சற்று முன்

எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |   

சினிமா செய்திகள்

சவாரி - அன்றாடம் சாலை அனுபவங்களை சித்தரிக்கும் படம்
Updated on : 24 April 2015


அன்றாடம் சாலையில் நாம் பற்பல வாகனங்களை பார்க்கிறோம். சைக்கிள் முதல் ஹம்மர் வரை ஒவ்வொரு வண்டியும் அதன் விலைக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்றாற்போல் சவாரி செய்பவருக்கு சொகுசை தரும். எனினும், ஒவ்வொரு பயணமும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும்.        


Tag Entertainment நிறுவனம் சார்பில் சர்வதேச அரங்கில் கப்பல் வணிகத்தில் புகழ் பெற்ற தொழில் அதிபர்   வெண் கோவிந்தா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் குகன் இயக்கும் திரைப்படம் ‘சவாரி’. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நாயகன் பெனிட்டோ, சனம் செட்டி,  ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ்காந்த் , கார்த்திக் யோகி, கவிதாலயா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ளனர் .


சதிஷ்குமார் கலையமைப்பில், ஒளிப்பதிவு செய்கிறார் ‘பரதேசி’ புகழ் ஒளிப்பதிவாளர் செழியன், அமரர் கிஷோர் T.E படத்தொகுப்பில், சாருகேஷ் சேகர் வரிகளில் விஷால் சந்திரசேகர் ‘சவாரி’ திரைப்படத்திற்கு  இசையமைக்கிறார்.


“ நாம் அன்றாடம் தெருவிற்கு தெரு, சாலைக்கு சாலை பார்க்கும் ஒரு விஷயத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம். க்ரைம் த்ரில்லர் பாணி படங்களில் இதுவரை தொட்டிடாத ஒரு புதிய கதைகளத்தை கொண்டதுதான் ‘சவாரி’.


 


 


நாளைய இயக்குனர்-3 நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் சார் மற்றும் கமல் ஹாசன் சார் அவர்களிடம் விருது வாங்கினேன். என் முதல் படத்தை இவர்கள் இருவருக்கும் திரையிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன், பாலசந்தர் சார் இன்று நம்மிடையே இல்லை எனினும் அவர் எனக்கு அளித்த கௌரவத்தை ‘சவாரி’ காப்பாற்றும்” என நம்பிக்கையுடன் கூறினார்  அறிமுக இயக்குனர் குகன் சென்னியப்பன்.


 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா