சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பீப் ஷோ குழுவினரின் புதிய முயற்சி வை ராஜா மை; நீங்களும் கால் பண்ணிடுங்க
Updated on : 04 May 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 5 லட்சம் புதிய வாக்காளர்களை தவறாமல் வாக்களிக்க செய்வதற்காக பீப் ஷோ நிகழ்ச்சி குழுவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தி வருகின்றனர்.



 



‘வை ராஜா மை’ என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், 5 லட்சம் புதிய வாக்காளர்களை இந்த தேர்தலில் “நிச்சயம் வாக்களிப்போம்” என்று தங்கள் உறுதியை மிஸ்டு கால் மூலமாக பதிவு செய்யும் வகையில் காலவரையற்ற பேசும்விரதத்தை மேற்கொண்டுள்ளனர்.



 



தற்போது நேரலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் கால் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்து கூறும் நிகழ்ச்சியின் இயக்குநர் பிரபாகரன்,  “இன்று வளர்ந்து வரும் சமூக சூழ்நிலையில் இளைஞர்கள் தவறுகளை சகித்துக்கொண்டும், கிரகித்துக்கொண்டும் வாழ்ந்து வருகிறார்கள்.



 



இந்த நிலை மாற வேண்டும் என்றால் அது வாக்களர்கள் கையில் தான் இருக்கிறது. இந்த தேர்தலில் பெரிய திருப்புமுனையாக இருக்க போவது புதிய வாக்களர்களின் வாக்குகள் தான், எனவே, அவர்களுக்கு வாக்களிப்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.



 



புதிய வாக்களர்களான  நீங்களும் இந்த ’வை ராஜா மை’ நிகழ்வில் பங்கேற்று “நிச்சயம் வாக்களிப்போம்” என்ற உறுதியை பதிவு செய்ய 7878745566 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். மேலும், ட்ரெண்ட்லவுட்ஸ் ஸ்மைல் சேட்டை சேனலின் இந்த ‘வை ராஜா மை’ நிகழ்ச்சியில் பிரபல வி.ஜே-க்களின் குறும்புத்தனமான அரசியல் சேட்டைகளைப் www.youtube.com/smilessettai என்ற youtube சேனலிலும் மற்றும் www.smilewebtv.com என்ற இணையத்தளம் மூலமாக நேரைலையில் கண்டுகளியுங்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா