சற்று முன்
சினிமா செய்திகள்
கபாலி டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Updated on : 25 April 2016
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் "கபாலி" படத்தின் டீசர், எதிர்வரும் மே 1-ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தில் ரஜினியோடு ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கபாலி படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இதன் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும் வேகமாக பகிரப்பட்டன.
இந்நிலையில், மே 1-ஆம் தேதி படத்தின் டீசர் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகள்
வேகமாக உருவாகி வரும் அரசியல் திரில்லர் திரைப்படம் 'கராத்தே பாபு'
பல வெற்றிப் படங்களையும் 'மத்தகம்' இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.
சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாக இவர்களுடன் முக்கிய வேடங்களில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப் பூர்வமான அரசியல் திரில்லராக இது உருவாகி வருகிறது," என்று தெரிவித்தார்.
ரவி மோகனுடன் பணியாற்றுவது குறித்து பேசிய அவர், "ஒரு முன்னணி நடிகருடன் வேலை செய்வது போல இல்லாமல் எந்த டென்ஷனும் இன்றி மிகவும் கூலாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதற்கு காரணம் ரவி மோகன் வழங்கும் முழு ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் தான். இதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக, திரையரங்குகளில் வெளியாகும் 'அகத்தியா'
ஜனவரி 30 2025 : மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ , ஜனவரி 31 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் விரிவான VFX வேலைகளை மேம்படுத்துவதில் தயாரிப்பு குழு கவனம் செலுத்துவதால் தாமதம் ஏற்படுகிறது, இது பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி இது ஒரு புதுவிதமான அனுபவத்தை உறுதி செய்யும். உலகத் தரம் வாய்ந்த சினிமா காட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தாமதம், என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பா.விஜய் இயக்கிய அகத்தியா படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் இப்படம், ஃபேன்டஸி-ஹாரர் விரும்பும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது.
அகத்தியா , ஒரு திரைப்படம், என்பதை விட மேலானது - இது கற்பனை, திகில் மற்றும் ஆழமான , உணர்ச்சிகரமான கதைசொல்லல் ! ஆகியவற்றின் பிடிமான கலவையாகும். கண்கவர் காட்சியமைப்புகள், மனதைக் கவரும் இசையமைப்பு மற்றும் தீவிரமான கதையுடன், அகத்தியா திரைப்படம் சினிமா அனுபவங்களை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது. பார்வையாளர்கள் புதுவிதமாக மாறுபட்ட கற்பனைக் கூறுதல் மற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழுத்தமான கதைக்களம் நிரம்பிய ஒரு எட்ஜ்-ஆஃப்-தி-சீட் த்ரில்லரை எதிர்பார்க்கலாம்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கே. ஐசரி கணேஷ், மற்றும் WAM India நிறுவனத்தின் தயாரிப்பாளர் அனீஸ் அர்ஜுன் தேவ் தயாரிக்கும் இத்திரைப்படம் , பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. காமெடி, திகில் என பல சுவாரசிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பலவிதமான சவால்கள் மற்றும் எல்லைகளை கடந்து திரைப்படத்தின் காட்சி கலைத்திறன் மேலோங்கி நிற்கிறது, அதுமட்டுமின்றி ஒரு லட்சிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது. தயாரிப்புக் குழுவினர்களின் உழைப்பால் இப்படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் இணையற்ற பிரம்மாண்டத்தின் காட்சிகளை தங்களுக்கு வழங்க காத்திருக்கிறது.
ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் மற்றும் உணர்ச்சிகளின் தனித்துவமான கலவையுடன் , பாரம்பரிய வகைகளை தாண்டிய அகத்தியா திரைப்படம் வரும் பிப்ரவரி 28 2025 அன்று திரையிடப்படும் போது மறக்க முடியாத ஒரு அனுபவத்திற்கு தயாராகுங்கள்
ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் ரொமாண்டிக் திரில்லர் 'தருணம்'
ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.
தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார்.
வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.
ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, உலகமெங்கும் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாகிறது.
ZEE5 ல் தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமாகவுள்ளது 'தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்'
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, "சபர்மதி ரிப்போர்ட்ஸ்" படத்தினை, பார்வையாளர்கள் எளிதாக ரசிக்கும் வகையில், அவர்களின் உள்ளூர் மொழியில் கொண்டு வருகிறது. இயக்குநர் தீரஜ் சர்னா இயக்கத்தில், விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோரின் நடிப்பில், 24 ஜனவரி 2025 அன்று திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், இந்தியாவின் மிகவும் வேதனையான மற்றும் சர்ச்சைக்குரிய சோகங்களில் ஒன்றான 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை, பின் களமாகக் கொண்ட அரசியல் டிராமா திரைப்படமாகும். நீதியின் உண்மை முகத்தை, ஊடகங்களின் பார்வையை, உண்மையின் விலையை அழுத்தமாகப் பேசும், இந்தத் திரைப்படம் நாடு முழுதும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. குடியரசு தினத்தன்று "தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்" படத்தை ZEE5 பார்வையாளர்களுக்குத் தெலுங்கு மற்றும் தமிழில் வழங்குகிறது.
59 அப்பாவி பயணிகளின் உயிரைக் கொன்ற 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொணரும் ஆர்வமுள்ள பத்திரிகையாளர் சமர் குமாரை (விக்ராந்த் மாஸ்ஸி) சபர்மதி ரிப்போர்ட்ஸ் படம் பின்தொடர்கிறது. சமர் ஆழமாக ஆராயும்போது, உண்மையை மறைக்க ஊடக விவரிப்புகளைக் கையாளும், சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு ஆபத்தான சதியை அவர் கண்டுபிடிக்கிறார். அவரது கண்டுபிடிப்புகள் அவரது ஆசிரியரான மணிகா ராஜ்புரோஹித் (ரித்தி டோக்ரா) மூலம் முடக்கப்படும்போது, சமரின் வாழ்க்கை அழிக்கப்பட்டு, அவர் தெளிவற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிருபர் அம்ரிதா கில் (ராஷி கண்ணா) சமரின் மறைக்கப்பட்ட அறிக்கையின் மீது ஈர்க்கப்பட்டு, உண்மையான கதையை அம்பலப்படுத்த அவருடன் இணைந்து கொள்கிறார். ஒன்றாக, ஊழல், வஞ்சகம் மற்றும் துரோகம் ஆகியவற்றின் வலையை அவிழ்க்க அவர்கள் பணியாற்றும்போது பெருகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள், நீதியை வெளிச்சத்திற்குக் கொண்டுவர எல்லாவற்றையும் பணயம் வைக்கிறார்கள். இந்த அதிரடியான உண்மைகளை விவரிக்கிறது "தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்" படம்.
விக்ராந்த் மாஸ்ஸி கூறுகையில்..,
"தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்" மூலம், தற்போதைய நிலைக்கு எதிரான, சங்கடமான உண்மைகளை எதிர்கொள்ளத் தூண்டும் ஒரு கதையை நாங்கள் சொல்கிறோம். இது பத்திரிகையின் சக்தியையும், எவ்வளவு இழந்தாலும் நீதிக்காக நிற்பதன் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது. இந்த படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தது, ஊடக மாஃபியா மற்றும் உண்மையைப் பின்தொடர்வது பற்றிய முக்கியமான உரையாடல்களைத் தூண்டியது. இந்தக் கதை தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை அவர்களின் உள்ளூர் மொழியில் சென்றடைவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் ஈர்க்கும் என நம்புகிறேன்."
நடிகை ராஷி கண்ணா கூறுகையில்..,
“அம்ரிதா கில் ஒரு உறுதியான மற்றும் அச்சமற்ற பத்திரிகையாளர், தனிப்பட்ட இழப்பைப் பொருட்படுத்தாமல் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என நினைப்பவர். இந்த பாத்திரத்தில் நடித்ததன் மூலம், அடக்குமுறை நிறைந்த உலகில் எது சரியானது என்பதற்கு ஆதரவாக நிற்க எடுக்கும் தைரியத்தை ஆராய என்னை அனுமதித்தது. நீதியை நம்பும் எவருக்கும் இது மிக முக்கியமான பாத்திரம். இப்படம் இப்போது இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் ரசிகர்களுக்குக் கிடைக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ரிதி டோக்ரா கூறுகையில்..,
"தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்" இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பார்வையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சொந்த மொழியில் கிடைக்கும். நான் குறிப்பாக ஆர்வமாக இருந்தது உண்மையைச் சுற்றி நடக்கும் நாடகம் மீதானது தான். உண்மை எப்போதும் நிலையானது வலுவானது. பரப்பப்படும் செய்திகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும், எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பெரிய நிறுவனம் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வதும் முக்கியம். எப்போதும் ஒரு செய்தி மக்களுக்குத் தீனியாக்கப்படுகிறது.
இப்படத்தில், மாணிக்கா ராஜ்புரோஹித் தீவிரமான ஒரு வேலையைச் செய்கிறார், பல தடைகளைத் தாண்டி, மிகப்பெரிய சதி வலையின் உண்மைகளை, வெளியே கொண்டுவரப் போராடுகிறார். நடிகர்களாக இல்லாமல், உண்மையான மனிதர்களைத் திரையில் கொண்டு வருவது, எனக்கு மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. உற்சாகமாகவும் இருந்தது" ஒரு நடிகராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
உண்மை மற்றும் நீதியின் பின்னணியிலான அழுத்தமான இந்தக் கதையைத் தவறவிடாதீர்கள் - ZEE5 இல் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிடப்படும் "தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்" படத்தை ட்யூன் செய்யுங்கள்!
'அகத்தியா' படத்தின் மூன்றாவது சிங்கிள், 'செம்மண்ணு தானே', பாடல் வெளியிடப்பட்டது
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ஃபேன்டஸி-ஹாரர்- திரில்லர் படமான “அகத்தியா” படத்தின் மூன்றாவது சிங்கிள், “செம்மண்ணு தானே”, பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புகழ்மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடல், நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மருத்துவ செழுமையைக் கொண்டாடும் தலைசிறந்த படைப்பாக, ரசிகர்களையும், விமர்சகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடலின் ஆழமான வேரூன்றிய கருப்பொருள்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், இந்தப் பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான “அகத்தியா” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான “அகத்தியா” படம், பிப்ரவரி 28, 2025 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்படுகிறது.
“செம்மண்ணு தானே” என்பது வெறும் மெல்லிசை பாடல் மட்டும் அல்ல; இது நமது நிலத்தின் பாரம்பரியத்திற்கான ஒரு ஆத்மார்த்தமான பயணம். எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்த மண்ணிலிருந்து மூலிகைகள் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்திய முனிவர்கள் மற்றும் இயற்கை மருத்துவர்களின் நம்பமுடியாத பங்களிப்பை இந்தப் பாடல் அழகாக சித்தரிக்கிறது - அவற்றில் சிலவற்றை நவீன மருத்துவம் இன்னுமே தீர்க்கப் போராடுகிறது. யுவனின் அற்புதமான இசையில், நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணர்வுப்பூர்வமான மெல்லிசையாக இப்பாடல் நம் மனதை ஆட்கொள்கிறது.
தீபக் குமார் பதியின் அசத்தலான ஒளிப்பதிவு பாடலின் தரத்தை உயர்த்துகிறது, இப்பாடல் கேட்க மட்டுமல்ல, காட்சி விருந்தாகவும் அமைந்துள்ளது. படத்தின் கதையுடன் கலாச்சார அம்சங்களைத் தடையின்றி கலந்திருக்கும், பா.விஜய் எழுதியுள்ள இதயப்பூர்வமான வரிகளால், பாடலின் சாராம்சம் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.
இயக்குநர் பா விஜய் கூறியதாவது…
இந்தப் பாடல் வெறும் இசையல்ல, இது நமது நிலத்தின் ஆழமான வேரூன்றிய கலாச்சார பாரம்பரியத்தின் வழியாக ஒரு பயணம். எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்தும் அபாரமான மருத்துவ மூலிகைகளை நமக்குத் தந்த, நம் மண்ணின் சாரத்தை வெளிப்படுத்த விரும்பினேன். இது குறித்து நான் யுவனுடன் பகிர்ந்து கொண்டேன், அவர் அதை கமர்ஷியலாகவும், கலாச்சார ரீதியாகவும் குறிப்பிடத்தக்க ஒரு மெல்லிசையாக உருவாக்கித் தந்தார். நமது மண்ணின் ஆற்றலால் மனித குலத்திற்குப் பங்காற்றிய ஞானிகளுக்கும், குணப்படுத்துபவர்களுக்கும் இப்பாடல் காணிக்கையாகும்.
“பா.விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே மிக இனிமையான அனுபவம். நம் மண்ணின் அசாத்தியமான மருத்துவ மற்றும் பண்பாட்டு மதிப்பைப் பற்றிய கதைகளை அவர் பகிர்ந்துகொண்டபோது, எனக்கு ஆழ்ந்த பொறுப்புணர்ச்சி ஏற்பட்டது. ‘செம்மண்ணு தானே’ தடைகளைத் தாண்டிய, ஒரு மெல்லிசை. நம் முன்னோர்களின் ஆத்மா மற்றும் அவர்களின் பங்களிப்புகளால் வழிநடத்தப்படுவது போல், இந்த இசை சிரமமின்றி மிக எளிமையாக வந்தது. இது எனது சிறந்த இசையமைப்பில் ஒன்று என்று நான் நம்புகிறேன், பார்வையாளர்கள் இப்பாடலைக் காண பெரும் ஆவலுடன் உள்ளேன்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் கூறியதாவது…
“அகத்தியா மிக முக்கியமான லட்சிய திரைப்படம், இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘செம்மண்ணு தானே’ இந்தத் திரைப்படத்தின் மையம், கதையின் கலாச்சார சாரத்தை அழகாகப் பொதித்து வைத்திருக்கும் பாடல். தனிப்பட்ட முறையில், இந்தப் பாடல் நம் மண்ணின் அபாரமான பங்களிப்பை எடுத்துரைப்பதோடு, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய குணப்படுத்துபவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நமக்கு பலவற்றைக் கொடுத்த மண்ணுக்கு இப்பாடல் சமர்ப்பணம்.”
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து தயாரித்துள்ள “அகத்தியா” திரைப்படம் இதுவரையில்லாத வகையிலான புதுமையான சினிமா அனுபவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பா.விஜய் இயக்கத்தில் இப்படம், கற்பனை, திகில் மற்றும் மாயங்கள் கலந்து, தேவதைகள் மற்றும் பிசாசுகளின் போரில் பார்வையாளர்களை மயக்கும் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
டீசர் மற்றும் முந்தைய சிங்கிள்கள் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பைப் ஏற்படுத்தியுள்ளது, தற்போது "செம்மண்ணு தானே" பாடல் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 28 ஆம் தேதி திரையில் அகத்தியா படத்தை கண்டுகளியுங்கள் !!
சாதனை படைத்துள்ள அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் 'ஒன்ஸ்மோர்' பட பாடல்!
தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, 'ஒன்ஸ்மோர்' எனும் படத்தில் இடம்பெற்ற ''வா கண்ணம்மா..' எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ' ரீல்ஸ் 'களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஒன்ஸ்மோர் ' எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ்கமல் கவனித்திருக்கிறார். இளமை துள்ளலுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.
'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நன்னா '' ஆகிய பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்து முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப் ' ஒன்ஸ்மோர் ' படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரின் இசையில் ' ஒன்ஸ்மோர் ' படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி, இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து திருமண வைபவத்தை கொண்டாடும் வகையில் ' வா கண்ணம்மா..' என்ற பாடலை படக் குழுவினர் பொங்கல் விடுமுறை தினத்தன்று வெளியிட்டனர். இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத , இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான ஹேஷாம் அப்துல் வஹாப் மற்றும் பின்னணி பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் - பண்பாடு - இசை- திருக்குறளுடன் தொடங்கும் பாடல் வரிகள்- இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் திரை தோன்றல்- என பல சுவாரசியமான அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் இந்தப் பாடல் இதுவரை ஐந்தரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அத்துடன் இந்த பாடலை இளைய தலைமுறையினரின் சமூக வலைதள நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் படக்குழுவினர் இந்தப் பாட்டுக்கு நடனமாடி ரீல்ஸாகவும் வெளியிட்டனர். இதனால் உற்சாகமடைந்த 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் இந்த பாடலுக்கு நடனம் ஆடி அதனை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றினர். இதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இந்த பாடலுக்கான மெட்டு- பாடல் வரிகள் - இசை - நடனம் - காட்சி அமைப்பு - என அனைத்தும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருந்ததால் 'வா கண்ணம்மா..' சமூக வலைதளவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் உற்சாகமடைந்த இசை ரசிகர்கள் அனைவரும் தமிழில் அறிமுகமாகும் ஹேஷாம் அப்துல் வஹாப்பிற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ஹாட்டின் + பூங்கொத்து இமோஜிகளுடன் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக கூடும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
அர்ஜுன் தாஸ்- அதிதி ஷங்கர் - ஹேஷாம் அப்துல் வஹாப் - மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - கூட்டணியில் தயாராகி வரும் 'ஒன்ஸ்மோர்' படத்தில் இடம்பெற்ற 'வா கண்ணம்மா..' எனும் பாடல் புதிய சாதனையை படைத்து வருவதால் இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கோலிவுட் நட்சத்திரம் ஸ்ருதிஹாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
இசைக்கலைஞர்- பாடகி - பாடலாசிரியர்- தனித்துவமான திறமை மிக்க நடிகை- என பன்முக ஆளுமையான ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தி ஐ ( The Eye) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.
ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி ஐ ' ( The Eye) எனும் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், மார்க் ரௌலி, லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநரான டாட்னே ஷ்மோன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டு, 'அற்புதமான மற்றும் துணிச்சல் மிக்க ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் எப்போதும் எங்களின் 'டயானா'வாக இருப்பார். லண்டன், கிரீஸ், அமெரிக்கா மற்றும் இந்தியாவை சார்ந்த 'தி ஐ' படக் குழுவினர் இந்த பிரத்யேக நாளில் உங்களை போற்றுகிறோம். கொண்டாடுகிறோம்@ ஸ்ருதிஹாசன் '' என பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஸ்ருதிஹாசன்- டயானா கதாபாத்திரத்தில் நீல வண்ணத்தில் கழுத்தை மூடிய ஸ்வெட்டர் அணிந்து கவலையுடன் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நடிகை ஸ்ருதிஹாசன், மூன்று ஹாட்டின் இமோஜிகளுடன், 'நன்றி என் அன்பானவர்களே ' என பதிவிட்டு, தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படம் கிரேக்க நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மற்றும் லண்டனில் நடைபெற்ற சுயாதீன படைப்புகளுக்கான திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.
ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கோலிவுட் நட்சத்திரமான ஸ்ருதிஹாசனுக்கு ஏராளமான வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது 'தி ஐ' ( The Eye) எனும் ஹாலிவுட் படத்திலும், நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்திலும், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ' ட்ரெயின்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகுமாரின் 'மை லார்ட் ' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா - பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் - கன்னட திரைப்பட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி - தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி - மலையாள திரைப்பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- ஆகிய ஐந்து மொழி திரை ஆளுமைகள் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ' மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் ' மை லார்ட் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமாரின் தோற்றம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் - தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக 'மை லார்ட்' படத்தில் ஒன்றிணைந்திருப்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும் , திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.
பாங்காக் மக்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறிய ஸ்ருதி ஹாசன்!
உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தை பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க .. மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவர்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறினார்.
அவருடைய இந்த தன்னிச்சையான முடிவிற்கு அங்கு கூடியிருந்த ரசிகர்களிடத்தில் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. அவரும் மேடை ஏறி பாடல்களை பாடினார். மேலும் அதனை ஒரு மறக்க இயலாத மாலை நேரமாக மாற்றி அமைத்தார்.
அவர்களிடயே பேசும்போது, இந்த ஆண்டில் மேலும் சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டின் பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் படமாக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசன் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஷ்கின் மேடை நாகரீகம் அறிந்து பேச வேண்டும் - நடிகர் அருள்தாஸ்
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.
வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…
இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது. இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது...
சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார். இதில் எல்லாப்பாடல்களும் நான் எழுதியுள்ளேன், ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார். மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது இந்த டிரெய்லர். படத்தில் உழைத்த அனைவருக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.
நடிகை லத்திகா பேசியதாவது...
இப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், நீங்கள் டிக்கெட் எடுத்த காசு வீணாகாது. நான் இந்தப்படத்தில் மிக நல்ல ரோலில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. என்னை அழகாகக் காட்டிய ஆனந்த் சாருக்கு நன்றி. எனக்கு ஊக்கம் தந்த அம்மா அப்பாவுக்கு நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியதாவது..,
இது நன்றி தெரிவிக்கும் மேடை, அறிமுக தயாரிப்பாளர் விக்னேஷ், இந்த வயதில் இப்படி ஒரு கதையைத் தயாரிக்க நினைத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தை முன்னெடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஈஸ்வரன் படத்திற்குப் பிறகு, சுசீந்திரன் சாரின் கம்பெனி ஆர்டிஸ்டாக நான் மாறிவிட்டேன். இந்தப்படத்தில் சின்ன கதாப்பாத்திரம் என்றாலும் மிக நல்ல கதாப்பாத்திரம். சுசீந்திரன் சார், காதலைக் கையாள்வதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கும். இளமையாக இனிமையாக இப்படத்தில் காதலைக் காட்டியுள்ளார். என்னுடன் இப்படத்தில் பயணித்த திரைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இமான் இசை, கார்த்திக் நேத்தா வரிகளில் பாடல்கள் இந்தக்கால இளைஞர்களைக் கவரும். பிப்ரவரி 14 இப்படம் திரைக்கு வருகிறது. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். நன்றி.
நடிகர் முருகானந்தம் பேசியதாவது..,
2K லவ் ஸ்டோரியில் எனக்கென்ன வேலை எனக் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் எல்லாம் சுசி சாரின் வேலை தான். இமான் சார் இசையில் படம் இயக்க நினைத்தேன், நான் நடித்த காட்சிக்கு இசையமைத்துள்ளார் என்பது பெருமை. இப்போது ஜாலியாக இருக்கலாம் ஆனால், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சுசி சார் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என தெரிகிறது. கண்டிப்பாக இந்தப்படம் அவர் மனதுக்காகப் பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் நடிகர் பாக்யராஜ் கண்ணன் பேசியதாவது..,
2K கிட்ஸ் படத்தில், நான் 90 கிட்ஸாக நடித்துள்ளேன். சுசி சார் போன் செய்து பிரதர் ஃப்ரீயா எனக்கேட்டார், நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பி கூப்பிடுகிறாரே என உடனே நடிக்கப் போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்திற்கு ஆபிஸே போடவில்லை, என்னை ஜூடியோவிற்கு கூப்பிட்டு, அங்கு தான் டெஸ்ட் எடுத்தார் இயக்குநர். படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. விக்னேஷ் பிரதர் இவ்வளவு பெரிய படத்தை, நல்ல கதையை நம்பி எடுத்துள்ளார். நன்றி. இந்தப்படம் தனஞ்செயன் சார் கைக்குப் போய் விட்டது என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. சுசி சார் எதோ குளத்து வேலைக்கு ஆள் பிடிப்பது போல், ஆட்களைக்கூட்டிப்போய் காலை 6 மணிக்கெல்லாம் ஷாட் வைப்பார். பிரேக் பாஸ்ட்டுக்கு முன்னால் ஒரு சீனை முடித்து விடுவார், அதற்குக் காரணம் ஒளிப்பதிவாளர் ஆனந்த் பிரதர் தான். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். பிப்ரவரி 14 ஆம் தேதி படம் வருகிறது. எல்லோரும் லவ்வரோடு போய்ப் படம் பாருங்கள் நன்றி.
நடிகர் பாலசரவணன் பேசியதாவது…
எனக்கு இந்த அருமையான படத்தில் வாய்ப்பு தந்த, சுசீந்திரன் சாருக்கு நன்றி. இந்தப்படம் பார்த்து, அத்தனை வேலைகளுக்கு மத்தியில் என்னை அழைத்துப் பாராட்டிய இமான் சாருக்கு நன்றி. 2கே கிட் படத்தில் எனக்கு என்ன வேலை என என் வீட்டிலும் கேட்டார்கள், நான் 2கே கிட்டாக நடிக்கிறேன் என சொல்லவே இல்லை. இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமென நான் நினைக்கவே இல்லை. சுசீந்திரன் சாருக்கு நன்றி. தனஞ்செயன் சார் படத்தை வெளியிடுகிறார் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. நாயகன் ஜெகவீர் மிக ஆதரவாக இருந்தார். இப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். மீனாட்சி மிக நன்றாக நடித்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் அருள்தாஸ் பேசியதாவது...
தம்பி சுசி தான் இந்த மேடைக்கு வரக்காரணம். நான் நடிகனானது நான் மகான் அல்ல படத்தில் தான். என் பொருளாதாரம் உயர்ந்து, இந்த நிலைக்கு நல்ல நடிகனாக வரக் காரணம் சுசி தான். அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்பு தந்து, என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தது, நான் நன்றாக இருக்கக் காரணம் சுசிதான். சுசி எப்போது கூப்பிட்டாலும், எத்தனை சின்ன பாத்திரம் என்றாலும் நான் போய் விடுவேன். சுசிக்கு தொழில் சுத்தமாகத் தெரியும், அவர் மிகத் திறமைசாலி, அதனால் தான் அவனால் இத்தனை சீக்கிரம் படத்தை முடிக்க முடிகிறது. இந்தப்படத்தில் எனக்குத் தெரிந்த பலர் நடித்துள்ளனர். எனக்குத் தெரியாத பல புதுமுகங்களும் நடித்துள்ளனர். அனைவருக்கும் இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையட்டும். இந்த மேடை மிக அன்பாக ஆதரவாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் "பாட்டில் ராதா" பட மேடையில் மிஷ்கின் பேசியது மிக ஆபாசமாக இருந்தது. அதைப் பார்த்து மிக வருத்தமாக இருந்தது. தமிழ்த் திரைத்துறை உலகம் முழுக்க மதிக்கக் கூடியது. அதை ஆபாசமாக்கக் கூடாது. அவரை பல மேடைகளில் பார்த்து வருகிறேன். தமிழ் ஆளுமைகள் நிறைந்த மேடையில், மிக அநாகரிகமாகப் பேசியது மிக வருத்தமாக இருந்தது. இயக்குநர் பாலாவை, ஐயா இளையராஜா அவர்களை வாடா போடா என்கிறார். யார் இவர் எல்லோரையும் வாடா, போடா எனப் பேச? மிஷ்கின் மேடை நாகரீகம் அறிந்து பேச வேண்டும். இந்த மேடை போல் அன்பாகவும் நாகரீகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
நடிகை திவ்யா துரைசாமி பேசியதாவது....
என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசி சார் தான். அவருக்காகத் தான் இந்த விழாவிற்கு வந்தேன். எதற்காகவும் கோபப்பட மாட்டார், மிகவும் அன்பாக இருப்பார். எப்போதும் ஒரே மாதிரி இருப்பார். அவரது இந்தப்படம் டிரெய்லர் பார்க்கவே அற்புதமாக இருக்கிறது. புதிய ஹீரோ அறிமுகமாகியுள்ளார் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் எழில் பேசியதாவது...
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களும் அத்தனை அற்புதமாக இருந்தது. இத்தனை நடிகர்களை வைத்து, எப்படி இதை எடுத்தார்? என ஆச்சரியமாக உள்ளது. 2கே கிட்ஸை வைத்து என்ன கதை சொல்லப் போகிறார் என்கிற ஆவலும் உள்ளது. இன்றைய இளைஞர்களின் உலகம் புதிதாக இருக்கிறது, அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் அதைப் புரிந்து கொண்டு, அவர்கள் உலகத்திற்குள் நுழைந்து, அடுத்த கட்டத்திற்கு ஒரு படத்தைச் செய்துள்ளார் சுசீந்திரன். நடிகர்கள் எல்லோரும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மிகப் பிரமாதமாக உள்ளது. அத்தனை விஷயமும் இப்படத்திற்கு மிக சரியாக அமைந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசியதாவது…
சுசீந்திரன் சாருடன் இது எனது மூன்றாவது படம், ஆனால் எல்லோரும் இங்கு 5வது படம், 6வது படம் என்கிறார்கள், இத்தனை பேருக்கு வாய்ப்பும், வாழ்க்கையும் தந்த சுசி சாருக்கு நன்றி. "கென்னடி கிளப்" படத்தில் எனக்கு நல்ல பாடல்கள் தந்த இமான் சார், இந்த படத்திலும் அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். படம் மிக அழகான படமாக, அருமையான படைப்பாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
அறிமுக நாயகன் ஜெகவீர் பேசியதாவது..,
கடவுளுக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி. என் முதல் படத்திற்கு இமான் சார் இசையமைப்பது மகிழ்ச்சி. சுசி சார், இமான் சார், நல்ல கலைஞர்கள் என்பதைத் தாண்டி, நல்ல மனிதர்கள். எங்களது படம் வெளியீட்டிற்காக தனஞ்செயன் சாரிடம் சென்றிருப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் உடன் நடித்த பாலசரவணன், மீனாட்சி எல்லோரும் ஆதரவாக இருந்தார்கள். இப்படம் மிக நல்ல படைப்பாக வந்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி உங்கள் லவ்வரோடு போய்ப் பாருங்கள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். நன்றி.
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது..,
City light pictures க்கு இந்தப்படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். சுசி சாரின் நல்ல மனதிற்கும், புதிய முயற்சிக்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும். சுசி சாருடன் இது எனக்கு 9வது படம். ஒரு இயக்குநருடன் நான் தொடர்ந்து படங்கள் செய்வேன் ஆனால் அது ஒரே மாதிரி படமாகத்தான் இருக்கும், ஆனால் சுசி சார் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜானரில் அசத்துவார். இந்தப்படத்தில் 2கே கிட்ஸ் உலகத்தை மிக இயல்பாக அழகாகக் காட்டியுள்ளார். எல்லோரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும். இந்த தலைமுறை இளைஞர்களிடம் உரையாடி, அவர்களின் உலகைக் காட்சிப்படுத்தியுள்ளார். கேமரா மிக உயர்தரமாகக் காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. விஷுவல் நன்றாக இருக்கும் போது தான், இசையும் நன்றாக வரும். பாடல்கள் மிக இளமையாக வந்துள்ளது. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிற்கு என் நன்றி. இப்படத்தின் இசை முதல் முறையாக என் ஆடியோ லேபிள் நிறுவனம் மூலம் வருகிறது மகிழ்ச்சி. இப்படத்தைப் பார்த்து விநியோகிக்க வந்துள்ள தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஜெகவீர் மீனாட்சி மிக நன்றாக நடித்துள்ளனர். அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். பாலா அசால்ட்டாக நடித்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது...
2கே கிட்ஸ் ஸ்டோரியில் நான் என்ன செய்கிறேன் எனக் கேட்காதீர்கள், எனக்கும் ஆச்சரியம் தான். சுசி சார் மிக அருமையாக இன்றைய தலைமுறை கதையைப் படமாக்கியுள்ளார். முதலிலேயே இந்த படம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன், சுசி சார் இந்த படத்தில் என்ன செய்கிறார்? என ஆச்சரியமாக இருந்தது. சில மாதங்கள் கழித்து, இந்த படம் பார்க்க முடியுமா? என்று கேட்டார். பார்த்தவுடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்றைய கால இளைஞர்கள் எப்படி உறவுகளைக் குழப்பிக் கொள்கிறார்கள். எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் உலகம் எப்படி இருக்கிறது, என்பதை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார் சுசி சார். மிகச்சிறந்த இயக்குநர், நாம் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர். வெண்ணிலா கபடிக் குழு படத்தில் இணைய வேண்டியது மிஸ் ஆகிவிட்டது ஆனால் இதில் மிஸ் ஆகிவிடக்கூடாது என உடனே நான் செய்கிறேன் என்றேன். படம் பார்த்து இரண்டாம் பாதியில் எனக்கு சில காட்சிகளில் கருத்து வேறுபாடு இருந்தது, ஆனால் அதைச் சொல்லத் தயங்கினேன். ஆனால் சுசி சார் அதை நான் மாற்றி விட்டேன் என்றார், என் கருத்துக்களுக்கு மதிப்பு தந்தார். இயக்குநர்கள் என் படத்தில் கருத்துச் சொல்ல நீ யார்?, என் படத்தை அப்படியே ரிலீஸ் செய்வது என்றால், செய்! என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லாமல், நான் சொன்னதைக் கேட்டு, மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகப் படத்தின் காட்சிகளை மாற்றியமைத்த சுசீந்திரன் சாருக்காக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த படத்தில் அனைத்து நடிகர்களுமே மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இமான் சார், மிக இளமையான பாடல்கள் தந்துள்ளார். தயாரிப்பாளர் மிகச் சிறப்பாகப் படத்தைத் தயாரித்துள்ளார் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இந்த இளமையான டீம் சொல்ல வரும் கருத்து, அனைவருக்கும் பிடிக்கும். அருள் தாஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், ஒரு மேடையில் நாகரீகம் மீறி, வாடா, போடா எனக் கொச்சை வார்த்தைகளில் பேசக்கூடாது, மிஷ்கின் என் நண்பர் என்றாலும், அதைக் கண்டித்த அருள்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேடைகளில் எப்போதும் அடுத்தவரைக் காயப்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், பாஸிடிவாக பேச வேண்டும். எனக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி எனக்கு மிக முக்கியமான படம். தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது முக்கியம், அதை தன் படமாக எடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு என் நன்றி. என்னை வாழ்த்த எனக்காக வந்த எழில் சார், அருள் தாஸ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் என்னை நம்பி பயணித்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பிரேமலு ரிலீசான அன்று அது யாருக்கும் தெரியாது, அடுத்த ஷோவில் உலகத்திற்கே தெரிந்தது. அது போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்.
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார். Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிட
- உலக செய்திகள்
- |
- சினிமா