சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

'இஷ்க்' படத்தின் தழுவல் தான் 'ஆசை' திரைப்படம்
Updated on : 22 September 2022

'ஆசை'  கதிர்- திவ்யபாரதி  நடிப்பில் 'ஜீரோ' படப்புகழ் இயக்குநர் ஷிவ் மோஹா இயக்கத்தில் ஈக்ல்'ஸ் ஐ புரொடக்‌ஷன் (Eagle's Eye Production) தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம். இந்த படத்திற்கு இசை ரேவா, ஒளிப்பதிவு பாபு குமார் IE , எடிட்டிங் R. சுதர்சன், கலை S. ராஜா மோகன்.



 



மலையாளத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற 'இஷ்க்' படத்தின் தழுவல் தான் 'ஆசை' திரைப்படம் ஆகும். இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. 



 



தயாரிப்பாளர்கள் ரமேஷ் பிள்ளை, சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் படம் குறித்து பேசுகையில், "இது போன்ற இளமை ததும்பும் அணியுடன் வேலை பார்ப்பது என்பது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அதுதான் இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை சீக்கிரம் முடிக்க உதவியது. இந்தப் படத்தில் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றிய பெரும்பாலானோர் என்னுடைய கல்லூரி கால நண்பர்கள் மற்றும் 'ஜீரோ' படத்தில் பணியாற்றியவர்கள் என்பதால் எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்தது. 



 



டெட்லைனுக்குள் வேலை சரியாக முடிக்க வேண்டும் என்று அனைவரும் போட்டி போட்டு கொண்டு வேலை பார்த்துள்ளோம். 'சுழல்' படத்தின் மூலம் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கதிர் கொண்டுள்ளார்.  இந்தப் படத்திலும் பாராட்டுதலுக்குரிய சிறப்பானதொரு நடிப்பை கொடுத்துள்ளார். திவ்யபாரதியும் குறைந்த காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். படத்தில் அவரது நடிப்பும் முக்கியமான ஒரு அங்கம். 



 



இயக்குநர் ஷிவ் மோஹா தன்னுடைய திரைக்கதையை படமாக்குவதில் திறமையான ஒருவர். தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் தியேட்டரில் படம் வெளியாக இருக்கும் தேதி ஆகியவை பற்றி அறிவிப்பு வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளனர். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா