சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் தனுஷின் 'வாத்தி'
Updated on : 20 September 2022

பிரபல தயாரிப்பாளரான  'சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' சூர்யதேவர நாக வம்சி, ' ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்' சாய் சௌஜன்யாவுடன் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் நடித்துள்ளார். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் படத்தை வழங்குகின்றனர். வெங்கி அட்லுரி  எழுத்தாளர் மற்றும் இயக்குனராக பணியாற்றுகிறார். சம்யுக்தா மேனன்  முன்னணி கதாநாயகியாக நடிக்கிறார்.



 



இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் வெளியீட்டு நாளை இன்று அறிவித்திருந்தனர். மேலும்  டிசம்பர் 2ம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழில் உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். அந்த அறிவிப்பு  புகைப்படத்தில், தனுஷ் ஒரு மேஜையில் அமர்ந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் தன் விரலை மேல் நோக்கி உயர்த்தி, படத்தின் வெளியீட்டு  நாளை காட்டுவது போல் இருந்தது.



 



தனுஷின் பின்புறம் உள்ள கரும்பலகையில், பல்வேறு கணித சமன்பாடுகள் மற்றும் அவரது அருகில் ஒரு புத்தகமும் வைக்கப்பட்டிருந்தது. தனுஷ் தன்னுடைய சாதாரண தோற்றத்தில் மிக எளிமையாக காணப்பட்டார். தேதியை குறித்துக் கொள்ளுங்கள், வாத்தி வருகிறார் பாடம் எடுக்க, 2ம் டிசம்பர் 2022 முதல் என்பதனை படக்குழுவினர் அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருந்தனர்.



 



வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பானது முற்றிலும் முடிவடைந்து, தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த திரைப்படம். சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரகனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, ' நான் கடவுள் ' ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



ஜே யுவராஜ், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் GV பிரகாஷு டன் இணைந்து இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தின் தொகுப்பாளராகவும், அவிநாசி கொள்ளா படத்தின் ப்ரொடக்ஷன் டிசைனர் ஆகவும், வெங்கட் அவர்கள் இயக்கத்தில் சண்டைக்காட்சிகள் உருவாகி உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா