சற்று முன்

'குற்றம் கடிதல் 2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!   |    மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை கூறும் 'சிங்கா'   |    ‘மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரி   |    டிஸ்கவரி புக் பேலஸ் - MLA திரு.பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார்   |    தீபாவளிக் கொண்டாட்டமாக பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் 'LIK'   |    சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியீடு!   |    கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |   

சினிமா செய்திகள்

விமல் நடிக்கும் ஹாரர் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது
Updated on : 08 October 2021

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில் ஜீவன்,  மல்லிகா ஷெராவத், ரிதிக்கா சென், யாஷிகா ஆனந்த் நடிப்பில், வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் " பாம்பாட்டம் " மற்றும் விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா நடிப்பில், A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் " ரஜினி " படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும்  A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் பெயரிடப்படாத  புதிய படத்தையும்  பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.



 



விழாவில் நாயகன் விமல், படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தம்பி ராமைய்யா, படத்தின் இசையமப்பாளர் அம்ரீஷ், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதா கிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் மகேந்திர குமார்,  களாபி, பரமசிவம், முருகானந்தம், கலைமகன் முபாரக், திருமலை,  ஆகியோர் கலந்து கொண்டனர்.



 





 



நிர்வாக தயாரிப்பு ராஜா ஸ்ரீதர், தயாரிப்பு மேற்பார்வை, பூமதி - அருண, மக்கள் தொடர்பு மணவை புவன், கதை ,திரைக்கதை, வசனம், இயக்கம் A.வெங்கடேஷ்,

தயாரிப்பு V.பழனிவேல்



 



படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது...





நான் இயக்கும் முதல் பேய் படம் இது. முற்றிலும் மாறுபட்ட இது வரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான ஹாரர் படம் இது.



 



தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருக்கின்றன ஆனால் இது வழக்கமான பேய் படம் அல்ல முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை இதிலிருக்கும். பேய் பயமுறுத்தும் காட்சிகள் இருந்தாலும் காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து ஜனரஞ்சகமான படமாக உருவாக்க இருக்கிறேன்.



 



விஜய் சத்யா நடிப்பில் நான் இயக்கிய ரஜினி படப்பிடிப்பிற்கு ஒருநாள் தயாரிப்பாளரை பார்க்க விமல் வந்தார் அப்போது நான் இந்த படத்தின் ஒன் லைனை சொன்னவுடன் அங்கேயே தங்கி முழு கதையையும் கேட்டார் உடனே கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது உடனே படப்பிடிப்பை துவங்கிவிடலாம் என்று சொல்லிவிட்டார்.நாங்களும் உடனே அதற்கான வேலைகளை துவங்கி விட்டோம்.



 



மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

விரைவில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுளோம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா