சற்று முன்

கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியானது!   |    இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமானது எப்படி? 22 வருட திரை வாழ்க்கை பற்றி பிரபாஸ்   |    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது!   |    ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ள 'கல்கி 2898 கிபி'!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!   |    #NaniOdela2 திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது!   |    'அமரன்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் #D55   |    ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடியாக கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்!   |    அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |    ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!   |    3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!   |    நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!   |    ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வரும் 'ஐந்தாம் வேதம்’ சீரிஸ்!   |    யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |   

சினிமா செய்திகள்

பெண்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்...காரணம் சமுத்திரக்கனியா!
Updated on : 12 October 2021

தமிழ் திரையுலகின் சிறந்த நடிகரும் , இயக்குநர்களில் ஒருவராகவும் திகழ்பவர் சமுத்திரக்கனி.தற்போது சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் படம்  வினோதய சித்தம் . சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், இயக்குனர் பாலாஜி மோகன், ஹரிகிருஷ்ணன், அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள வினோதய சித்தம் படத்திற்கு N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி நாளை நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் வினோதய சித்தம் திரைப்படம் வெளியாகிறது.



 



இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிஜிட்டல் வெளியீடு  நேற்று ( 11 .10 .21 ) சென்னையில் நடைபெற்றது.



 



தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் பேசியவை,





இந்த படத்திற்கு அதிக செலவு செய்யாமல் குறைந்த செலவில் மிக அருமையாக படத்தை எடுத்து தந்துள்ளார் சமுத்திரக்கனி .இந்த படத்தை பார்த்து பெண்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுது உள்ளனர். நீங்கள் இந்த படத்தை பார்க்கும் பொழுது உங்களை அறியாமலேயே எழுந்து நின்று கை தட்டுவீர்கள்.



 





 



நடிகர் சமுத்திரகனி பேசியவை,



பாலுமகேந்திரா சார் சொன்னபடி ஒரு சாதாரண கதையை இயக்குனர் இயக்குவான் . ஒரு நல்ல கதை இயக்குனரை இயக்கும் . அதுபோல இந்தப் படம் எல்லோரையும் இயக்க வைத்து நல்ல படமாக வெளிவந்துள்ளது .



 



இந்த படம் பார்த்தால் கண்டிப்பாக உளவியல் ரீதியாக சிறு மாற்றத்தை உணர்வீர்கள். நான் படைத்த படைப்புகளில் இதுதான் சிறந்த படைப்பாக என் மனமார நம்புகிறேன். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.



 



நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியவை,



இயக்குனர் சமுத்திரகனி சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த படத்தை தயாரித்த ராமநாதன் சாருக்கும் இப்படிப்பட்ட நல்ல படத்தை வெளியிடும் ZEE 5 நிறுவனத்திற்கும் நன்றி. இப்படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மிக அருமையாக கொண்டுவந்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் .இதுவரைக்கும் சப்போர்ட் செய்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.



 



நடிகர் அசோக் பேசியவை,



வினோதய சித்தம் இது வெறும் படம் அல்ல .நம் வாழ்க்கையில் அனைவரும் கற்கவேண்டிய பாடமும் கூட. அப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தை இந்த படத்தில் சமுத்திரக்கனி கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு அருமையான படைப்பில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் சமுத்திரகனி சாருக்கும் அபிராமி ராமணநாதன் சாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



 



ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசியவை :



இந்த படத்திற்கு மிக கவனமாக ஒளிப்பதிவு செய்ய வேண்டும் அதுதான் முக்கியம் என சமுத்திரகனி தெரிவித்தார் அதுபோலவே படத்தில் காட்சிகள் அருமையாக வந்துள்ளது. இந்த படத்தை 19 நாட்களில் எடுத்து முடித்தோம். அது சமுத்திரக்கனியால் மட்டுமே முடியும் .இந்த படத்தில் நவரசம் கலந்த நடிப்பில் தம்பி ராமையா அவர்கள் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி சார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா