சற்று முன்

இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |    சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'   |    முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!   |    நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |   

சினிமா செய்திகள்

சினிமாவில் இவ்வளவு காலம் நீடித்து இருப்பதற்கு காரணம் இவர்கள் தான் - ஆர்.கே.சுரேஷ்
Updated on : 05 October 2021

தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் ஆர்.கே.சுரேஷ். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று பல தளங்களில் இயங்கிவரும் இவர் விஜய்சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற வெற்றிப் படத்தை விநியோகித்தவர். தொடர்ந்து விஜய்சேதுபதியின் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘சூது கவ்வும்’, இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’, ‘பீட்சா’, ‘6 மெழுகுவர்த்திகள்’, ‘கோழி கூவுது’, ‘தங்க மீன்கள்’, ‘மதயானை கூட்டம்’, ‘சாட்டை’, ‘அய்யாவு’(இந்தி), ஹீரோயின் (இந்தி) உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிப் படங்களை ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ளார்.



 



இந்த நிறுவனம் விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’, விஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’, ‘அட்டு’, ‘அமீரா’ போன்ற வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளது. 



 



திரைத்துறையில் ஸ்டூடியோ 9 நிறுவனத்துக்கு இது 13 வது ஆண்டு. இந்த ஆண்டில் ‘டிரைவர்’, ‘குரு பூஜை‘ போன்ற படங்களை தயாரித்து வருகிறது.



 



தயாரிப்பாளர், விநியோகஸ்தராக மட்டுமல்லாமல் 2013 ஆம் ஆண்டிலிருந்து நடிகராக  தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் ஆர்.கே.சுரேஷ். ‘தாரை தப்பட்டை’, ‘மருது’, ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இப்படை வெல்லும்’, ‘பள்ளிப்பருவத்திலே’, ‘ஸ்கெட்ச்’, ‘டிராபிக் ராமசாமி’, ‘பில்லா பாண்டி’, ‘நம்ம வீட்டுபிள்ளை’, ‘வேட்டை நாய்’, ‘கொச்சி ஷாதி (மலையாளம்), ‘சிவலிங்கபுரம் (தெலுங்கு) உட்பட சுமார் 25 படங்களில் நடித்து நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். 



 



அதுமட்டுமல்லாமல், ஆர்.கே.சுரேஷ் அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.



 



விரைவில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘விசித்திரன்’, ‘காடுவெட்டி’ வெளியாகவுள்ளது. இதில் ‘விசித்திரன்’ படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பாலா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



இது குறித்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் கூறுகையில், ‘இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். திரைத்துறையில் இவ்வளவு ஆண்டு காலமாக நீடித்து இருப்பதற்கு மக்களும், திரைத்துறையினரும் அளித்த ஆதரவு மட்டுமே காரணம். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு உதவிய ரசிகர்கள், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் இந்த இனிய தருணத்தில் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா