சற்று முன்
சினிமா செய்திகள்
நலிந்த கலைஞர்களுக்கு தொடர்ந்து உதவும் விஷால்!
Updated on : 26 April 2016

நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான விஷால், நலிந்த கலைஞர்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், தனது தேவி அறக்கட்டளை மூலம் திரைப்பட பாடல் ஆசிரியர் காளிதாசனின் மருத்துவ செலவுக்காக விஷால் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். ரஜினிகாந்த் பட பாடல் உட்பட நூற்றுக்கும் அதிகமான பாடல்களை பாடலாசிரியர் காளிதாசன் எழுதியுள்ளார்.
இதேபோல் முன்னதாக வறுமையில் வாடி வந்த நாட்டுப்புற பாடகி மற்றும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அவர்களின் நிலையை அறிந்து அவருக்கு விஷால் உதவினார்.
மேலும், பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகி சரளா அம்மாவுக்கு மாதம் தோறும் தனது தேவி அறக்கட்டளை மூலமாக ரூபாய் 5,000 வழங்குவதாக விஷால் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'வணங்கான்' தற்போது ஸ்ட்ரீம் ஆகும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது.
அமெரிக்காவில் இந்திய திரைப்படங்களை கண்டு மகிழ்வதற்கான முன்னணி ஓடிடி தளமான டென்ட் கொட்டா சமீபத்தில் இந்தியாவில் கால் பதித்து தமிழ் படங்களை ரசிகர்களின் சொந்த திரைகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று பாராட்டுகளை குவித்த 'வணங்கான்' திரைப்படத்தை டென்ட் கொட்டா தளத்தில் தற்போது ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
இதைத் தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது.
தரமான பொழுதுபோக்கை தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு வரும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக 'ராஜாகிளி' மற்றும் 'காதல் என்பது பொதுவுடைமை' படங்களை இந்த வாரம் ஓடிடியில் டென்ட் கொட்டா வெளியிடுகிறது.
மேலும், 'ஃபயர்', 'ஜென்டில்வுமன்', 'தினசரி', 'ஒத்த ஓட்டு முத்தையா' உள்ளிட்ட திரைப்படங்களை டென்ட் கொட்டா விரைவில் ஓடிடியில் வெளியிட்டு தனது சந்தாதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவுள்ளது. இன்னும் பல்வேறு படங்களும் டென்ட் கொட்டா தளத்தில் தொடர்ந்து வெளியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, www.tentkotta.com என்ற இணையதளத்தை பார்க்கவும் அல்லது டென்ட் கொட்டாவின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடரவும்.
சினிமா எடுப்பதும், சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம் - நடிகர் ராதாரவி
டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள 'ட்ராமா' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாள, கலை இயக்கத்தை முஜிபுர் ரகுமான் மேற்கொண்டிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.
வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி, இயக்குநர் கே . பாக்யராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி , இயக்குநர்கள் ராகவ் மிர்தாத், வெற்றி, நடிகர் லிங்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் பேசுகையில், ''வாய்ப்புகள் தேடி பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்காததால் என்னுடைய நண்பர்களின் ஆதரவுடன் இப்படத்தின் பணியை தொடங்கினேன். அவர்கள் தங்களது பெயரை வெளிப்படுத்த கூடாது என்று கட்டளையிட்டதால்.. தயாரிப்பாளராக என்னுடைய மனைவியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தை பைலட் மூவியாகத் தான் முதலில் தொடங்கினோம். அது சிறப்பாக வந்தவுடன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது,'' என்றார்.
இசையப்பாளர் ராஜ் பிரதாப் பேசுகையில், ''இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் தம்பிதுரை மாரியப்பனுடன் இணைந்து பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு அவரிடம் பிடித்தது அவருடைய தன்னம்பிக்கை தான். குறும்படங்கள் இயக்கும் காலகட்டத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். குறும்படத்தை கூட தரமாக உருவாக்க வேண்டும் என விரும்புவார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை என்றாலும்.. தரமான படைப்புகளை தான் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. இது என்னை மிகவும் கவர்ந்தது.
தினமும் மாலை ஏழு மணி அளவில் தான் படத்திற்கான பணிகளை தொடங்குவார். அவருக்காக அனைவரும் இந்த நேரத்தில் இணைந்து பணியாற்றினோம்.
ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனுக்கும் இது முதல் படம் தான். சிறப்பாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. இரண்டு பாடல்கள் படத்தில் இடம்பெறும். ஏனைய இரண்டு படத்திற்கான ப்ரோமோ பாடல்கள். இந்த பாடலுக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு வியாபாரத்திற்காக நிறுவனங்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் யார் நடிகர் என்பதைத்தான் முதலில் கேட்டார்கள். பின்னர் இந்தப் படத்தை பற்றிய கண்டன்ட்டை நாங்கள் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டோம், தொடர்ந்து வீடியோவாக வெளியிட்டோம். அதன் பிறகு தான் இப்படத்திற்கான வணிகம் தொடங்கியது. அதன் பிறகு ஆல்ஃபா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த இளமாறன் எங்களுடன் இணைந்தார். அவர் இப்படத்தை 21ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
'ட்ராமா' திரைப்படம் ஒரு ஆந்தாலஜி மூவி. மூன்று கதை, மூன்று களங்கள். இவை அனைத்தும் இன்டர் லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களுக்கு இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் ராகவ் மிர்தாத் பேசுகையில், ''சின்ன படங்களுக்கு ஊடகங்கள் தான் முதலில் ஆதரவு அளிக்கும். இந்தத் திரைப்படத்தை என்னுடைய நண்பர் இளமாறன் விநியோகம் செய்கிறார். சினிமா மீது நேசம் கொண்டவர். அவர் மேலும் தொடர்ந்து திரைத்துறையில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வாழ்க்கையில் எந்த துறையாக இருந்தாலும் முதல்முறையாக பணியாற்றும் போது அந்த அனுபவம் 'ட்ராமா'வாகத்தான் இருக்கும். அதிலும் சினிமாவில் இத்தகைய அனுபவம் அதிகமாக கிடைக்கும். இந்த ட்ராமாவை கண்டு அச்சப்படாமல் தொடர்ந்து பயணித்தால், அந்த ட்ராமா அனுபவம் நிச்சயம் வெற்றியாக மாறும். இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று இதில் நடித்திருக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.
நடிகை சாந்தினி தமிழரசன் பேசுகையில், ''இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னை திரையுலகில் அறிமுகம் செய்த குரு கே. பாக்யராஜ் இங்கு வருகை தந்திருக்கிறார். நான் இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம். அதற்காக இந்த தருணத்திலும் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று வரை நான் படப்பிடிப்பு தளத்தில் அவர் சொல்லிக் கொடுத்த பயனுள்ள குறிப்புகளை பயன்படுத்தி தான் நடித்து வருகிறேன்.
தம்பிதுரை மாரியப்பன் திறமையான இயக்குநர். இந்த படத்திற்கான கான்செப்ட் மிகவும் பெருந்தன்மையானதாக இருந்தது. அவரிடம் கதையைக் கேட்ட பிறகு அவர் ஒரு வீடியோவை காண்பித்தார். அதுவும் சிறப்பாக இருந்தது. எப்போதும் சிரித்த முகமாகவே அவர் இருப்பார். பாசிட்டிவாகத்தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் செய்து வரும் வேலையையும் விடாமல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் இன்ட்ரஸ்டிங்கான கான்செப்ட் என்பதால் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். மார்ச் 21ம் தேதியன்று அனைவரும் தியேட்டருக்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் தரமானதாக இருக்கும். விவேக் பிரசன்னா உடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாதது,'' என்றார்.
நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், ''இந்த திரைப்படம் நிறைய கலைஞர்களுக்கு முதல் படம். அவர்களுக்கு இந்த மேடை முக்கியமானது. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி.
இயக்குநர் தம்பிதுரைக்கு சினிமா மீது இருக்கும் தீவிரமான காதலால் அவர் வேலைக்கு சென்று கொண்டே இப்படத்தின் அனைத்து பணிகளையும் செய்தார். அவருக்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் . அவர் தன்னுடைய சக்திக்கு மீறி உழைப்பை கொடுத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படத்தை வெளியிடுவதற்கு உதவி செய்து வரும் இளமாறனுக்கு நன்றி.
கடந்த 20 நாட்களாக இப்படத்தினை மக்களிடம் சேர்ப்பதற்காக தொடர்ந்து விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தம்பிதுரை போன்ற திறமையான இயக்குநர்கள் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும். அவர் இன்னும் உயரங்களை தொட வேண்டும். அதற்கு இந்த ட்ராமா படத்தின் வெற்றி அவசியம் . இதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
விநியோகஸ்தர் இளமாறன் பேசுகையில், ''இது எனக்கு முதல் மேடை. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. பதினாறு ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். இதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். இந்த நிறுவனத்தின் சார்பில் முதல் முதலாக 'ட்ராமா' படத்தை வெளியிடுகிறேன். முதல் படம் நல்ல படமாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் 'ட்ராமா' படத்தை பார்த்தேன். இப்படத்தின் பாடல்கள் தான் என்னை முதலில் கவர்ந்தன. பாடல்களைப் போல் படத்தின் கதையும் நன்றாக இருக்கிறது. மக்கள் மத்தியில் இப்படத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசுகையில், ''இது எனக்கு வித்தியாசமான மேடை. இயக்குநர் தம்பிதுரை ஒரே சமயத்தில் இரண்டு வேலை அல்ல, பத்துக்கும் மேற்பட்ட வேலைகளை பார்த்திருக்கிறார். 24 மணி நேரமும் சினிமாவுக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உளவியல் ரீதியாகவும் அவர் தயாராகி இருக்க வேண்டும். இல்லை எனில் இது சாத்தியமாகி இருக்காது. இது ட்ராமாடிக்காக யாருக்கு இருந்திருக்கும் என்றால், இயக்குநர் தம்பி துரைக்கு தான் ட்ராமாடிக்காக இருந்திருக்கும். இந்தப் படத்தை எடுப்பதில் அவருக்கு ட்ராமா இருந்திருக்கும். நான் வழக்கறிஞர் என்ற முறையில் தினந்தோறும் ட்ராமாக்களை எதிர்கொள்கிறேன். வாடிக்கையாளர்கள் ட்ராமாவுடன் தான் என்னை சந்திக்க வருவார்கள். அரசியல்வாதி என்ற முறையில் நிறைய மக்கள் ட்ராமாவுடன் தான் என்னை சந்திக்க வருவார்கள். அவர்களுடைய ட்ராமாவை தீர்த்து வைப்பதற்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன். அதனால் ட்ராமா என்பது நான் தினந்தோறும் சந்திக்கும் விஷயம்தான். நான் மட்டுமல்ல இங்கு இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு நாளும் ட்ராமாவை எதிர்கொள்கிறீர்கள். அது உங்களுக்கே தெரியாமல் உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் ஒன்று. ட்ராமாவில் இருந்து விடுதலையானால் சந்தோஷம் தான்.
நாம் தினமும் சந்திக்கும் ஒரு விஷயத்தை தான் இந்தப் படம் பேசுகிறது. நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. நிச்சயமாக நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. இதற்காக இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். ஒரு பாடல் கூட சோடை போகாது. இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை பாடலாசிரியர் மகேஷ் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார், அவர் என் உறவினர் தான். தற்போது இல்லை, இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடலாசிரியராக வேண்டும் என விரும்பி இருந்தார். இந்தப் படத்தின் தொடக்க கட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அவர் எழுதிய இரண்டு பாடல்களும் ஹிட் ஆகும் என்பது என் நம்பிக்கை. பாடல்கள் மட்டுமல்ல படமும் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்,'' என்றார்.
நடிகர் ராதாரவி பேசுகையில், ''எனக்கும் இந்த திரைப்படத்திற்கும் சம்பந்தமில்லை. இருக்கும் ஒரே சம்பந்தம் இயக்குநர் தம்பிதுரை. அவர் இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக என்னுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தாருங்கள் என அழைப்பு விடுத்தார். நான் இங்கு வருகை தராமல் இருந்திருந்தால் ஒரு நல்ல விஷயத்தை தவறவிட்டிருப்பேன்.
நம் மக்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது படத்தை திரையரங்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே செல்போன் மூலமாக படத்தைப் பற்றிய விமர்சனத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். நான் ஒன்றைத் தான் சொல்ல விரும்புகிறேன். இது தமிழர்களின் படம். தமிழர்களாகிய நீங்கள் தான் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர்களுக்கு அடையாளம் என்பது முக்கியம். தற்போது கூட என் தந்தையார் எம் ஆர் ராதாவை பற்றி பல விஷ லயங்களை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சரியோ தவறோ பேசுகிறார்கள். நமக்கு மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கொடுப்போம். சினிமாக்காரர்கள் யாரும் தரக்குறைவானவர்கள் அல்ல. இயக்குநரை பற்றி மற்றவர்கள் அனைவரும் பேசும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமாகி 51 வருடங்கள் ஆகின்றன. நான் நடிப்பதற்கு மட்டும் தான் லாயக்கு, என் சகோதரர் கமல் ஹாசனை போல் என்னால் இருக்க முடியாது. ஏனெனில் எனக்கு ஏகப்பட்ட 'வெளி' வேலைகள் இருக்கின்றன.
இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருக்கிறது. இங்கு படத்தின் மூலம் டிஸ்ட்ரிபியூட்டர் கூட அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கும் இனி சிறந்த எதிர்காலம் உண்டு.
இந்தப் படத்தின் பெயர் 'ட்ராமா'. ஆனால் இந்தப் படத்தை பார்ப்பவர்களை ட்ராமாவில் விடாது. தற்போது சினிமா எடுப்பதும் எளிது, சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம். பொதுவாக படத்தை வெளியிடுவது தான் எளிதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது அதுதான் கடினமானதாக இருக்கிறது. தற்போது படத்தை வெளியிடுவதற்கும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.
முன்பெல்லாம் 25வது நாள், ஐம்பதாவது நாள், நூறாவது நாள் என்று படம் வெற்றி பெறும். ஆனால் தற்போது படம் வெளியாகி மூன்றாவது நாளிலேயே 'வெற்றிகரமான மூன்றாவது நாள் ' என போஸ்டர் வெளியிடப்படுகிறது.
இந்தத் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடினால் தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. குறைந்தபட்சம் பத்து நாட்களாவது இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்," என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''ட்ராமா படத்தை வெளியிடும் இளமாறனுக்கு என் மனமார்ந்த வா்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய ஆர்டிஸ்ட் யாரும் இல்லாமல் புது முகங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை நம்பி வெளியிடும் இளமாறனுக்கு என் நன்றி.
இந்த குழுவில் உள்ள யாரையும் எனக்குத் தெரியாது. இந்த குழுவை எனது மாணவன் பாடலாசிரியர் அருண் பாரதி தான் அறிமுகப்படுத்தி வைத்தார். எதிர்காலத்தில் பிரகாசமாக ஜொலிக்கவிருக்கும் குழுவினரை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் டிரைலரையும் , பாடல்களையும் பார்க்கும் போது இந்த குழுவினர் நிச்சயம் பிரகாசமாக வருவார்கள் என்ற நம்பிக்கை என் மனதுள் ஏற்பட்டது.
இங்கு வருகை தந்த உடன் சாந்தினியிடம் 'பெயின் நெவர் எண்ட்ஸ்' என்ற வாசகம் இருக்கிறதே, அதற்கு என்ன பொருள் என்று கேட்டேன். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்று ஒன்று உண்டு அல்லவா, அதனால் அது தொடர்பாக கேட்டேன்.
இந்தப் படத்தில் நிறைய புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறார்கள் என தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இயக்குநர் தம்பிதுரைக்கு மேலும் பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு இந்தப் படத்தின் வெற்றி உத்திரவாதமாக இருக்கும் என நான் நம்புகி<
நாயகியாக 'பிக் பாஸ்' புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கும் புதிய படம்!
'கே டி எம்', 'பிளிங்க்', 'தசரா', 'தி கேர்ள் பிரண்ட்' உள்ளிட்ட சூப்பர் ஹிட் கன்னட மற்றும் தெலுங்கு படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட கதாநாயகன் தீக்ஷித் ஷெட்டி புதிய படம் ஒன்றின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.
பான் இந்தியா திரைப்படமாக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பேனரில் ஜி. சரவணன் தயாரிக்கிறார். ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தை சாரா இயக்குகிறார், வெங்கி சூரினேனி ஒளிப்பதிவை கையாள்கிறார். நாயகியாக 'பிக் பாஸ்' புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கிறார்.
இப்படத்திற்காக 'காஸ்ட் அவே,' 'கோட் லைஃப்' போன்ற படங்களுக்கு இணையான அர்ப்பணிப்போடு தீக்ஷித் ஷெட்டி தன் உடலை வருத்தி தத்ரூபமாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகுந்த பொருட்செலவில் மலேசியாவில் நடந்து வருகிறது.
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'வருணன்- காட் ஆஃப் வாட்டர்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு!
யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி - சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'வருணன் - காட் ஆப் வாட்டர்'' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'வருணன் - காட் ஆஃப் வாட்டர்' திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை யு. முத்தையன் கையாள, கலை இயக்கத்தை பத்து கவனித்திருக்கிறார்.
'நீரின்றி அமையாது உலகு' எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 14ம் தேதி என்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் அன்புச்செழியன், இயக்குநர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா, 'ஆஹா' டிஜிட்டல் தளத்தின் தலைமை செயலாக்க அதிகாரி கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் அன்புச்செழியன் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினரும், வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் பெற்றுக் கொண்டனர்.
தயாரிப்பாளர் கார்த்திக் ஸ்ரீதரன் அனைவரையும் வரவேற்று பேசுகையில், ''இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து எங்களை அன்பு மழையில் நனைய வைத்த தயாரிப்பாளர் அன்புச்செழியன் அவர்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 'வருணன்' திரைப்படத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் திரைக்கதையை எழுதி நிறைவு செய்து விட்ட பிறகு எங்களையும் எங்கள் குழுவினரையும் இயக்குநரின் தந்தை தயாரிப்பாளர் அன்புச்செழியனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடம் முழு திரைக்கதையையும் சமர்ப்பித்தோம். அவர் முழுமையாக வாசித்து விட்டு, 'கதை நன்றாக இருக்கிறது. தயாரிப்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கிறேன்' என்றார். இப்படி சொன்னவுடன் எங்களுக்கெல்லாம் நம்பிக்கை பிறந்தது. அவருடைய வழிகாட்டுதலால் தான் இன்று நாங்கள் இந்த மேடையில் நிற்கிறோம். இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறிய முதலீட்டு திரைப்படங்களின் நிலை என்ன என்று அனைவருக்கும் தெரியும். இந்தத் தருணத்தில் எங்களுடைய படம் நன்றாக இருக்கிறது என்பதாலும், அவர் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவதற்காகவும் இந்த திரைப்படம் திரு. அன்புச்செழியனின் உதவியுடன் வெளியாகிறது. படத்தைப் பற்றி பகிர்ந்து கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இத்திரைப்படம் வரும் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
பாடலாசிரியர் ஹைடு கார்த்தி பேசுகையில், ''இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நானும் நடித்திருக்கிறேன். இசையமைப்பாளர் போபோ சசியின் ஆதரவால் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் கேங்க்ஸ்டர் பற்றிய 'கோளாறு' எனும் பாடலை நானே எழுதி, பாடியிருக்கிறேன். இந்த திரைப்படத்தில் ஐந்து நிமிட கால அவகாசத்திற்கு ஒரே ஷாட்டில் ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை நிச்சயம் கவரும்,'' என்றார்.
நடிகர் சங்கர் நாக் விஜயன் பேசுகையில், ''இந்தத் திரைப்படம் எங்களுக்கு நீண்ட நெடிய பயணம். நானும், இயக்குநரும் பால்ய காலத்து நண்பர்கள். அவர் குறும்படங்கள் இயக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே நன்கு அறிமுகம். அவர் இயக்கிய குறும்படங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நீ தான் நடிக்க வேண்டும் எனக் கூறினார். உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்திலிருந்து இதுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் பணிகள் தொடங்கிய முதல் நாளிலிருந்து அன்புச்செழியனின் ஆதரவு இருக்கிறது. அது தற்போது வரை தொடர்கிறது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் உச்சகட்ட சண்டைக் காட்சியில் நடித்த போது உண்மையில் பதட்டமாக இருந்தேன். அதை படமாக்கும் போது சண்டை பயிற்சி இயக்குநர் மற்றும் அவரது குழுவினர் எங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கி சிறப்பாக இயக்கினர். எங்களின் அழைப்பை ஏற்று இத்திரைப்படத்தை காண வந்ததுடன் இன்று வரை தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தின் நிர்வாகியான கவிதா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.
ஸ்ரீதர் மாஸ்டர் பேசுகையில், ''இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் 'ஆவ்சம் பீலு ' பாடலுக்கான உருவாக்கத்தின் போது இணைந்து பணியாற்றியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாடல் காட்சியில் நடிகர் ஜெயப்பிரகாஷின் வாரிசான துஷ்யந்த் பிரகாஷ் அற்புதமாக நடனமாடி இருந்தார். இந்த பாடலுக்கான புரமோவை தமிழகம் முழுவதும் தயாரிப்பாளர் விளம்பரப்படுத்தி இருந்தார். ஒரு பாடலுக்கான ப்ரோமோவையே விளம்பரப்படுத்துவதற்கு கடின உழைப்பை கொடுத்திருக்கும் தயாரிப்பாளர், இப்படத்தினை அனைத்து மக்களிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறார். இந்தப் படத்தினை இயக்குநர் ஜெயவேல்முருகன் அற்புதமாக இயக்கியிருக்கிறார். திரையில் தோன்றும் போது ராதா ரவி போன்ற மூத்த நடிகர்களின் உச்சரிப்பு எங்களைப் போன்ற ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அனைவருக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.
தற்போது ஒவ்வொருவருடைய வீட்டிலும் தண்ணீர் கேன் இல்லாமல் இருப்பதில்லை. அந்த தண்ணீர் கேனை வீட்டிற்கு எடுத்து வரும் நபர்களுக்கும் ஒரு பின்னணி உண்டு. இதுபோல் அனைத்து தரப்பினரையும், ரசிகர்களையும் தொடர்பு கொள்ளும் தண்ணீர் கேனை பற்றிய படம் என்பதால் நிச்சயம் வெற்றி பெறும்,'' என்றார்.
ஆஹா சிஇஓ கவிதா பேசுகையில், ''இந்த மேடையில் இருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். ஆஹா டிஜிட்டல் தளத்திற்கும், இந்த திரைப்படத்திற்கும் இடையேயான தொடர்பும், பயணமும் தொடங்கி ஒன்பது மாதங்கள் ஆகிறது. இப்படத்தின் ஸ்னீக் பீக்கை பார்த்ததும் சிறந்த படம் என கருதினோம். பார்ப்பதற்கு புதிதாகவும், இசை சிறப்பானதாகவும் இருந்தது. ஆஹா டிஜிட்டல் தளம் எப்போதும் புதிய, இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும். தமிழ் சினிமாவிற்கு இது முக்கியமான பங்களிப்பு என நாங்கள் கருதுகிறோம். சிறிய முதலீட்டு திரைப்படமாக இருந்தாலும் இப்படமும் பெரிய வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இப்படத்துடன் பயணிக்கிறோம். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா கைப்பற்றி இருக்கிறது.
படத்தின் இயக்குநரான ஜெயவேல் முருகன் புதுமுக இயக்குநர் போல் இல்லாமல் அனுபவமிக்க இயக்குநரை போல் அவருடைய படைப்பு இருந்தது. தண்ணீர் கேன் என்றொரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இப்படி ஒரு சிறப்பான படத்தை வழங்கி இருக்கிறார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
இசையமைப்பாளர் சபேஷ் பேசுகையில், ''இப்படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது ஏதோ ஒரு விஷயம் இருப்பது நிச்சயமாக தெரிகிறது. தண்ணீர் கேனை வைத்து கதை சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். எங்கள் குடும்பத்தில் ஒருவரான போபோ சசி இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் தர்ஷன் என்ற எங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் நடித்திருக்கிறார். இந்தப் படம் பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறேன்,'' என்றார்.
தயாரிப்பாளர் அன்புச்செழியன் பேசுகையில், ''வருணன் படத்தை பார்த்து விட்டேன். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் அனைவரது வீட்டிலும் வாட்டர் கேன் இருக்கும். அந்த தண்ணீர் கேனை வைத்து இயக்குநர் ஜெயவேல் முருகன் அற்புதமான படத்தை இயக்கியிருக்கிறார்.
ஜெயவேல் முருகன் எப்போதும் என் அலுவலகத்தில் இருப்பவர். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியீட்டிற்கு அவருக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். இது ஒரு சின்ன படம். ரிலீஸ் செய்வது கடினம் என்பது தெரியும். அவருடைய உழைப்பு மற்றும் அவருடைய குழுவின் உழைப்பு வீணாகக் கூடாது என்பதற்காகவும், இந்த இளைஞர்களின் கனவு நனவாக வேண்டும் என்பதற்காகவும், வரும் வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாகிறது. வருணன் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நிறைய ஓடிடி தளங்கள் இருந்தாலும் சினிமா வியாபாரம் என்பது சுமார் தான். இதுபோன்ற கடினமான காலகட்டத்தில் 'வருணன்' படத்தை வெளியிடுகிறார்கள். இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ''இந்த திரைப்படம் உண்மையில் ஒரு தரமான படம் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. இது சின்ன படம் என்கிறார்கள். இது சின்ன படமே இல்லை. இது பெரிய படம். இந்த திரைப்படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருந்தேன். ஏனெனில் கடினமாக உழைத்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். எல்லா பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அதிலும் பாடல்களில் சவுண்ட் புதிதாக இருக்கிறது. ரிதம் வித்தியாசமாக இருக்கிறது. இது ஒரு புது முயற்சி. இதற்காக போபோ சசிக்கு வாழ்த்துகள். ராதாரவி ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய வெற்றி படம். அந்த வகையில் இந்த படமும் வெற்றிப் படம் தான். இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில்,''இப்படத்தின் இயக்குநர் எடுத்திருக்கும் கதை தண்ணீர் கேன். இந்தப் பிரச்சனை 10 வருஷத்திற்கு முன்னாலும் இருந்தது இன்னும் 50 வருஷத்திற்கும் இருக்கும். இப்படத்தின் கதை அவுட்டேட்டட் அல்ல. அனைவருக்கும் நெருக்கமான கதை தான். இந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் ராதாரவி , ஜீவா ரவி, துஷ்யந்த் என அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கன்டென்ட் அனைவருக்கும் ரீச் ஆக வேண்டும் என்றால் இவர்களைப் போன்ற சிறந்த நடிகர்களால் தான் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியும். கதாசிரியர்கள் கதாபாத்திரத்தை எழுதினாலும்.. அதை உள்வாங்கி திரையில் நடிக்கக்கூடிய ஆற்றல் மிக்க நடிகர்கள் தேவை. இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் வழங்கி இருக்கிறார்.
காசை கொட்டிக் கொடுத்து ரிச் ஆக எடுத்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று இல்லை. இந்தக் குழுவினரிடம் பணம் இல்லை. ஆனால் நிறைய புத்திசாலித்தனம் இருந்தது. அத்துடன் தன்னம்பிக்கையும் இருந்தது. சில ஆண்டுகள் ஆனாலும் இந்த படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கை துளி அளவு கூட குறையவில்லை. படத்தை வெளியிடுவதற்காக குழுவினரின் புதிய முயற்சியை பாராட்ட வேண்டும்.
இப்படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவினரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இப்படம் அன்புச்செழியனின் ஆதரவுடன் வெளியாகிறது.
இப்படத்திற்காக பாடலை பாடி ஒத்துழைப்பு வழங்கிய ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கும், சைந்தவிக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் உச்சகட்ட சண்டை காட்சி நிச்சயம் வரவேற்பை பெறும். இது சின்ன பட்ஜெட் படம் அல்ல என்பதை இந்த காட்சி நிரூபிக்கும். ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்,'' என்றார்.
நடிகை ஹரிப்பிரியா பேசுகையில், ''நான் இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது. இதற்காக நான் தவம் இருந்திருக்கிறேன். நான் எந்த கோயிலுக்கு சென்றாலும் இந்த படம் வெளியாக வேண்டும் என்ற பிரார்த்தனையை செய்ய தவறுவதில்லை. இந்தத் திரைப்படம் எனக்கு மேஜிக் போன்றது. என்னைப் பொறுத்தவரை இந்த திரைப்படம் தான் ஸ்டார்ட்டிங் பாயிண்ட். என்னுடைய பயணம் இனிமேல் தான் தொடரப் போகிறது. இதற்காக இயக்குநர் ஜெயவேல் முருகனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு கே. பி. சாரை மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவருடைய உதவியாளரான ஜெயவேல் முருகனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
நான் யுவனின் தீவிர ரசிகை. நான் நடித்திருக்கும் காட்சிக்கு அவர் பாடியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு உதவிய மக்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை வெளியிடுவதற்கு உதவி செய்து கொண்டிருக்கும் அன்புச்செழியனுக்கும் நன்றி'' என்றார்.
நடிகர் கிருஷ்ணா பேசுகையில், ''இது எங்களுடைய ஃபேமிலி ஃபங்ஷன். என் தம்பி சங்கர் நாக் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து எல்லா விஷயமும் எனக்குத் தெரியும். என்னை பொருத்தவரை சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. ஓடும் படம்.ஓடாத படம் இந்த இரண்டு தான் இருக்கிறது. நல்ல கதை என்றால் அனைவரும் ஆதரிப்பார்கள். கதை நன்றாக இருந்தால் தான் ராதாரவி நடிப்பார். இந்த படத்தில் ராதாரவியும் நடித்திருக்கிறார். நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகர் ராதாரவி பேசுகையில், ''இந்த காலத்தில் எவ்வளவு வேகமாக இயங்க வேண்டும் என்பதை இந்த குழுவினரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்.
நான் இந்த படத்தில் இயக்குநரின் தந்தைக்காக நடிக்க ஒப்புக்கொண்டேன். அவர் பெயர் கருணாநிதி. எனக்கு மிகவும் பிடித்த பெயர் இது. அன்புச்செழியனின் அலுவலகத்தில் பணியாற்றுபவர். நான் அந்த வழியாக தினமும் கடந்து செல்வேன். அந்த நேரத்தில் கருணாநிதி இருந்தால் அலுவலகத்தில் அன்புச்செழியன் இருக்கிறார் என்று அர்த்தம்.
இப்படத்தின் ஹீ
இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகும் 'அந்தோனி'
“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது.
ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா - சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர்.
இத்திரைப்படத்தை கயல் வின்சன்ட் மற்றும் T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிருந்து அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு நாட்டினரும் சேர்ந்து நடிக்கிறார்கள்.
இத்திரைப்படத்தை “மணல்” என்கிற திரைப்படத்தினூடாக சர்வதேச விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்ய, அண்மையில் வெற்றி பெற்ற “சித்தா”திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான சுரேஷ் A. பிரசாத் படத்தொகுப்பு செய்ய கலை இயக்குனராக கலா மோகனும் பணியாற்றுகின்றனர். இத்திரைப்படமானது இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகிறது என்பது சிறப்பம்சமாகும்.
அதோடு இப்படம் ஈழத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாக்கப்படுகின்றது என திரைப்படக்குழு அறிவித்தருகின்றனர்
54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் படிப்பிடிப்பு ஜனவரி 2 அன்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் தொடங்கியது. சிறப்பான திட்டமிடலின் காரணமாக ஒரே ஷெட்யூலில் 54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. படப்பிடிப்பு மகளிர் தினத்தன்று நிறைவுற்ற நிலையில் குழுவிலுள்ள பெண்களுக்கும் மற்றும் அனைத்து மகளிருக்கும் 'அக்யூஸ்ட்' குழுவினர் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
சேலத்தை பின்னணியாக கொண்ட கதை என்பதால் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வாசலில் ‘அக்யூஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவுற்றது. உதயா, அஜ்மல், யோகிபாபு தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு தங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். பிரபல இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடமொன்றில் நடித்துள்ளார். தான் இயக்காத படமொன்றில் பிரபு சாலமன் நடிப்பது இதுவே முதல் முறை.
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவாவும் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றுள்ளார். பவன் எதிர்மறை வேடத்தில் நடிக்க, கன்னட திரையுலகின் முன்னணி வில்லன் நடிகர் பிரபாகர் ‘அக்யூஸ்ட்’ படத்தில் மிரட்டியுள்ளார். 90களில் மிகவும் புகழ்பெற்ற ஓ மரியா புகழ் டானி நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்துள்ளார். சுபத்ரா, தீபா பாஸ்கர், ஶ்ரீதர், பன்னீர்செல்வம், யூடியூப் புகழ் திவாகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மும்பை நடிகை சயந்திகா முக்கிய வேடத்தை ஏற்று தமிழில் அறிமுகம் ஆகிறார்.
நரேன் பாலகுமார் இசையில் மூன்று முத்தான பாடல்கள் இப்படத்தில் இடம்பெறும் நிலையில், முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். பிரபல ஆக்ஷன் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா கைவண்ணத்தில் மூன்று பரபரப்பு சண்டைக் காட்சிகள் 'அக்யூஸ்ட்' படத்தில் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும்.
இதில் ஒரு சண்டைக்காட்சிக்காக 'அக்யூஸ்ட்' தயாரிப்பாளர்கள் சொந்தமாக பேருந்து ஒன்றை வாங்கினர். சுமார் 45 ஃபைட்டர்கள், 60 துணைக் கலைஞர்களுடன் உதயாவும் அஜ்மலும் பங்கேற்ற ஸ்டண்ட் காட்சி சென்னைக்கு அருகே படமாக்கப்பட்டது. மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பு அனுமதி பெற்று 'அக்யூஸ்ட்' திரைப்படம் சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் படமாக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைந்து நடைபெற்று கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் ‘அக்யூஸ்ட்’ வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார். அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர்.
மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாளுகிறார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.
15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'
சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் பல இனிமையான தருணங்களை உருவாக்கி, என்றென்றைக்குமான காதல் கதையாக நிலைத்து நிற்கிறது.
15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்த படம், இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தப் படத்தை சிறப்பானதாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.
இந்த சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர். மற்றும் வி.டி.வி கணேஷ், ஒரு காணொளியில் தோன்றி, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர்.
நடிகர் சிலம்பரசன் டி.ஆர் கூறியதாவது…
“விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வந்து, 15 ஆண்டுகள் நிறைவடைந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தை அதன் வெளியீட்டின் போதும், இன்றும் மிகப்பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு என் நன்றிகள். கௌதம் மேனன் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்.”
நடிகை திரிஷா கூறியதாவது…,
“விண்ணைத்தாண்டி வருவாயா எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகும். இந்தப் படம் என் மனசுக்கு மிகவும் நெருக்கமானது. இதைப் படமாக்கிய கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எனது நன்றி. இப்படம் இன்னும் பலரின் அன்பினால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின் போது நாங்கள் கடந்து வந்த அத்தனை தருணங்களும், மிக மிக அழகான நினைவுகள். படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். மேலும் இந்தப் படத்தை இன்றும் கொண்டாடும் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்.”
கௌதம் மேனன் கூறியதாவது…
“சில திரைப்படங்கள் 10, 15, 25 ஆண்டுகள் நிறைவடையும் போது அதைப் பற்றி பேசுவது வழக்கம். ஆனால், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பற்றி பேசும்போது எனக்கு உணர்ச்சிப் பூர்வமான, மிக ஆழமான உணர்வு தோன்றுகிறது. பலரும் என்னை சந்திக்கும் போது, இன்னும் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரங்களை நினைவுகூர்கிறார்கள். சிம்பு இல்லையெனில் இந்தக் கதையில் அந்த மேஜிக் நிகழ்ந்திருக்கும் என நான் நிச்சயமாக சொல்ல முடியாது. அத்தனை சிறப்பாக அவர் அந்தக் கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் அவருக்கு என் நன்றி. திரிஷா என்னிடம் இந்தப்படத்தின் வில்லன் நான் தான், என்னை மக்கள் வெறுப்பார்கள் என்றார். நான் அதற்கு ரசிகர்கள் உங்களை அடிக்கக் கூட கூடும், ஆனால் இந்தப்படத்திற்குப் பிறகு மக்கள் உங்களை நேசிப்பதை நிறுத்தவே மாட்டார்கள் என்றேன். இந்தப் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், படத்தை உருவாக்கிய ஒவ்வொரு தருணங்களிலும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை, இந்தக் கதையில் ஒரு மிகப்பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தியது. மனோஜின் காட்சியமைப்பும், ஆண்டனியின் எடிட்டிங்கும் இந்தப் படத்தை மனதிற்கு மிக நெருக்கமான படைப்பாக மாற்றின.”
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆர்எஸ் இன்ஃபோட்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்தன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை விநியோகிக்க, இப்படம் மாபெரும் வெற்றியை ஈட்டியது.
மேலும் இந்நிகழ்வில் இந்தப் படத்திற்கான அற்புதமான பாடல்களைப் பாடிய பாடகர்கள் அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், சோனி மியூசிக் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஒரு சிறப்பு ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளனர். lovefullyvtv.com எனும் இணையதளம் அனைத்து வி.டி.வி ரசிகர்களையும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறச் செய்கிறது. இந்த தளம் மூலம் அனைத்து விடிவி பட ரசிகர்களும் படத்தின் சிறப்பு தருணங்களை, படக்குழுவினரின் அனுபவங்களை, படப்பாடல்களை கேட்டும் பார்த்தும் அனுபவிக்கலாம்.
எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா
பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசியதாவது :
முதலில் தயாரிப்பாளர் கவிதா பேசும்போது:
எனக்கு இந்த மேடை புதியதல்ல. எடுத்தவுடனேயே தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. இதற்கு முன்பு 3 குறும்படம் எடுத்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மேடையில் இருப்பவர்கள், முன்னாடி இருப்பவர்கள், மேடைக்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் இருந்திருக்கீர்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
விமர்சனங்களும் வரவேற்பும் ஒருவரை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும். அதுபோல் என்னை ஊக்குவித்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. எப்போதும் கனவு இருக்க வேண்டும். அந்த கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும், நிறைய போராட வேண்டும். ஊடகத் துறை எனக்கு 22 வருடத்திற்கான உழைப்பை கொடுத்திருக்கிறது.
தியாகராஜன் சாரிடம் ஆரம்பித்து நான் பலரின் வழிகாட்டுதலில் வளர்ந்திருக்கிறேன். பாக்யராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் மேடைக்கு மேடை என்னைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். என் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு எப்படி உறுதுணையாக இருந்து இந்தளவிற்கு கொண்டு வந்தார்களோ, அதேபோல் இந்த மேடையில் இருப்பவர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
தியாகராஜன் சார் வீட்டில் தான் நான் வளர்ந்தேன். எந்த ஒரு நல்லதாக இருந்தாலும் அவர் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. கனடாவில் இருந்தாலும் ரம்பாவும் நானும் நெருக்கமாக தான் உள்ளோம். ரம்பாவின் அம்மா ஒரு இனிப்பு பண்டம் இருந்தாலும் வீட்டிற்கு வா என்று அழைப்பார்கள். என்னை பத்திரிகையாளராக பார்க்காமல் அவர்கள் வீட்டில் இடம் கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
ஒரு ஊழியர் என்ன முயற்சி எடுத்தாலும் எந்த நிறுவனம் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கும்? நான் முதன் முதலில் குறும்படம் எடுக்க நினைத்த போது, பத்திரிகையாளராக வந்தோம், சென்றோம், வேலையைப் பார்த்தோம் என்றில்லாமல் நான் குறும்படம் எடுக்க போகிறேன் என்று என் பாஸிடம் கூறினேன். உடனே ரூ.20 ஆயிரம் கொடுத்து ஊக்குவித்தது தினமலர் தான். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறியாக வேண்டும். குழந்தைகளுக்கான பாலியல் விஷயத்தை மையமாக வைத்து சாக்லேட் என்ற குறும்படம் தயாரித்தேன். 2 வதாக தென் மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகளின் பிரச்சினையை மையமாக வைத்து கொலை விளையும் நிலம் என்ற டாக்குமென்டரி படத்தை தயாரித்தேன். அப்படத்தை விகடன் செய்தியாளராக இருந்த ராஜீவ் காந்தி இயக்கினார். அடுத்து 'எண்ணம் போல் வாழ்க்கை' இது கொரணா காலத்தில் ஆல்பம் பாடலாக தயாரித்தேன். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா U1 ரெகார்ட்ஸ் மூலம் வெளியிட்டார். சுமார் 20 கலைஞர்கள் பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் உதவி புரிந்தார்கள். தொடர்ந்துநடிகர் ஜனகராஜ் அவர்கள், 700 படங்கள் நடித்திருக்கிறார். அவரிடம் தாத்தா என்ற குறும்படத்தின் கதையை நரேஷ் இயக்குனர் கூறினார்.. ஜனகராஜ் சாரிடம் இந்த கதையில் நீங்கள் நடிக்கவில்லை என்றால், நான் அப்படியே எடுத்து வைத்து விடுவேன் என்று நான் கூறிய பிறகு ,அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. வரவேற்பை பெற்றது.
இந்த சமயத்தில், சென்சார் போர்டு உறுப்பினராக வாய்ப்பு கிடைத்தது அதையும் என் பாஸிடம் கூறினேன். அவர் அதற்கும் எனக்கு உறுதுணையாக இருந்தார். பிறகு சென்சார் போர்டு உறுப்பினர் ஆனேன்.
அதன் பிறகு, எல்லா ஊர்களுக்கும் ராஜா சார் வந்து விட்டார். ஆனால், எங்கள் ஊருக்கு மட்டும் வரவில்லை. ராஜா சாரை எங்கள் ஊர் மக்களுக்காக அழைத்து வர வேண்டும். அவரை வைத்து எங்கள் ஊரில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கூறினேன். அதற்கும் தினமலர் மீடியா பார்ட்னராக இருந்து பெரும் உதவி புரிந்தது.
என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் தினமலர் நிறுவனமும் இங்கிருக்கும் அத்தனை பேரும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
நான் ஒரு படம் தயாரித்து இருக்கிறேன். அந்த விழாவிற்கு தினமலர் சார்பாக நீங்கள் வரவேண்டும் என்று பாஸிடம் கேட்டபோது 38 ஆண்டுகளாக ஊழியராகஇருந்து இப்போது முதன்மை மக்கள் தொடர்பாளராக இருக்கும் கல்பலதா வை அழைத்து செல் என்று கூறினார்கள். இவர் என்னுடைய குறும்படத்திற்கும் சிறப்பு விருந்தினராக வந்தார் அவருக்கும் மிக்க நன்றி.
ராபர் படத்தை எடுத்துக் கொண்டால், ஆனந்த் மற்றும் இப்படக் குழுவினரை விதார்த் மூலமாக தான் தெரியும். ஒரு சிறிய படம் தான் மக்கள் இடையே பெரிய விமர்சனத்தையும் வியாபார ரீதியான வளர்ச்சியையும் கொடுக்கிறது. இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் இப்படத்தை நான் எப்படி கொண்டு சேர்க்கப் போகிறேன்? எப்படி வெற்றியடைய வைக்கப் போகிறேன் என்று மிகவும் கண்கலங்குவார்கள். ஒரு படம் தயாரித்து வெளியிடுவதில், கலைஞர்களை அழைப்பதில் இருந்து, நிகழ்ச்சி வடிவமைப்பு சமூக வலைத்தளங்களில் கொண்டு சேர்ப்பது என்று அந்த படம் வெளியாகும் வரை எவ்வளவு வேலைகள் பின்னால் இருக்கிறது?. பெரிய படம், பெரிய நடிகர்கள் என்றால் நாம் செய்திகளை சேகரிப்போம் ஆனால் ஒரு சிறிய படத்திற்கு யார் இதை செய்வார்கள்? அந்த வகையில், ராபர் படம் பெரிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது. ஆகையால், இனி சிறிய படத்திற்கு நான் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
ராபர் படம் மட்டுமல்லாது இனி அடுத்தடுத்து நிறைய படங்களோடு பயணிக்கப் போகிறோம். நாம் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அதில் உழைப்பும், உண்மையும்,உறுதி யாக இருந்தால் நாம் நினைத்த இலக்கை அடையலாம் என்ற மிகப்பெரிய அனுபவத்தை இந்த படம் எனக்கு கொடுத்திருக்கிறது.
பெண்கள் தானே என்று யோசித்துக் கொண்டே இருந்தால் அதே இடத்தில் தான் இருக்க வேண்டும். எந்த பக்கமும் திரும்பாமல், நம்முடைய பயணம் என்ன? அடுத்த அடி என்ன? எதை நோக்கிப் போக போகிறோம்? என்பதை யோசித்தால் எந்த தடங்கலையும் சந்திக்க வேண்டியதில்லை. நம்முடைய பாதையும் பயணமும் வெற்றியை நோக்கி மட்டும் தான் போகும். இந்த துறைக்கு நிறைய பெண்கள் வந்திருக்கிறார்கள் இருப்பினும் இன்னும் நிறைய பெண்கள் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நிறைய சிறிய படங்களுக்கும், புதிய படங்களுக்கும், புதிய நபர்களுக்கும் பாக்யராஜ் சார் ஆதரவாக இருக்கிறார். பாக்யராஜ் சாரை பார்த்து சினிமாவிற்கு வந்தவர்கள் நிறைய பேர். சாருடைய படத்திற்கு போக வேண்டும் என்றால் அவர் நன்றாக நடிப்பாரா?! டான்ஸ் ஆடுவாரா?! என்று எதையும் பார்க்க வேண்டாம். கதை நன்றாக இருக்கிறது என்ற ஒரு காரணத்தினால் படம் பார்க்க அத்தனை பேர் வந்தார்கள்.
தியாகராஜன் சார் சினிமாவிற்கு வந்த போது எத்தனை பேர் மிரண்டு போனார்கள்?! அதிக படங்களில் வில்லனாக நடித்து பேர் வாங்கிய ஒரே கதாநாயகன் தியாகராஜன் சார் தான். அம்பிகா மேடம், ராதா மேடம் கொடுக்காத வெற்றிகள் இங்கு கிடையாது. அழகிய லைலாவாக ரம்பாவை போல் யாரால் சிறப்பாக நடித்திருக்க முடியும்?! இவர்கள் அனைவரும் இந்த மேடைக்கு வந்து சிறப்பித்து இருக்கிறார்கள்.
இந்த படம் மூலம் நான் ஒரு புதிய அடியை எடுத்து வைத்திருக்கிறேன். இந்தப் பயணமும் நிச்சயமாக ஒரு பாதையை போட்டு கொடுத்திருக்கிறது. உங்கள் துணையோடு இந்த பாதையில் பலரை கைபிடித்து அழைத்துச் செல்வேன்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் என்னுடைய ஊர் காரர். அவரிடம் எப்போது வேண்டுமானாலும் உரிமையோடு போன் செய்து பேசுவேன். எல்லா படமும் நல்ல படம் என்று சொல்கிறீர்களே?! அப்போது நல்ல படம் என்றால் என்ன என்று சில சமயம் மிரட்டி கூட இருக்கிறேன். ஒவ்வொரு படத்தை பற்றியும் அபிப்ராயம் கேட்பார். சில படங்கள் சென்சார் போர்டு முன் கூட்டியே பார்த்துவிட்டால் நானே அழைத்து படம் நன்றாக இருக்கிறது என்று கூறுவேன்.
இங்கிருப்பவர்கள் அனைவரும் சிறிய படத்திற்கு உதவி செய்பவர்கள் தான். என்னோடு பயணித்து எனக்கு பாதை போட்டு கொடுத்தவர்கள். என்னுடைய இந்த அழகான பயணத்தில் இன்னும் பலரை அழைத்து செல்ல ஆசைப்படுகிறேன். நான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தாலும், புது முயற்சிகள் எடுத்தாலும் இங்குள்ள பத்திரிகையாளர்களிடம் புகைப்படம், காணொளி மற்றும் செய்திகளை வெளியிட்டு அனுப்புங்கள் என்று உரிமையோடு கூறுவேன். அவர்களும் மறுநாளே எனக்கு அனுப்பி விடுவார்கள். அந்த பாசத்திற்கு ஈடு இணை கிடையாது. அக்காவாக தங்கையாக தோழியாக எனக்கு ஆதரவைத் தரும் அனைவருக்கும் நன்றி. என்னுடைய எல்லா நல்லது கெட்டதிலும் என் அம்மா என்னுடனே இருந்திருக்கிறார்கள். எனது கணவர் குழந்தைகள் மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் நன்றி. இவர்களுடைய ஆதரவு இல்லை என்றால், பிரச்சினைகள் போராட்டங்களை தாண்டி ஒரு பெண்ணால் தனித்து நின்று சாதிக்க முடியாது. அதேபோல், தைரியம், தன்னம்பிக்கை, துணிவு, உண்மை இந்த சக்தி பெண்களிடம் இருந்தாலே ஜெயித்து விடலாம். வந்திருந்த அனைவருக்கும் நன்றி. ராபர் படம் வெற்றியடைய வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் ஸ்டில் பாண்டி பேசும் போது,
என்னை சினிமா துறைக்கு முதன்முதலாக கைப்பிடித்து அழைத்து வந்த ஸ்டில்ஸ் ரவி அவர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்திற்காக இயக்குனர் என்னை அணுகினார். இப்போது கதாநாயகன் கதாநாயகி அப்பா பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு மீண்டும் போலீஸ் கதாபாத்திரம் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். ஆனால் இயக்குனர், முதலில் கதை கேளுங்கள் என்று கூறினார். கதையைக் கேட்ட பின்பு மாறுபட்டு போலீஸ் கதாபாத்திரமாக இருக்கும். அதே நேரத்தில், ஜே பி சாருடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு இருந்ததால் ஒப்புக்கொண்டேன்.
ஸ்ரீ இயக்கிய தர்மம் என்ற குறும்படம் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. தேசிய விருது வென்றது. அதன் பிறகு அவர் மண்டேலா படம் மூலமாக இயக்குனராக விட்டார். அடுத்து புன்னகை வாங்கினால் தண்ணீர் இலவசம் என்ற குறும்படத்தை நிதிலன் இயக்கினார். அந்த குறும்படத்திற்கு நாளைய இயக்குனரில் சிறந்த படத்திற்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது எனக்கு கொடுத்தார்கள். அவரும் இயக்குனராகி குரங்கு பொம்மை, மகாராஜா வரை வந்துவிட்டார். என்னுடைய மகன் இலன் என்னை வைத்து தான் முதல் குறும்படம் எடுத்தார். Stills ரவியிடம் பணியாற்றும் போது நடிகனாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. தியாகராஜன் சார் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறேன். பாக்யராஜ் சார் வீட்டிற்கு புகைப்படங்கள் கொடுப்பதற்கு சென்றிருக்கிறேன். மிகவும் பெருமையாக இருக்கும். சில நேரங்களில் கேமராவை விட்டுவிட்டு நடிக்க சென்று விடுவேன். அப்போது ரவி சார் என்னை திட்டுவார். சில சமயங்களில் அடி கூட வாங்கி இருக்கிறேன். பிறகு அவரே நடிக்க ஊக்குவித்தார். ஒருமுறை கேமராவை விட்டு தலையை வெளியே எடுத்து நீ நடிகனாகி விடுவாய் என்றார். நானும் புகைப்படம் எடுப்பாளராக அங்கிருந்து தான் இந்த மேடைக்கு வந்துருக்கிறேன். என் மகனும் இயக்குனராகிவிட்டார்.
நான் புகைப்படம் எடுக்கும் போது என்னை இப்படி யார் எடுப்பார்களா என்று நினைத்திருக்கிறேன். இன்று அது நடந்து விட்டது. ராபர் படத்தில் காவல் துறை அதிகாரியாக நன்றாக நடித்திருக்கிறேன். படமும் நன்றாக வந்திருக்கிறது. சகோதரி கவிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது புகைப்படம் எடுத்திருக்கிறேன். இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் பலர், அடைபவர்கள் சிலர். ஆகையால், முயற்சி செய்து கொண்டே இருங்கள். என்றாவது ஒருநாள் உங்களுக்கான மேடை கிடைக்கும் என்றார்.
நடிகை தீபா பேசும்போது,
இந்த படத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எழுதுவதில் தான் நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு தாய் தன் மகனுக்கு தாய்ப்பால் ஊட்டி வளர்ப்பா ளோ அதே தாய் மகன் தடம் மாறினால் என்ன செய்வாள் என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதை இந்த படத்தில் அழுத்தமாக கூறியிருக்கிறார்கள்.
இந்த கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனருக்கு நன்றி. பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் இருக்கும் மேடையில் நான் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கணவருக்கு அம்பிகா மேடத்தை மை மிகவும் பிடிக்கும் என்றார்.
இசையமைப்பாளர் ஜோகன் பேசும்போது,
கண்டு நேசிப்பவர்களை விட காணாமல் நேசிப்பவர்கள் பாக்கியவான் என்று கூறுவார்கள். அதுபோல இங்குள்ளவர்களின் படங்கள், பாடல்கள், சூழ்நிலைகள், நடிப்பு என்று சிறுவயதிலிருந்தே எங்களுக்கு ஊக்கமளித்தது. இங்கு வந்து எங்களை வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்தை வெளியிடும் சக்தி அண்ணனுக்கு நன்றி.
கவிதா என் உடன்பிறவா சகோதரி. அவர் எடுத்த முதல் குறும்படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார். அதிலிருந்து சிறிய படம், பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல் ஆதரவாக இருக்கிறார். நீண்ட கால நண்பர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் இயக்குனர் பாண்டிக்கும் நன்றி. இசையைக் கேட்டு பாடல்களுக்கு கருத்து கூறுங்கள். இன்று சிம்பொனி இசையமைக்கும் ராஜா சாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
நடிகர் சத்யா பேசும்போது
நான் பாலு மகேந்திராவின் மாணவன். அவர் தான் என்னை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இன்று என்னுடன் அவர் இல்லை. ஆனால், தியாகராஜன் சார், பாக்யராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் இந்த மேடையில் இருக்கிறார்கள். இவர்கள் மூலமாக பாலுமகேந்திரா சாரை பார்க்கிறேன். அவரிடம் நடிப்பு கற்றுக் கொண்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கியிருக்கிறேன். ஆனால், பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. கவிதா அக்கா சிறுவயதில் டியுஷன், பள்ளி, கல்லூரி அனைத் திலும் சேர்த்து விட்டார். பாலுமகேந்திரா சாரிடமும் மாணவராக அவர் தான் அறிமுகப்படுத்தினார். அதேபோல், அக்கா தான் ஆனந்த் அண்ணாவிடமும் இவன் என்னுடைய தம்பி, உபயோகப்படுத்த முடிந்தால் உபயோகப்படுத்தி கொள் என்றார். அதன்பிறகு, மெட்ரோ படத்தில் எதிர்மறையான பாத்திரம் கொடுத்தார். கோடியில் ஒருவன் படத்தின் போது, ராபர் படத்தைப் பற்றி ஒரு வரி கூறினார். எனக்காகவும், அவருடைய இணை இயக்குனர் பாண்டிக்காகவும் எழுதப்பட்ட கதை தான் ராபர்.
மார்ச் 14 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. சக்தி அண்ணா கிடைத்தது எங்களுக்கு மிகப்பெரிய வரபிரசாதம். சிறிய படம், பெரிய படம் என்று பார்க்காமல் நல்ல படத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார். இப்பவும் என் வீட்டில் சினிமாவில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,
அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம்,
"'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்குப் பிறகு இன்னும் பெரிதாக என்ன செய்யலாம் என்று நாங்கள் காத்திருந்தபோது வந்த படம் தான் 'பெருசு'. இளங்கோவுக்கு அதற்கு நன்றி. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16ஆவது படம் இது. அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதை இந்த சுவாரசியமாகவும் முகம் சுழிக்காத விதமாகவும் எடுப்பார்கள். இந்த விஷயங்களை 'பெருசு' படத்தில் உடைத்து சிறப்பாக கொண்டு வந்திருக்கிறோம். அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம். இதை சாத்தியப்படுத்தி கொடுத்த இளங்கோவுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. எங்களுடன் இணைந்து பவேஜா ஸ்டுடியோஸூம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். உங்கள் ஆதரவு தேவை".
எழுத்தாளர் பாலாஜி,
“எழுத்தாளராகத் திரைப்படங்களில் இதுதான் எனக்கு முதல் படம். இதற்கு முன்பு நான் வெப்சீரிஸில் எழுதியிருக்கிறேன். அடல்ட் காமெடி என்றாலும் பார்க்கும் யாரும் முகம் சுழிக்கும்படியாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக கதை எழுதியிருக்கிறோம். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”
நடிகை தனலட்சுமி,
“படத்தில் என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு பெரிய வாய்ப்பு. என்னைப் பல பேர் ‘நக்கலைட்ஸ் மூலம் பார்த்திருப்பார்கள். காமெடி கதாபாத்திரத்தில் தான் இதுவரை நிறைய பேர் என்னைப் பாத்திருப்பீர்கள். ஆனால், இதில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் வளர்ந்திருக்கிறேன். சாவு என்பது எல்லோராலும் தவிர்க்க முடியாதது. அந்த யதார்த்தத்தை இந்த படம் சொல்லியிருக்கிறது”.
நடிகர் சுவாமிநாதன்,
“இயக்குநர் சுந்தர்.சி எப்படி படத்தை ஜாலியாக எடுப்பாரோ அதேபோல இளங்கோவும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுப்பார். வைபவ், முனீஷ்காந்த், கிங்க்ஸி, பாலசேகரன், தனலட்சுமி, சுனில் என எல்லோரும் இயல்பாக சிறப்பாக நடிப்பில் பின்னியிருக்கிறார்கள். குடும்பத்துடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம் இது” என்றார்.
நடிகர் கஜராஜ்,
“எனக்கும் காமெடி வரும் என நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர் ராமுக்கும் நன்றி. என் பையனும் நன்றாக நடித்திருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். மக்கள் நீங்களும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டிக் கொள்கிறேன்”.
நடிகர் கருணாகரன்,
முதல்முறையாக எனக்கு ஒரு கதையை இயக்குநர் சொல்லவில்லை. தயாரிப்பாளர், நடிகர் வைபவ் என மற்றவர்கள்தான் கதை சொன்னார்கள். அருமையான படமாக வந்திருக்கிறது. தனலட்சுமி அம்மா, சுவாமிநாதன் சார், சுனில், கிங்க்ஸ்லி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கிரேஸி மோகனின் அந்த டச் படத்தில் இருக்கும். ஜாலியான காமெடி படத்தில் நடித்தது மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் முனீஷ்காந்த்,
“இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழு என அனைவருக்கும் நன்றி. கார்த்திக் சுப்புராஜ் சாரிடம் அப்பாயின்மெண்ட் கேட்டிருந்தேன். அவர்தான் வைபவ் சார் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அடல்ட் படம் என்று இதை சொன்னாலும் கதையில் எந்த முகாந்திரமும் அதற்கானதாக இருக்காது. நல்ல படமாக வந்திருக்கிறது”.
நடிகர் கிங்க்ஸ்லி,
“இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. எல்லாரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். கருணாகரன் மீட்டரை மிஸ் செய்யாமல் சிறப்பாக நடிப்பார். கார்த்திக் சுப்புராஜின் அப்பாவுக்கும் நன்றி. தனலட்சுமி அக்கா, தீபா அக்கா இருவரும் படத்திற்கும் பெரும் பலம். சாந்தினி, நிஹாரிகா எல்லாரும் சூப்பர் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். நன்றி”.
நடிகர் பால சரவணன்,
“இந்தப் படத்தின் கதையை கேட்டதும் எப்படி படமாக்கப் போகிறார்கள் என்று ரொம்ப யோசித்தேன். அடல்ட் காமெடியை எல்லோரும் பார்க்கும்படி முகம் சுழிக்காத வண்ணம் படமாக்கியுள்ளார் இயக்குநர். இந்தப் படம் என் கரியரிலும் முக்கியமான படமாக இருக்கும். வாய்ப்பு தந்த கார்த்திக் சுப்புராஜ் சாருக்கும் நன்றி. எங்கள் அனைவரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத அனுபவமாக இந்தப் படம் இருக்கும். கார்த்திக் சுப்புராஜ் எல்லோருக்கும் ஃப்ரீடம் கொடுத்தார். ’பெருசு’ நின்னு பேசும்”.
நடிகை சாந்தினி,
“இந்த வருடம் எனக்கு பெரிதாக அமைந்துள்ளது. மூன்றாவது படம் எனக்கு ரிலீஸ் ஆகிறது. சத்தியமாக இதுபோன்ற கதை இதற்கு முன்பு வந்தததில்லை. எப்படி இப்படி ஒரு கதையை இயக்குநர் யோசித்தார் என்பது ஆச்சரியம்தான். இந்தப் படம் வேலை பார்த்தபோது ஜாலியாக வேலை பார்த்தோம். அதற்கு முக்கியக் காரணம் நடிகர்கள்தான். ஷூட்டிங் முழுக்க சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்கள். எல்லா நடிகர்களும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டோம். தனலட்சுமி மேம் வேற லெவலில் நடித்துள்ளார். படத்தில் என்ன பெருசு என்பதை மார்ச் 14 அன்று திரையரங்கில் வந்து பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக குடும்பமாக வந்து பார்க்கலாம்” என்றார்.
நடிகை நிஹாரிகா,
“பாலாஜி சாருக்கு முதலில் நன்றி. அவர்தான் என்னை இந்தக் கதையை என்னிடம் சொன்னார். கார்த்திக் சுப்புராஜ் சாருடன் வேலை பார்த்தது எனக்கு பெருமை. நான் ஸ்கூல், காலேஜ் படித்த காலத்தில் இருந்து பார்த்து வளர்ந்த நடிகர்களுடன் சேர்ந்து நான் நடித்திருப்பது மகிழ்ச்சி”.
விநியோகஸ்தகர் சக்திவேலன்,
“இந்த வருடம் ‘பெருசு’ படத்துடன் ஸ்டோன் பெஞ்ச்சுக்கு பாசிட்டிவாக தொடங்கும். ‘பெருசு’ நிச்சயம் பெரிய வெற்றி பெறும். ஸ்டோன் பெஞ்ச் மிகவும் விருப்பதுடன் படம் செய்யக்கூடியவர்கள். நல்ல சினிமாவை ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது தனி உற்சாகம். ’பெருசு’ படம் தொடங்கும்போதே பெரிய ட்விஸ்ட் இருக்கும். அதிலே நான் ஷாக் ஆகிவிட்டேன். படம் எடுத்துக் கொண்ட கதை எந்த இடத்திலும் முகம் சுழிக்க வைக்காது. தனலட்சுமி அம்மா எல்லாம் நமக்கு இன்னொரு மனோரம்மா மாதிரி. இவங்களும் தீபாக்காவும் செம காம்பினேஷன். எல்லா நடிகர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும்”.
இயக்குநர் இளங்கோ ராம்,
“படத்தை நல்லவிதமாக கொண்டு போய் சேர்க்க நல்ல பேனர் கொண்ட தயாரிப்பாளர்கள் முக்கியம். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. ‘ஆண்பாவம்’, ‘இன்று போய் நாளை வா’ போன்ற எண்பதுகளில் வந்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுபோல, குடும்பத்துடன் வந்து ஜாலியாக பார்க்கும்படியாக இந்தப் படம் இருக்கும். வைபவ்- சுனில் இந்த கதைக்கும் மிகப்பொருத்தமாக இருந்தார்கள். தனம், சுவாமிநாதன், கஜராஜ், தீபா என எல்லாரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். எந்த இடத்திலும் முகம் சுழிக்க மாட்டீர்கள். நல்ல டீம் எனக்கு கிடைத்துள்ளது”.
நடிகர் வைபவ்,
“குடும்பத்துடன் பார்க்கும்படியான சூப்பராக கதையாக வந்துள்ளது. மார்ச் 14 நீங்கள் திரையரங்கில் பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும். தனம் அம்மா நடிப்பில் பின்னியிருக்கிறார். கஜராஜ், ரெடின், முனீஷ்காந்த் எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் செம ஜாலியாக சென்றது. உங்களைப் போலவே நானும் படம் பார்க்க ஆவலாக உள்ளேன். என் அண்ணன் கூட முதல் முறையாக சேர்ந்து நடித்திருக்கிறேன். நன்றி”.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,
“நானும் ராம் சாரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். அவர் நல்ல படங்கள் வந்தால் என்னிடம் சொவ்லார். அப்படித்தான் ‘கூழாங்கல்’ படம் நாங்கள் பிரசண்ட் செய்வதாக இருந்தது. சில காரணங்களால் அது மிஸ் ஆனது. பின்பு ராம் சார் சொன்ன படம் தான் இந்த ‘பெருசு’. மற்றவர்களை சிரிக்க வைப்பது கடினமான விஷயம். பாலாஜி சிறப்பாக செய்திருக்கிறார். கதையின் முக்கியமான விஷயமே நடிகர்கள்தான். நானும்தான் வைபவ்வும் அவரது அண்ணனும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். சமீபத்தில் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் குடும்பத்துடன் நிச்சயம் பார்க்கலாம். நகைச்சுவையுடன் சேர்ந்து எமோஷனும் கதையில் இருக்கும். தனலட்சுமி மேம் சூப்பராக நடித்திருந்தார். சுவாமிநாதன், அப்பா, கருணா, கிங்க்ஸ்லி, முனீஷ்காந்த், சாந்தினி, நிஹாரிகா, சுனில் எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சரியாக எழுதப்பட்ட கதை இது. உங்கள் ஆதரவு தேவை” என்றார்.
பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் திரைத்துறையில் 20 வருடங்களைக் கடந்திருக்கிறார். இதனைக் கொண்டாடும் வகையில் அவர் நடித்த பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மீண்டும் புதுப்பொலிவுடன் மார்ச் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
எடிட்டர் மோகன் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், 2003 ஆம் வருடம் ரவி மோகனை திரைக்கு அறிமுகப்படுத்திய படம் ஜெயம். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து திரையுலகில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதர்கடுத்த ஆண்டு 2004 ல் இதே கூட்டணியில் வெளியான
“எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. அதிரடி ஆக்ஷன் படமான இப்படத்தை தியேட்டர்களில் மக்கள் கொடுத்த ஆர்பாட்ட ரியாக்ஷன் மறக்க முடியாதது. இந்த வெற்றி ரவிமோகன்-மோகன்ராஜா இருவர் காம்பினேஷனுக்கும் இன்றைக்கும் பெரும் வரவேற்ப்புள்ளது.
இதில் முதலில், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி புத்தம் புதிய பொலிவுடன் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.
நவீன உயர்தர 4K டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், 5.1 அட்மாஸ் சவுண்ட் அமைப்பில், மார்ச் 14ம் தேதி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும்.
- உலக செய்திகள்
- |
- சினிமா