சற்று முன்

'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |   

சினிமா செய்திகள்

அரசியலுக்கு கோ-2 நடிப்புக்கு உன்னோடு கா; சிலிர்க்கிறார் பால சரவணன்
Updated on : 02 May 2016

குட்டி புலி  மற்றும்  திருடன் போலீஸ்  படங்களில் தனது கலகல பேச்சுகளாலும், துறுதுறு செயல்களாலும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்த பால சரவணன், பல சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. மே 13-ஆம் தேதி வெளியாகும்  கோ 2  மற்றும்  உன்னோடு கா  திரைப்படங்கள் தனக்கு இரட்டை விருந்தாக அமையும் என்கிறார் இவர்.



 



"முதல் முறையாக பல திறமைகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் பிரகாஷ் ராஜ் சாருடன் நடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இந்த இளம் வயதிலேயே தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவுடன் கை கோர்த்ததை நான் பெருமையாக கருதுகிறேன்.



 



இந்த படத்தில் நடிப்பதற்கு முன், எனக்கு அரசியலை பற்றி அவ்வளவு விவரம் தெரியாது. ஆனால் இப்பொழுது எனக்கு கொஞ்சம் நஞ்சம் புரிகிறது" என்று கோ-2 அனுபவம் குறித்து  பால சரவணன் கூறியுள்ளார்.



 



இதேபோல், உன்னோடு கா படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறிய அவர், ஆரி மற்றும்  டார்லிங் 2  புகழ் மாயா  கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் நான் மிஷா கோஷலுடன் ஜோடி சேர்ந்துள்ளேன்.



 



தமிழ் சினிமாவின் மூத்த  முன்னோடி அபிராமி ராமநாதன் சார் அவர்களின் கதையில் உருவாகி இருக்கும்  இந்த படத்தில் நான் நடிப்பது எனக்கு கிடைத்த ஒரு வரம். சினிமாவில் அ முதல் ஃ வரை அனைத்தையும் அறிந்த ராமநாதன் சாரின் படத்தில் நடித்தது மூலம், நடிப்பின் ஆழத்தையும், அதன் நுணுக்கங்களையும் நன்றாக கற்று கொண்டேன். நடிப்பு என்னும் துறையில் ஜாம்பாவான்களாக திகழும் பிரபு சார் மற்றும் ஊர்வசி மேடமுடன் இணைந்து நடித்ததை என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது.



 



மே 13 ஆம் தேதி   ஒரே நாளில் இரண்டுப் படங்கள்  வெளியாவது  நிச்சயம் எனக்கு திருப்புமுனையாக தான்  இருக்கும்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா