சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

மே 16-ல் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு: கமல்ஹாசன் தேர்தலில் வாக்களிப்பாரா?
Updated on : 30 April 2016

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் "சபாஷ் நாயுடு" படத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.



 



இதனை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த படம் குறித்தும் தனது பிற செயல்பாடுகள் குறித்தும் விரிவாக பகிர்ந்துக்கொண்டார் கமல்ஹாசன்.



 



இதன்போது இரண்டு மகள்களுடன் பணியாற்றும் அனுபவம் குறித்து வினவியதற்கு பதிலளித்த கமல், "இருவரும் வெவ்வேறு துறைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆனால் ஸ்ருதி நடிக்க வந்திருக்கிறார், அக்‌ஷரா உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்.



 



நான் கூட உதவி இயக்குநர், இயக்கம் என்று தான் இருந்தேன். ஆனால் கே. பாலச்சந்தர் சார் என் வாழ்கையை மாற்றிவிட்டார்" என்றார்.



 



சபாஷ் நாயுடுவின் படப்பிடிப்பு மே 16-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் தொடங்குவதாக கமல் அறிவித்துள்ளார்.



 



இந்நிலையில், அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதே நீங்கள் வாக்களிக்க மாட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், அதை வேறு யாரும் செய்துகொள்வார்கள். சென்ற முறையே என்னால் வாக்களிக்க முடியவில்லை. வேறு யாரோ வாக்களித்துவிட்டனர். ஒருவேளை முடிந்தால் வாக்களிப்பேன் என்றார்.



 



இது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக அக்கறை கொண்ட ஒரு மூத்த கலைஞர் தனது வாக்களிக்கும் கடமையை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என பலர் கூறியுள்ளனர்.



 



இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இம்முறை கமல்ஹாசனின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. எனவே அவர் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். பொதுமக்களுக்கு ரோல் மாடலாக உள்ள ஒரு கலைஞர், தனது கடமையை நிறைவேற்ற வேண்டுமென்று கூறியுள்ளார்.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா