சற்று முன்
சினிமா செய்திகள்
பல்லாயிரம் பாடல்களை எழுதிய கவிஞர் பிறைகுடன் காலமானார்
Updated on : 08 October 2021

திரைத்துறையில் 2000 பாடல்களுக்கு மேல் பாடல்களையும் (நடந்தால் இரண்டடி,
ஆட்டமா தேரோட்டமா, சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது.. உட்பட) எழுதியவரும் பக்தி பாடல்கள் 5000க்கும் எழுதியவரும், சிறந்த ஆன்மீகவாதியும், இலக்கியவாதியுமான , கவிஞானி பிறைசூடன் (வயது 65) இன்று (8.10.2021) மாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளனர். இவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக உள்ளார்.
சமீபத்திய செய்திகள்
'குற்றம் கடிதல் 2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களை விட மூன்று நாட்கள் முன்பாகவே, கோடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் எஸ்.கே.ஜீவா கூறியதாவது,
“கோடைக்கானலில் ஏற்பட்ட சவாலான காலநிலையையும் மீறி, திட்டத்திற்கு முன்னதாகவே முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். இது எங்கள் குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பாலும், தயாரிப்பு அணியின் தளராத ஒத்துழைப்பாலும் சாத்தியமாகியது. தயாரிப்பாளரும், கதாநாயகனுமான JSK சதீஷ்குமார் அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருந்தார், ஒரு காட்சியில் எந்தவித உதவியுமின்றி இயல்பாகக் கண்ணீர் விட்டபோது, அங்கே இருந்த முழுக் குழுவினரிடமிருந்தும் கைத்தட்டல்களைப் பெற்றார். இப்படியான தருணங்களே, திரைப்படக் கலையை உயர்த்தும் உண்மையான சான்றுகள். நடிகர், நடிகைகள் அனைவரின் பாராட்டத்தக்க நடிப்பிற்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன். அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் மேலும் அழகான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன்” என்றார்.
குற்றம் கடிதல் 2 ஒரு த்ரில்லர் டிராமா வகை படம். தென்காசி, சிறுமலை மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளன.
இப்படத்தில் JSK சதீஷ்குமார், பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பவல், பட்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன், ரோஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை கூறும் 'சிங்கா'
ருத்ரம் சினிமாஸ் தனது முதல் படைப்பாக சிங்கா திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக சிங்கா உருவாகி இருக்கிறது.
புகழ்பெற்ற இயக்குநர்கள் வசந்த், சற்குணம் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றி அனுபவத்தைப் பெற்ற இயக்குநர் ராஜா துரை சிங்கம் இயக்கும் இந்த படம், உணர்ச்சி, நம்பிக்கை, காதல், ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலவையாக குடும்பம் முழுவதும் ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் திறமையான நட்சத்திரக் குழு ஒன்றாகக் களம் இறங்குகிறது. தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்த கயல் சந்திரன் கதையின் உணர்ச்சி மையத்துடன் இணையும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சிஜா ரோஸ், மலையாளத்தில் புகழ்பெற்ற புதுமுகம் மீனாட்சி, ஆதித்யா கதிர், மலையாளத்தின் பிரபல நடிகர் அரிஸ்டோ சுரேஷ் ஆகியோரும் இணைகின்றனர்.
இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைக்க, அசோக் குமார்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
கதையின் மையத்தில் இருக்கும் சிங்கா எனும் அன்பான லாப்ரடார் நாய் தனது அழகிய அரவணைப்பினாலும், ஆழமான உணர்வுகளாலும் அனைவரின் மனங்களையும் நிச்சயம் கவருவான். மனிதனுடன் பகிரும் நட்பின் மூலம் அன்பு, நம்பிக்கை, வாழ்க்கைப் பயணம் ஆகியவை எவ்வாறு மலர்கின்றன என்பதைக் காட்டும் கதை இது.
முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், திரையுலக ரசிகர்கள் அனைவரையும் சிங்காவின் ஆத்மார்த்தமும், பொழுதுபோக்கும் கலந்த கதையை வரவேற்க அழைக்கிறோம்.
‘மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரி
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 அன்று ‘மெட்ராஸ் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ரமேஷ் யாந்த்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரியை மில்லியன் ஸ்டுடியோ பெருமையுடன் வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
2 நிமிடங்கள் 26 நொடிகள் நீளம் கொண்ட இந்த டாக்குமெண்ட்ரியில் பழைய மெட்ராஸின் அழகியலை செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சிகளாகவும், உலகம் முழுவதும் போற்றப்படும் பல ஆளுமைகள் மெட்ராஸில் பிறந்தவர்கள் என்ற வலுவான கூற்றும் இதில் சொல்லப்பட்டுள்ளது.
இயக்குநர் ரமேஷ் யாந்த்ரா கூறியதாவது, “மெட்ராஸ் வெறும் நகரம் மட்டுமல்ல! நம் அடையாளத்தையும் கனவுகளையும் இணைக்கும் இடம். காலத்தால் என்றும் நிலைத்திருக்கும் மெட்ராஸை இந்தப் படம் கொண்டாடும்” என்றார்.
மில்லியன் ஸ்டுடியோ குறித்து:
தமிழில் ‘வெப்பன்’ என்ற படத்தைத் தயாரித்துள்ள மில்லியன் ஸ்டுடியோ, சினிமாவில் அடுத்தடுத்து புதுமையான கதைகள் மற்றும் டாக்குமெண்ட்ரி தயாரிக்கவுள்ளது.
ரமேஷ் யாந்த்ரா பற்றி:
‘குடியம் கேவ்ஸ்’, ‘தி ஃபாதர் ஆஃப் இந்தியன் ப்ரீஹிஸ்டரி’ போன்ற பாராட்டப்பட்ட பல டாக்குமெண்ட்ரிகளை இயக்கியவர் ரமேஷ் யாந்த்ரா. அவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் ‘டிராக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தமிழ் சினிமாவின் நம்பிக்கை முகமாக ரமேஷ் யாந்த்ரா வலம் வருவார் என்பது உறுதி.
டிஸ்கவரி புக் பேலஸ் - MLA திரு.பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார்
சென்னையை மையமாகக் கொண்ட நூல்கள் மற்றும் புகைப்படக் காட்சியை சென்னை விருகம்பாக்கம் தொகுதி MLA திரு.பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார். டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன், 99கி.மீ காஃபி ஷாப் உரிமையாளர் திரு.மனோ சாலமன் மற்றும் பத்திரிகையாளர் பொன்ஸீ ஆகியோர் பலரும் கலந்துகொண்டனர்.
சென்னையை மையமாகக் கொண்ட நூற்றுக்கணக்கான நூல்களுடன், ஆவணப்படம் திரையிடல், கலந்துரையாடல் மற்றும் புகைப்படக் காட்சி அனைவரையும் கூடுதல் கவனம் பெற வைக்கிறது.
இந்த சென்னை நாள் விழா அடுத்த மூன்றுநாள் வரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது.
தீபாவளிக் கொண்டாட்டமாக பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் 'LIK'
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது.
பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK ( ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி') திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து, வழங்குகிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் , பாடல்கள், டிரெய்லர், ஸ்னீக் பிக்..ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் வெளியான இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல் (தீமா தீமா) பெரும் வரவேற்பினை பெற்றது. புதுவிதமான கதைககளத்தில் உருவாகியிருக்கும், இப்படத்தின் மீது ரசிகர்களிடத்தில், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படத்தின் அதிக எதிர்பார்ர்பிலிருக்கும் டீசர் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.
சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியீடு!
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - வசிஷ்டா (Vassishta) - எம். எம். கீரவாணி (MM Keeravani)- யுவி கிரியேசன்ஸ் (UV Creations) - கூட்டணியில் உருவாகும் 'விஸ்வம்பரா ' படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் 'விஸ்வம்பரா ' படத்தின் தயாரிப்பாளர்கள்- ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஆச்சரியத்தை அளித்துள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கற்பனை கலந்த சமூக காட்சியின் ஒரு அற்புதமான விஷுவலாகும். இயக்குநர் வசிஷ்டா (Vassishta) இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி - பிரமோத் ( Pramod ) ஆகியோர் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறார்கள். இந்த கிளிம்ப்ஸ் குறிப்பிடத்தக்க மற்றும் புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.
விஸ்வம்பராவின் உலகில் நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு குழந்தைக்கும், ஒரு முதியவருக்கும் இடையேயான வசீகரிக்கும் உரையாடலுடன் இந்த காணொளி தொடங்குகிறது. ஒரு மனிதனின் சுயநலத்தால் தூண்டப்பட்ட மிகப்பெரிய அழிவை முதியவர் விவரிக்கிறார். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்த மீட்பர் இறுதியாக வெளிப்படுகிறார். அவர் இந்த சாம்ராஜ்யத்தின் பாதுகாவலராக- மிக சக்தி வாய்ந்த - வியப்பில் ஆழ்த்தக்கூடிய பிரவேசத்தை உருவாக்குகிறார்.
இந்த காட்சி தொகுப்பு நன்கு வடிவமைக்கப்பட்ட டீசராகும். இது சிரஞ்சீவியை ஒரு முக்கியமான வேடத்தில் பார்க்க ஆர்வமுள்ள திரைப்பட ஆர்வலர்களை சிலிர்க்க வைக்கும் என்று உறுதியளிக்கிறது. ஆரம்பக் கட்ட பரபரப்பு இப்போது அதிகரித்து வரும் நிலையில்.. கதை ஒரு புராணக் கதையை பற்றியதாக இருக்கிறது. அதில் சிரஞ்சீவி விஸ்வம்பராவின் பாதுகாவலராக தோன்றுகிறார்.
இயக்குநர் வசிஷ்டா பிரம்மாண்டமும், வெகுஜன ஈர்ப்பும் நிறைந்த ஒரு விகிதாச்சார காவியத்தை... பிரபஞ்சத்தை ... கற்பனை செய்து படைத்திருப்பதாக தெரிகிறது. சிரஞ்சீவியின் காந்தம் போன்ற திரை ஆளுமை ஒவ்வொரு காட்சியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் அவரது தீவிர நடிப்பு உண்மையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விஸ்வம்பராவின் பிரபஞ்சத்தை கனவு போன்ற தொடுதலுடன் வடிவமைத்ததற்காக தயாரிப்பு வடிவமைப்பாளர் ஏ. எஸ். பிரகாசின் கடும் உழைப்பு பாராட்டக்கூடியதாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சோட்டா கே. நாயுடு (Chota K Naidu)- விஸ்வம்பராவின் மாய உலகத்தை வளமான ...கம்பீரமான... காட்சி அமைப்புகளுடன் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் எம். எம். கீரவாணி ( MM Keeravani’s) கிளர்ச்சியூட்டும் வகையில் பின்னணி இசையை அமைத்து காணொளியை சக்தி வாய்ந்த உணர்ச்சி எழுச்சியை சேர்க்கிறது. VFX - ஹாலிவுட் தரத்திற்கு நிகராக அமைந்திருக்கிறது. மேலும் யுவி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு மதிப்பீடுகள் கிளிம்ப்ஸ் முழுவதும் தெளிவாகத் தெரிகின்றன.
சிரஞ்சீவியின் புகழ்பெற்ற வாழ்க்கையில் விஸ்வம்பரா திரைப்படம்- ஒரு மைல்கல் படமாக இருப்பதற்கான அனைத்து அறிகுறிகளையும் சுட்டிக்காட்டுகிறது. இதனை திரை ரசிகர்கள் தவற விட விரும்பமாட்டார்கள். இந்தக் காட்சி உண்மையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும், அவரை போற்றும் ரசிகர்களுக்கும் மிகச் சரியான பிறந்தநாள் பரிசாகும்.
இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் ஆஷிகா ரங்கநாத் (Ashika Ranganath) மற்றும் குணால் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே அறிவித்தபடி விஸ்வம்பரா 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும். இது இந்த சீசனின் மிகப்பெரிய ஈர்ப்பாகவும் இருக்கும்.
கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்
இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தண்டகாரண்யம்.
இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் , லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நிறைவுபெற்று செப்டம்பர் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதன் அறிவிப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
லப்பர் பந்து வெற்றிக்குப்பிறகு நடிகர் தினேஷ் க்கு இந்தப்படம் மிக முக்கியமான வெற்றிப்பபடமாக இருக்கும் என்கிறார்கள் .
நடிகர் கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும் என்கிறார்கள்.
இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு
ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன், "ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா இந்தப் படத்தை ஆகஸ்ட் 29 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை! அவருடன் இந்த படத்தில் இரண்டு வருடங்கள் இணைத்தயாரிப்பாளராக நான் பணிபுரிந்து தமிழ் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளேன். அடுத்து ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் ரொமாண்டிக் படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து அந்தப் படத்தின் பணிகள் தொடங்கும். 'குற்றம் புதிது' படத்திற்கும் தருண் விஜய்க்கும் உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை" என்றார்.
நடிகை சேஷ்விதா கனிமொழி, "நான் நடிக்க கமிட் ஆன முதல் படம் 'குற்றம் புதிது'. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தருணுக்கு ஆல் தி பெஸ்ட். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி! ஹீரோயின் ஆனால் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பயமும் நிறைய இருக்கிறது. நான் நடித்த முந்திய இரண்டு படங்களுக்கு ஆதரவு கொடுத்த மீடியா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. அதேபோன்ற அன்பும் ஆதரவும் இந்தப் படத்திற்கும் தேவை" என்றார்.
நடிகை பிரியதர்ஷினி, " இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் கதை சொல்லும் போதே புதிய முயற்சி என்பது புரிந்தது. தருண் எந்த தயக்கமும் இல்லாமல் தனது முழு நடிப்பு திறனையும் காட்டி நடித்துள்ளார். நிச்சயம் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார். சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான உழைப்பை தொழில்நுட்பக் குழுவும் கொடுத்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
'கெவி' பட இயக்குநர் தமிழ் தயாளன், "ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் நம்பி தமிழ் சினிமாவில் பல தொழிலாளர்களுடைய வாழ்க்கை உள்ளது. ஒரு படத்திற்காக 20, 30 வருடங்கள் காத்திருந்தவர்களை எனக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சிலர் விமர்சித்தாக் மட்டும்தான் அந்த படம் கவனிக்கப்படும் என்ற பிம்பம் கட்டமைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்வையாளர்கள் நீங்கள் வந்து படம் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் வாழ்கிறோம்".
தயாரிப்பாளர் கணேஷ், " எத்தனை படங்கள் நடித்தாலும் அதனை முதல் படமாக நினைத்து வேலை செய்தால் மட்டுமே அடுத்தடுத்த உயரத்திற்கு போக முடியும். சமீபத்தில் நிறைய சின்ன படங்கள் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து இருக்கிறது. அதுபோல இந்த படமும் பேசப்படும். வாழ்த்துக்கள்".
நடிகர், தயாரிப்பாளர் தேனப்பன், " படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தால் அதில் ரஜினி, கமல், ஷங்கர் என பெரிய நட்சத்திரங்களின் படமும் வருகிறது. மீதம் வரும் 200 படங்களில் வெறும் பத்து படங்கள் தான் வெற்றி பெறுகிறது. அதனால் நல்ல படங்கள் பற்றி மீடியாக்கள் பேசி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்".
தயாரிப்பாளர், நடிகர் தருண் விஜய், " சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் ஹீரோவாக முடியாது. அவர்களுக்கு நன்றி! இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள். கண்டிப்பாக மீடியாவும் பார்வையாளர்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றார்.
இயக்குநர் பேரரசு, " வழக்கமாக தந்தை தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பொழுது கலர் கலரான காஸ்டியூம், அறிமுக பாடல் என்றுதான் அழகு பார்ப்பார். ஆனால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் கார்த்திகேயன். திரில்லர் படத்தில் அந்த த்ரில்லை பார்வையாளர்களுக்கு கடத்துவது சாதாரண விஷயமில்லை. அது 'குற்றம் புதிது' படத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட். அதனால், இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் இரண்டு படங்கள் ஹிட் படங்கள் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்து விடுங்கள். விமர்சனங்களை நம்பாமல் எல்லா படங்களையும் மக்கள் நீங்கள் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்".
இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங், " கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது 'குட்'டாக ஃபீல் செய்வீர்கள். என்னுடைய அண்ணன், அண்ணி, என்னுடைய மனைவி எல்லோருக்கும் நன்றி".
இயக்குநர் ஹரி உத்ரா, " இந்த படத்தை நிச்சயம் வெற்றி படமாக்குவேன் என்று நம்பிக்கையோடு வெளியிடும் ஹரி உத்ராவுக்கு நன்றி. இயக்குநருடைய ஆசை நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி. தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்று இறங்கியிருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். தருண் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும். கடைசி வாரங்களில் வெளியான சிறு பட்ஜெட் படங்கள் பெரிதாக கலெக்ஷன் செய்யவில்லை. இதற்கு காரணம் நாம் படம் எடுப்பதை விட பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்க இன்னும் மெனக்கெட வேண்டும். சிறு படங்களை வெற்றி பெற வைத்தால் மட்டுமே சினிமா துறை வளரும்".
உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா " கேரளா, தமிழ்நாடு என எல்லா மாநிலங்களிலும் 'குற்றம் புதிது' ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்த கார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக இரவு பகல் பாராது உழைத்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!
தமிழ் சினிமாவில் வாரத்திற்கு சுமார் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானலும், அதில் மக்கள் மனதை கவரும் படங்கள் என்னவோ ஒன்றோ இரண்டோ தான். அப்படிப்பட்ட படங்களின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு செம சஸ்பென்ஸ் திரில்லர் விருந்து படைக்க இருக்கும் படம் தான் ‘இந்திரா’.
வசந்த் ரவி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கியிருக்கிறார். ஜெ.எஸ்.எம் மூவி புரொடக்ஷன் மற்றும் எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்பாஃன் மாலிக் தயாரித்துள்ளனர். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அஜ்மல் தஷீன் இசையமைத்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு பத்திரிகையாளர்கள் காட்சி இன்று திரையிடப்பட்டது. பொதுவாக படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்படுகிறது என்றாலே அந்த படத்தில் ஏதோ சிறப்பு விசயங்கள் நிறைந்திருக்கிறது என்பதை பத்திரிகையாளர்கள் யூகித்து விடுவார்கள். வசந்த் ரவியின் முந்தைய படமான ‘அஸ்வின்ஸ்’ படமும் இப்படி தான் திரையிடப்பட்டது. பத்திரிகையாளர்கள் யூகித்தது போல் அந்த படம் மேக்கிங் மற்றும் விஷுவல், கதை சொல்லல் ஆகியவற்றில் வித்தியாசத்தை காட்டி வியக்க வைத்தது. அதை தொடர்ந்து படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதன்படி, ‘இந்திரா’ திரைப்படமும் இன்று வெளியாவதற்கு முன்பாக திரையிடப்பட்டதால் பத்திரிகையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் படம் பார்த்ததோடு, பலவிதமான யூகங்களுடனும் பார்த்தார்கள். ஆனால், படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர், இந்திரா யார் ? என்ற கேள்வியில் தொடங்கி அதன் பிறகு நிகழும் அத்தனை அதிர்ச்சிகரமான சம்பவங்களையும் பார்வையாளர்களின் யூகங்களை கடந்து காட்சிப்படுத்தி வியக்க வைத்துவிட்டார்.
இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும், என்று பத்திரிகையாளர்கள் அனைவரும் பாராட்டியதோடு, படத்தில் இடம் பெற்றிருக்கும் திருப்பங்களை மறைத்து விமர்சனம் எழுதுவதே மிகப்பெரிய சவாலாக இருக்கும், என்றும் பேசியது படத்திற்கான மிகப்பெரிய அங்கீகாரம்.
ஒரு படம் வெளியாவதற்கு முன்பாக இத்தகைய பாராட்டு பெறுவது என்பது மிகவும் அரிதானது, அத்தகைய அரிதான சம்பவத்தை நிகழ்த்தியிருக்கும் ‘இந்திரா’ படக்குழு படம் வெளியான பிறகும், தங்களது படத்தின் ஆச்சரியங்களை தொடர்ந்து மக்கள் அறியும்படி செய்தால், படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.
'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய ட்ரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' என மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது.
'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையிலான திரைப்படமாக இது அமையவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'ஏஜிஎஸ் 28' என்று அழைக்கப்படும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பணியாற்றுகின்றனர்.
ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
'கே ஜி எஃப்' படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க சுபாஷ் கே ராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா