மாமா என எல்லா உறவினரும் பாடாய்ப் படுத்தினார்கள்.பெரிய ஜோதிடர் ஒருவர் பிரபலமாக இருந்தார். அவரிடம் பார்ப்போம் அவர் ஒகே சொன்னால் நீ சினிமாவுக்கு போகலாம்  என்றார்கள். வந்தவர் இவருக்கு சினிமா சரிப்பட்டு வராது இரும்பு சம்பந்தமான தொழில் என்றால் ஜெயிப்பார் என்றார். இரவு முழுதும் நான் தூங்கவே இல்லை. வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்த போது அம்மாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு விடியற்காலையில் 3.30 க்கு கிளம்பி வந்தேன். சினிமாவும் இரும்புதாம்மா , கேமரா, டிராலி, டிராக் எல்லாமே இரும்புதாம்மா என்று அம்மாவைச் சமாதானப் படுத்தினேன்.



 



வாழ்க்கை என்பது  ஒரு முறை. அதை நினைக்கிற மாதிரி வாழ்ந்து விட்டுப் போகிறேன் என்றேன் . அம்மா மட்டும்தான் என்னை நம்பி ஆசீர்வதித்து அனுப்பினார். அதேபோல் 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் சுதாகரை மொட்டையடித்து கழுதையில் ஏற்றி ஊர்வலம் வருவது போல காட்சி வரும். அப்போது கழுதையை இழுத்துச் செல்கிற மாதிரி நடிக்க ஊரிலுள்ள ஆட்களை கூப்பிட்ட போது எல்லாருமே கேமராவைப் பார்த்த போது டைரக்டர்  என்னை நடிக்க வைத்தார். படம் வெளியான போது. ஊரில் எல்லாம் நான் கழுதையை இழுத்துச் செல்கிறமாதிரி போஸ்டர்கள் இருந்தன. என் அம்மாவைப் பார்த்து உன் மகன் கழுதையை பிடிக்கவா மெட்ராஸ் போனான்? என்று எல்லாரும் கேலி பேசியிருக்கிறார்கள். அம்மா என்னிடம் கேட்டார். 'ஏப்பா நீ அந்த சுதாகர் வேஷத்துல நடிச்சிருக்கலாமே'என்று அதுக்கு மூக்கு முழி நல்லா இருக்கணும் நல்ல நிறம் வேணும்மா என்றேன். உன்னையும் அதுமாதிரி ஒருநாள் ஹீரோவா உங்க டைரக்டரே நடிக்க வைப்பாருப்பா' என்றார். அதுபோலவே 'புதியவார்ப்புகள்' படத்தில் நடிக்க வைத்தார். நான் எவ்வளவோ தயங்கியும் நடிக்க வைத்தார்.



 



ஊரே நம்பா விட்டாலும் என்னை என் அம்மா நம்பினார். அதுபோல ஸ்ரீராமுக்குப் பெற்றோரின் ஆதரவும் ஆசீர்வாதமும் இருக்கிறது.இவர் இனி  'டூ'  ஸ்ரீராம் என்கிற பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் சினிமாவுக்கு 'டூ' விடக் கூடாது பழம் விட வேண்டும்" என்று கூறினார். அவரின் இந்த நீண்ட உரை அனைவரையும் கவர்ந்தது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா