சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பிரஷாந்தின் சாஹசம் படத்தில் ஆஸ்திரேலியா அழகி அமண்டா.....
Updated on : 10 April 2015

வெகு பிரமாண்டமாக தயாராகி வரும் ”சாஹசம்” படத்தில் பிரஷாந்தின் கதாநாயகியாக நடிக்க ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒப்பந்தமாகி கடந்த 40 நாட்களாக நடித்து வருகிறார்..


சாஹசம் படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை என்பதால் இளமையான, அழகான நடனமாட தெரிந்த பெண்ணை  கடந்த எட்டு மாதங்களாக இந்தியா முழுவதும் தேடிவந்து, அமண்டாவை கண்டு பிடித்து கதாநாயகி ஆக்கி உள்ளார் நடிகர் தியாகராஜன்.


இந்தியாவைச் சேர்ந்த அம்மாவுக்கும், இங்கிலாந்து நாட்டு அப்பாவுக்கும் பிறந்த 19 வயதே நிரம்பிய அமண்டா ஒரு ஆஸ்திரேலியா வாசி.


பாலே நடனத்தில் பல பரிசுகளை வென்ற அமண்டா லண்டன் நடிப்பு பள்ளியில் பட்டம் பெற்றவர். அம்மா சமைத்து போடும் இந்திய உணவை ரசித்து சாப்பிடுவாராம் அமண்டா.


நீளமான வசனங்களை கூட நொடியில் மனப்பாடம் செய்து கொண்டு வசனத்திற்கேற்ப உச்சரிப்புடன் நடிப்பில் வெளுத்து வாங்கிவிடுகிறாராம் அமண்டா.


நாசருடன் நடிக்கும் போது அமண்டாவின் நடிப்பு நாசரையே அசர வைத்ததாம். தமிழ் பட உலகிற்கு மற்றுமொரு கைப்படாத ரோஜா என நாசர் பாராட்டினாராம். அமண்டாவின் பழகும் விதம், காலம் தவறாமை, தொழில் சிரத்தை, கிரங்க வைக்கும் அழகு,  மற்றும் கொஞ்சும் தமிழ் இவை எல்லாம் மொத்த பட குழுவினரையும் வியக்க வைத்ததாம்.


பிரஷாந்த் அமண்டா பற்றி கூறுகையில், ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு, அமண்டாவின் வரவு தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி என்றும், சாஹசம் படம் வெளியீட்டுக்கு பிறகு வெகுவாக பேசப்படும் கதாநாயகி ஆவார் என்றும் அமண்டாவை பற்றி விமர்சித்தார்.


மிகப்பெரிய நடிகரான பிரஷாந்துடன் இணைந்து அற்புதமாக உருவாகும் சாஹசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என


மனம் உருகி போகிறாராம் அமண்டா.


ஹாலிவுட் நடிகையான நர்கிஸ் பக்ரி சாஹசம் படத்தில் ஒரே ஒரு நடனத்திற்கு மட்டும்  ஒத்துக்கொண்டு பிரஷாந்துடன் நடனமாடி உள்ளார்.


இத்தகைய அட்டகாசமான படத்தில் நடிப்பது எனது அதிர்ஷ்டமே என நாணத்துடன் கூறுகிறார்  பேரழகி அமண்டா.


பிரஷாந்த் அமண்டா நர்கிஸ் பக்ரியுடன் இணைந்து நாசர், தம்பி ராமைய்யா, சோனுசூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி, தேவதர்ஷினி, மாங்கா கதாநாயகி லீமா பாபு, மலேசியா அபிதா, நளினி, சின்னி ஜெயந்த், பெசன்ட் நகர் ரவி, சுவாமி நாதன், லண்டன் இந்து, பிரம்மாஜி, சாய்பிரஷாந்த், ஹேமா,  ராவ்ரமேஷ், கோட்டா சீனிவாசராவ், ரியாஸ்கான், கிருஷ்ணவம்சி, மிப்பு, ஹலோ FM சுரேஷ், சாய்ராம் ராஜேந்திரநாத், என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.


கலை- மிலன், எடிட்டிங்- ஜாஷி உமர், சண்டை பயிற்ச்சி- கனல் கண்ணன்,


ஸ்டில்ஷ்- சிற்றரசு, நடனம்- ராஜுசுந்தரம், ஷோபி, பிருந்தா, பிரேம் ரக்‌ஷித்


கதை- திருவிக்ரம், இசை- தமன், பாடல்கள்- மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், யுகபாரதி, கபிலன், ஒளிப்பதிவு:-சக்தி சரவணன், S.சௌந்தராஜன்,ஷாஜிகுமார். தயாரிப்பு நிர்வாகம்:- கே.ஆனந்த் மற்றும் K.சக்திவேல்,             அருண்ராஜ் வர்மா சாஹசம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


திரைக்கதை, வசனம் எழுதி ஏராளமான பொருட்செலவில் சாஹசம் படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் தயாரிக்கிறார் நடிகர் தியாகராஜன்.


துரிதமாக தயாராகி வரும் சாஹசம் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. சாஹசம் படத்தின் பாடல் காட்சிகள் மலேசியா, ஜப்பான், கொரியா நாடுகளில் படமாக்கப்பட  உள்ளது.


சாஹசம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வெகு விரைவில் நடைபெறும்.


பிரஷாந்தின் சாஹசம் படம் மே மாதம் வெளி வருமென எதிர்பார்க்கலாம்.


மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாஹசம் படம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணம் இருக்குமாம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா