சற்று முன்
சினிமா செய்திகள்
மீண்டும் பொன்ராம் உடன் இணையும் சிவகார்த்திகேயன்!
Updated on : 27 April 2016

தனது மாபெரும் வெற்றிப்படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் மீண்டுமொரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
தற்போது ரெமோ, மோகன் ராஜா படம் என படுபிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் இதனை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய இரண்டு படங்களிலுமே சிவகார்த்திகேயனோடு சூரி இணைந்திருந்ததால் இதிலும் சூரி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இரண்டு படங்களிலும் டி.இமானின் இசை மிகப் பெரிய வெற்றியடைந்த நிலையில், அதே கூட்டணி இந்த படத்திலும் தொடரலாம்.
சமீபத்திய செய்திகள்
சோசியல் மீடியா ஒரு கூர்மையான கத்தி - தலைவர் கவிஞர் விவேகா பேச்சு
தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் திரு.விவேகா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் LNH Creations திரு.கே.லஷ்மி நாராயணன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தலைவர் கவிஞர் திரு. விவேகா, “இந்த இனிய மாலைப்பொழுதில் இங்கே குழுமியிருக்கும் ஊடக உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
South indian social media influencers association (SISMIA) தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கமானது கடந்த 14-ஆம் தேதி க்ரீன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்ட தொடக்க விழாவாக நடைபெற்றது. மிகப்பெரிய ஆளுமைகள் அழைப்பை ஏற்று வருகை தந்தார்கள். மாபெரும் வெற்றி விழாவாக அது அமைந்தது.
சோசியல் மீடியா Influencers என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, ஏன் என்றால் ஒரு உளியை எடுத்து தன்னை சிற்பமாக செதுக்குவது போல தன் கைவசம் இருக்கும் திறமையை மூலதனமாக கொண்டு தங்களுக்குள்ளே வெளிச்சம் பாய்ச்சு கொண்டு வெளியே வருகிறார்கள். அவர்களை தாய்மையோடு அரவணைத்து செல்ல தான் இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.
சோசியல் மீடியாவில் இன்று சாதாரணமானவரை உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். அது ஒரு கூர்மையான கத்தி நேர்மையாக கொண்டு செல்லம்போது பல்வேறு வெற்றிகளை நாம் சாதிக்க முடியும்.
சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் விதமாக தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எத்தனை பெரிய ஆச்சர்யங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு மாபெரும் போராட்டமாக மாறியது இந்த சோசியல் மீடியாவால் தான். நல்ல நோக்கோடு இதை கொண்டு செல்லும் விதமாக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் நோக்கங்கள் (SISMIA):
1. இதுவரை அமைப்பு சாரா கலைஞர்களாக இருக்கும் Social Media Influencers-களை SISMIA எனும் உறுதியான அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருதல்.
2.சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கான பாதுக்காப்பை உறுதி செய்தல்.
3.Social Media Influencers-கான புதிய பணிவாய்ப்புகளை ஏற்படுத்துதல்; அவர்களுக்கான பயிற்சி முகாம்களை அமைத்தல்.
4. மத்திய மாநில அரசுகளோடு பேசி Social Media Influencers-க்கான நலத்திட்டங்களை பெற்றுத்தருதல்
5. ஏற்கனவே காப்பீட்டு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கு சங்கமே மருத்துவக் காப்பீட்டுக்கான தொகையைச் செலுத்தியுள்ளது.
6. ஏபரல் 1 ஆம் தேதி முதல் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் பயன் பெறுவர். இன்னும் சில காப்பீட்டுத் திட்டங்களையும் சங்கம் ஏற்பாடு செய்ய முயற்சிக்கும்.
7. தனிநபராக இருப்போர் குழுவாக இணைந்து பயன் பெற சங்கம் உறுதுணையாக நிற்கும்.
8.சங்கத்தின் சட்டப் பாதுக்காப்புக் குழு உறுப்பினர்களின் நேர்மையான தேவைகளுக்குத் துணை நிற்கும் சங்கத்தின் தொழில் நுட்பக் குழு உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்
மும்பையில் 'எம்புரான்' பட டிரெய்லர் ஐமேக்ஸ் பதிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் டிரெய்லர் நாளை, மார்ச் 20 ஆம் தேதி, மும்பையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில், ஐமேக்ஸ் பதிப்பில் வெளியிடப்படவுள்ளது.
“லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாமாக பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில், ஐமேக்ஸ் பதிப்பிலும், வெளியாகிறது. இதன் ஒரு பகுதியாக படத்தின் டிரெய்லர் நாளை ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகவுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக, பான் இந்தியப் பிரம்மாண்ட படமாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது.
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தோமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகிறார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பிஜூ சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடேகர், நைலா உஷா, ஜிஜூ ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபோனே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.
இப்படம் உலகம் முழுக்க பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், கலை இயக்குநர் மோகன்தாஸ், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் படத்தின் கலை இயக்குநர் நிர்மல் சஹதேவ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். முதல் பாகத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ், இப்படத்தில் மிரட்டல் இசையைத் தந்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக வெளியாகும் “எம்புரான்” திரைப்படத்தை, புகழ் பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
இப்படத்தினை தமிழில் கோகுலம் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கன்னடத்தில் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது, தெலுங்கில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தியில் புகழ்பெற்ற நிறுவனமான ஏஏ பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தியத் திரையுலகில் முக்கியமான படமாக, எதிரப்பார்ப்பை எகிறவைத்துள்ள இப்படத்தினை, 2025 மார்ச் 27 அன்று, வெள்ளித்திரையில் ரசிக்கத் தயாராகுங்கள்!
'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷை புதிய படம் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி!
வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான பாத்திரங்களையும் படைத்து அவற்றில் எதிர்பாராத நடிகர்களை நடிக்க வைப்பதில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி, 'தாதா 87' திரைப்படத்தில் சாருஹாசனையும், 'பவுடர்' படத்தில் நிகில் முருகனையும், 'ஹரா' படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் மோகனையும் நடிக்க வைத்தார்.
தற்போது இன்னுமொரு முற்றிலும் மாறுபட்ட முயற்சியாக 'பன்னீர் புஷ்பங்கள்' மூலம் 80களில் ரசிகர்கள் இதயங்களில் இடம் பிடித்த சுரேஷை தனது புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் விஜய்ஶ்ரீ ஜி.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ஒரு பரபரப்பான கதையை பின்னணியாக கொண்டதாகும். மலேசியாவை சேர்ந்த ஜி வி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டத்தோ கணேஷ் மற்றும் விஷால் ஆகியோர் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
சுரேஷை தொடர்ந்து முக்கிய வேடத்தில் மலேசிய ரஜினிகாந்த் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், தீபா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். ஹரா புகழ் ரஷாந்த் ஆர்வின் இசை அமைக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கி இந்தியா மற்றும் மலேசியாவில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீஸர் ஏப்ரல் 19 அன்று மலேசியாவில் வெளியாகிறது. படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் இடையே இது உருவாக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ் ( ACE ) 'படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஏ. கே. முத்து கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.
மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நிறைவு செய்யப்பட்ட இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் மற்றும் பிரத்யேக கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் தாமரை எழுத, பின்னணி பாடகி ஸ்ரேயா கௌசல் மற்றும் பின்னணி பாடகர் கபில் கபிலன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரனின் மயக்கும் மெலோடி பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடல்.. அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கி நடிக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்'
'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கவிருக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த 'மாயாண்டி குடும்பத்தார்' எனும் வெற்றி படத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கான தொடக்க விழா மற்றும் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு நேற்று திருச்செந்தூர் அருகே உள்ள சாஸ்தா கோவிலில் நடைபெற்றது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் கே. பி. ஜெகன் பேசுகையில், '' என்னுடைய வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் நான் கதையின் நாயகனாக நடிக்கிறேன். இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகும்'' என்றார்.
யுவன் சங்கர் ராஜா வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், 'ஸ்வீட் ஹார்ட் படக்குழுவினருக்கு வாழ்த்து!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் வெளியான ' ஸ்வீட் ஹார்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், 'படம் நன்றாக இருக்கிறது' என்ற பாசிட்டிவான விசயத்தை மவுத் ஆஃப் டாக்காக பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தத் தருணத்தில் இசை பணிக்காக வெளிநாட்டில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா படக் குழுவினருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், 'ஸ்வீட் ஹார்ட் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள செய்து, வெற்றி பெற வைத்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். படத்தைப் பார்த்து ரசித்தவர்களும் நல்ல விதமான விமர்சனங்களை சமூக வலைதள பங்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் ஊக்கமடைந்துள்ளனர்.
காதலர்களுக்கிடையே ஏற்படும் உரசலும், விரிசலும் உணர்வுபூர்வமாகவும், வித்தியாசமான பின்னணியிலும் விவரித்திருப்பதால் இப்படத்தினை அனைத்து தரப்பினரும் பார்த்து ரசித்து வருகிறார்கள். குறிப்பாக காதலர்கள் இருவரும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் சந்தித்துக் கொள்வதை பெருமிதத்துடன் குறிப்பிட்டு, ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
மார்ச் 27ல் உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது 'லூசிபர்' பட இரண்டாம் பாகமான 'எம்புரான்'!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் 4000 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்-இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது.
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தோமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகிறார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பிஜூ சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடேகர், நைலா உஷா, ஜிஜூ ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபோனே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.
இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, 2023 அக்டோபர் 5-ம் தேதி, ஃபரிடாபாத்தில் தொடங்கியது. இதன் படப்பிடிப்பு, உலகம் முழுக்க பல இடங்களில் நடைபெற்றது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், கலை இயக்குநர் மோகன்தாஸ், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் படத்தின் கலை இயக்குநர் நிர்மல் சஹதேவ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். முதல் பாகத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ், இப்படத்தில் மிரட்டல் இசையைத் தந்துள்ளார்.
“எம்புரான்” படத்தின் விளம்பரப் பணிகள் படத்தைப் போலவே, பிரம்மாண்டமாக துவங்கி நடந்து வருகிறது. 2025 ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தில் கொச்சியில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ டீசர், டிஜிட்டல் தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பிப்ரவரி 9, 2025-ல் ஆசீர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல்களில், படத்தின் கதாப்பாத்திரங்கள் 2-3 நிமிட வீடியோக்கள் மூலமாகக் குறுகிய கால இடைவெளியில் வெளியானது. பிப்ரவரி 26, 2025 அன்று மோகன்லால் குரேஷி- ஆப்ரஹாம் எனும் ஸ்டீபன் நெடும்புள்ளியாக அறிமுகப்படுத்தப்பட்டது, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகும் “எம்புரான்”, இந்தியத் திரையுலகில் முக்கியமான படமாக, எதிரப்பார்ப்பை எகிறவைத்துள்ளது. 2025 மார்ச் 27 அன்று ஸ்டீபன் நெடும்புளஙளியை திரையில் ரசிக்கத் தயாராகுங்கள்!
'டெஸ்ட்' படத்தில் குமுதாவாக அறிமுகமாகும் நடிகை நயன்தாரா!
சில கனவுகள் எளிமையானது. ஆனால், அந்த எளிய கனவுகள் மிகப்பெரும் அர்த்தம் கொண்டது.
YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும் சோதனை வருகிறது. இதனை அன்பு மற்றும் வலிமை மூலம் குமுதா எதிர்கொள்கிறாள். நம்பிக்கைக்கும் மனவேதனைக்கும் இடையில் சிக்கி தான் விரும்பிய வாழ்க்கைக்காக போராடுகிறாள். கனவு காணத் துணிந்து அதை விட்டுக்கொடுக்க மறுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கதை ஒரு சான்றாகும்.
தனது கதாபாத்திரம் பற்றி நயன்தாரா பகிர்ந்து கொண்டதாவது, "குமுதாவின் கனவு ஒரு வீடு, ஒரு குடும்பம் மற்றும் நீடித்த காதல் என்ற எளியதுதான். ஆனால், வாழ்க்கை அவள் எதிர்பார்க்காத விதத்தில் அவளை சோதிக்கிறது. தனது கனவிற்காக போராட அவளைத் தள்ளுகிறது. குமுதாவின் பயணத்தைத் திரையில் கொண்டு வந்திருப்பது எனக்கு எமோஷனலான விஷயம். ரசிகர்களுக்கும் அதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ’டெஸ்ட்’ என்பது காதல், மீண்டு வருவது மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதை. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’ படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
குமுதாவின் கனவுகள் நிஜமாகுமா அல்லது எட்டாத விஷயமாகவே இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 4 பாருங்கள்!
நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது
நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சிறந்த கதைகளை வழங்கி வருகிறது. ராமு செல்லப்பா இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சுவாரஸ்யமான டிரெய்லர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான தசரா திருவிழாவின் பின்னணியில் பழிவாங்கும் கதையாக இது அமைந்திருக்கிறது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆக்ஷன், எமோஷன், உண்மை, அதிகாரம் மற்றும் பழிவாங்கல் என ’OKJK’ வெப்சீரிஸின் உலகம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் இதுவரை பார்த்திராத கண்கவர் காட்சிகளுடனும் கொண்டாட்டத்துடனும் அதற்கு பின்னான உணர்வுகளுடனும் ‘ஓம் காளி ஜெய் காளி’ உருவாகியுள்ளது.
வெப்சீரிஸில் கணேசன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து நடிகர் விமல் கூறும்போது, "நான் இதற்கு முன்பு நடித்திருந்த மற்ற கதாபாத்திரங்களில் இருந்து கணேசன் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தது. சாதாரண ஒரு நபரில் இருந்து திருவிழாவிற்காக புதிய அவதாரம் எடுத்தது மறக்க முடியாத சவாலான அனுபவமாக இருந்தது”.
வெப்சீரிஸ் பற்றி இயக்குநர் ராமு செல்லப்பா கூறும்போது, "தசரா என்பது வெறும் திருவிழா மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. நாட்டுப்புறக் கதைகளையும் பழிவாங்குதலையும் ஒன்றிணைக்கும் கதையை இதில் உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'ஓம் காளி ஜெய் காளி' மார்ச் 28 அன்று வெளியாகிறது.
கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின் அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம்!
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கும் ’டெஸ்ட்’ படத்தில் நடிகர் சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திர அறிமுக வீடியோவை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
சிலருக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு, பலருக்கு அது ஒரு ஆர்வம். ஆனால், அர்ஜுனுக்கு அது வாழ்க்கை! திறமையான நடிகரான சித்தார்த் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கிரிக்கெட் வீரர் கதாபாத்திரம் லட்சியம், தியாகம் மற்றும் இடைவிடாத முயற்சி ஆகியவற்றைக் கொண்டது. அர்ஜூன் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும்போது கிரிக்கெட் பேட்டை மட்டும் எடுத்து செல்லவில்லை. ஒரு நாட்டின் எதிர்பார்ப்புகளையும் தனது சொந்த குடும்பத்தின் நம்பிக்கைகளையும் சுமந்து செல்கிறார். சர்வதேச சுழற்பந்து வீச்சாளரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான ஆர். அஸ்வின், அர்ஜுனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அர்ஜுனுக்கு கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி அது அவனது அடையாளம், குறிக்கோள் மற்றும் அவனது மிகப்பெரிய சவால். ஆனால் அவனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் இடையில் பிரச்சினைகள் வரும்போதுதான் அர்ஜூனுக்கு உண்மையான ‘டெஸ்ட்’ தொடங்குகிறது.
தனது கதாபாத்திரத்தைப் பற்றி சித்தார்த் பேசுகையில், “அர்ஜுனின் கதை முழுக்க முழுக்க ஆர்வம் மற்றும் தியாகத்தைக் கொண்டது. அவன் தனக்காக மட்டும் விளையாடவில்லை. அவன் தனது நாட்டிற்காகவும், விளையாட்டின் மீது கொண்ட காதலுக்காகவும், அவனது கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான போராட்டத்தையும் சுமந்துதான் விளையாடுகிறான். ’டெஸ்ட்’ என்பது ஒரு ஸ்போர்ட்ஸ் படம் மட்டுமல்ல. இது நமது தேர்வுகள் பற்றியும் நமக்கே தெளிவுபடுத்துகிறது. இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்.
அர்ஜுனின் விளையாட்டு மீதான காதல் அவரது தேர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இதுபற்றி மேலும் அறிய ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ’டெஸ்ட்’ திரைப்படம் பாருங்கள்.
- உலக செய்திகள்
- |
- சினிமா