சற்று முன்

'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |   

சினிமா செய்திகள்

யாதும் மாத இதழை தொடங்குகிறார் சூர்யா!
Updated on : 26 April 2016

"யாதும்" என்ற சுற்றுச்சூழல் அக்கறையோடு இயங்கவுள்ள மாத இதழ் ஒன்றைத் தொடங்குகிறார் நடிகர் சூர்யா. இதற்கான விழா எதிர்வரும் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.



 



இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:



 



"மதிப்புக்குரியவர்களுக்கு, 'யாதும் ஊரேவின்' பசுமை வணக்கங்கள்.



 



மாமழையில் மனிதம் துளிர்த்தது. சமீபத்திய மழை வெள்ளம், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையை, ஒரு மாற்றத்தை நமக்குள் கொண்டு வந்துள்ளது. தன்னெழுச்சியாக ஏராளமான தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் இறங்கினார்கள். அத்தகைய தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில், அகரம் ஃபவுண்டேசன் உருவாக்கிய 'யாதும் ஊரே’ திட்டத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த அமைப்பின் மூலம், சுற்றுச்சூழல் மீது அக்கறையுள்ள அனைவரும் இணைந்து, தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கவேண்டும். அதற்கான திட்டங்களும், செயல்பாடுகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருகின்றன.



 



ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒன்றிணைக்கவும், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 'யாதும்' எனும் மாத இதழ் ஒன்றை வெளியிட திட்டமிட்டுளோம். கருத்து மாற்றத்தை அனைவரிடமும் விதைப்பதே 'யாதும்' மாத இதழின் முதன்மையான நோக்கம். சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள நிகழ்வுகள் பற்றியும், நபர்கள் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தாலும், தமிழ் மொழியில், முழுமையான சுற்றுச்சூழல் அக்கறையோடு இயங்கும் இதழாக 'யாதும்' அமையும்.



 



'யாதும்' இதழின் முதல் பிரதியை, வரும் 28 ஏப்ரல் 2016 அன்று வெளியிடுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



 



இந்த மாத இதழின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் ஏப்ரல் 28 அன்று மாலை 6 மணிக்கு ஜேஎஸ் அரங்கில் நடைபெற உள்ளது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா