சற்று முன்

'குற்றம் கடிதல் 2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!   |    மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை கூறும் 'சிங்கா'   |    ‘மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரி   |    டிஸ்கவரி புக் பேலஸ் - MLA திரு.பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார்   |    தீபாவளிக் கொண்டாட்டமாக பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் 'LIK'   |    சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியீடு!   |    கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |   

சினிமா செய்திகள்

பெரும் சாவால்களை கோரும் Eddie & வேனாம் - ஒரே படத்தில் செய்வது சாதாரமானதல்ல- டாம் ஹார்டி
Updated on : 09 October 2021

மார்வெலின் மிக முக்கியமான சூப்பர் ஹிரோ பாத்திரமாக நடிப்பது, தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக நடிகர் டாம் ஹார்டி தெரிவித்துள்ளார். உடல்ரீதியாகவும், டெக்னிலாகவும், உருவாக்கத்திலும் பெரும் சாவால்களை கோரும் மார்வெலின் இரண்டு கதாபாத்திரங்களை, ஒரே படத்தில் செய்வது சாதாரனமானது அல்ல. அதிலும் ஒரு பாத்திரம் எட்டு அடி ஆஜானுபாகுவான, பசியுடனும், கோபத்துடனும் மிரட்டும் ஏலியனாக  இருக்கும். ஆனாலும் நடிகர் டாம் ஹார்டி மீண்டும் Eddie Brock / Venom ஆக நடித்தது, மிகச்சிறந்த அனுபவமாக இருந்ததாக கூறுகிறார். Venom  படத்தின் சீக்குவலாக வரும் “Venom : Let there be Carnage”   ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை குவித்துள்ளது..



 



இப்படம் குறித்து நடிகர் டாம் ஹார்டி கூறும்போது





ஆன்மாவின் இரண்டு வெவ்வேறு பகுதிகளை,  திரையில் கொண்டுவருவது மிகுந்த  மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை  வெனோமும், எடியும் (Eddie மற்றும்  Venom ) ஒன்று தான், அவை ஒரு அசுரனாகவும், எடி எனும் மனிதனாகவும்  உண்மையால் வேறுபடுகின்றன, ஆனால் அவை எப்போதும் ஒரு தனிமனிதனுக்குள் அடங்கியுள்ள ஒரே பாத்திரம் தான். இது முழுக்க முழுக்க திரைக்கதையாளரால்  எழுதப்பட் அருமையான திரைக்கதையில் உருவாகியுள்ள வடிவம்.  அதை திரையில் உருவாக்குவது மிகச்சிறந்த அனுபவத்தை சந்தோஷத்தையும் தருகிறது. இந்த இரு பாத்திரங்களை ஏற்கும் சவாலில், என்னால்  என்ன செய்ய முடியும் என்று முயன்று பார்க்க அதிகம் விரும்புகிறேன் என்றார்.



 





மிகுந்த நுண்ணுனர்வுடன் உருவாக்கப்பட்ட திரைக்கதை, மாயாஜாலத்தை கண் முன் நிறுத்தும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், மிகத்திறமையாக பாத்திரத்தை கையாண்ட டாம் ஹார்டியின் நடிப்பு, என அனைத்தும் இணைந்து,  2018 ஆம் ஆண்டில் வெனோம்(Venom) உலகமெங்கும் பார்வையாளர்களின் இதயங்களை கவர்ந்து, மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.



 



தற்போது இதன் அடுத்த பாகத்தை ஆண்டி செர்கிஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் டாம் ஹார்டி, வூடி ஹாரெல்சன், மைக்கேல் வில்லியம்ஸ் மற்றும் நயோமி ஹாரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.



 



Sony Pictures Entertainment India நிறுவனம்  3D, IMAX மற்றும்  4DX வடிவங்களில்,  இந்தி, தமிழ்,ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என நான்கு மொழிகளில்   “Venom : Let there be Carnage”  திரைப்படத்தை வெளியிடுகிறது.



 



மஹாராஷ்டிராவில் திரையரங்குகள் அனுமதிக்கபட்டவுடன் அக்டோபர் 22 முதல் இப்படம் வெளியாகிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் அக்டோபர் 14 முதல் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா