சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ள ZEE5 வின் 'விநோதய சித்தம்' திரைப்படம்
Updated on : 21 October 2021

தரமான மற்றும் மிகச்சரியான கதைகளை ரசிகர்களுக்கு தேர்ந்தெடுத்து அளிப்பதில்  ZEE5 ஓடிடி நிறுவனம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அற்புதமான  ஒரிஜினல்  சீரிஸ் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் அனைத்து வயது மக்களையும், தன்பால் ஈர்க்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஓடிடி தளமாக  ZEE5 மாறியுள்ளது. 



 



ZEE5 உடைய சமீபத்திய திரைப்படமான ‘விநோதய சித்தம்’ டிரெய்லரை காண: 



https://www.ZEE5.com/videos/details/vinodhaya-sitham-trailer/0-0-1z519673



 



பிரமாண்ட வெற்றி பெற்ற, நடிகர்  சந்தானம் நடித்த “ டிக்கிலோனா” திரைப்படத்திற்கு,  ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பிரமாதமான வரவேற்பை தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு மிகப்பெரும் வெற்றிப்படைப்பை கொடுத்துள்ளது. “விநோதய சித்தம்” என்ற  தனித்துவமான பெயர் கொண்ட இந்த புதிய படத்தை, விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி, முதன்மை பாத்திரத்திலும்  நடித்துள்ளார். 



 



மனிஷ் கல்ரா, Chief Business Officer, ZEE5 India  கூறியதாவது.



'தரமான படங்களை தருவதே எங்கள்  ZEE5-நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். . மற்ற நிறுவனங்களை காட்டிலும் கருத்தில் சிறந்த ஒரிஜினல் சீரிஸ் மற்றும்  பலவிதமான தரமான படங்களை பல்வேறு மொழிகளில் நாங்கள் தந்துகொண்டிருக்கிறோம். மற்றவர்களிடமிருந்து எங்களை தனித்து காட்டுவது இது தான். தொடர்ந்து  சிறந்த தமிழ் கதைகளை ரசிகர்களுக்கு  அளிப்பதன் மூலம், நாங்கள் தமிழில்  தொடர்ந்து வெற்றியை சந்தித்து வருகிறோம். டிக்கிலோனா, விநோதய சித்தம்    போன்ற எங்களது தளத்தில்  தொடர்ந்து வெளியாகும் படைப்புகளை   ரசிகர்கள்   விரும்பி பார்த்து வருவது மகிழ்ச்சி. பல்வேறு வித்தியாசமான  கதைகளை வழங்கி  ரசிகர்களை தொடர்ந்து திருப்திபடுத்துவோம் என நாங்கள் நம்புகிறோம்'. 



 



சிஜு பிரபாகரன், Cluster Head, South, ZEE5 கூறியதாவது.,



'எங்களது பார்வையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் படங்களை கொடுப்பதே,  எங்களது நோக்கம். சமீபத்திய வருடங்களில், பல மொழிகளில் முக்கியமாக தமிழில்,  மிகச்சிறந்த திறமைகள் கொண்ட கலைஞர்களுடன் பணிபுரிந்து வித்தியாசமான  படைப்புகளை பல்வேறு மொழிகளில் அளிக்கும் வாய்ப்பு எங்களுக்கு அமைந்ததில்,  குறிப்பாக தமிழில் சிறப்பான படைப்புகள் அமைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி  கொள்கிறோம். டிக்கிலோனா திரைப்படத்திற்கு மிகபெரிய வரவேற்பு கிடைத்தது.  தற்போது விநோதய சித்தம் திரைப்படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதை பார்ப்பதில்  எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் காத்திருங்கள், இன்னும் பல  சுவாரஸ்யமான திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன'. 



 



நடிகர் இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாவது… 



'சில சம்பவங்களை பார்த்திருப்போம், சில சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம், சில சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்போம், ஆனால் சம்பவங்கள் நடத்தப்படுகிறது.  அப்படி நடத்தப்பட்ட மாபெரும் வெற்றிச்சம்பவம் தான் “விநோதய சித்தம்” காலத்திற்கு நன்றி





தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா,முனீஷ்காந்த், தீபக் தின்கர், ஷெரினா,  சஞ்சிதா ஷெட்டி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது



 



படத்தில் குறிப்பிடத்தக்க வகையில், பணியாற்றியுள்ள திறமை மிகு தொழில்நுட்ப  கலைஞர்களான,  ஒளிப்பதிவாளர் N.K. ஏகாம்பரம், இசையமைப்பாளர் C சத்யா மற்றும் படத்தொகுப்பாளர் A.L. ரமேஷ் ஆகியோரின் பணி படத்தில் இயக்குனர்  சமுத்திரகனியின் கதை சொல்லலுக்கு மிகப்பெரும் தூணாக அமைந்துள்ளது. 



 



இப்படத்தை அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள், YouTuber, மீம்  கிரியேட்டர்கள், விமர்சகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் என அனைவரும் தங்களின்  இதயப்பூர்வமான ஆதரவை தந்து, ZEE5யின் 'விநோதய சித்தம்’  திரைப்படத்தை  ரசிகர்களின் விருப்ப திரைப்படமாக, பெரும் வெற்றி திரைப்படமாக மாற்றியுள்ளனர். 



 



நீங்கள் முழுத்திரைப்படத்தை இந்த சுட்டியில் காணலாம் :



 https://www.ZEE5.com/movies/details/vinodhaya-sitham/0-0-1z519672



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா