சற்று முன்

'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |   

சினிமா செய்திகள்

Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா
Updated on : 11 February 2019

தமிழ் சினிமாவின் படைப்பாற்றல் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் புதுப்புது ஐடியாக்களால் நாளுக்கு நாள் மெறுகேறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அதே மனநிலையுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய புதுமையான  திரைப்படங்களுக்கு பின்னால் தூணாக இருக்கின்றன. Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா.



"இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். வி ஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் இயக்குனர் பாலய்யா. இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, CSK மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். 



மேலும், இந்த பெயரிடப்படாத படம் 'டார்க் காமெடி த்ரில்லர்' வகையைச் சேர்ந்தது.  யோகிபாபு மற்றும் முனிஷ்காந்த் (அ) ராமதாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க ஒரு சில பிரபலமான மற்றும் முக்கிய நடிகர்களுடன்  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்.



ஷமந்த் (இசை), ஏ.விஸ்வநாத் (ஒளிப்பதிவு), எம்.முரளி (கலை இயக்குநர்) மற்றும் தினேஷ் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா