சற்று முன்

'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |    இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது 'ஆபிரகாம் ஓஸ்லர்'!   |    அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கும் அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படம்!   |    தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் Behindwoods   |    டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள் - நடிகர் கலையரசன்   |    பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் - நடிகர் ஜெகன்   |    பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!   |    பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில் - எஸ்.எஸ்.கார்த்திகேயா   |    திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட 'திருட்டு பாடம்' டீஸர்   |    காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும் - நடிகை ஆண்ட்ரியா   |    பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |   

சினிமா செய்திகள்

கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் 'ஜப்பான்' படத்தின் சிறப்பு டீசர் வெளியீடு!
Updated on : 25 May 2023

நாயகன் கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் 'ஜப்பான்' படத்தின் சிறப்பு டீசரை வெளியிடுவதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெரு மகிழ்ச்சி அடைகிறது. 



 



சமூக அக்கறையுள்ள கதைகளை சுவாரசியமாகச் சொல்லும் திறமை கொண்ட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற 'ஜோக்கர்' படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோருடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார்.



 



தனது பொழுதுபோக்கு மற்றும் தனித்துவமான திரைப்படங்கள் மூலம் மீண்டும் மீண்டும் முத்திரை பதித்து வருகிறார் நடிகர் கார்த்தி. தற்போது தனது 25வது படமான 'ஜப்பான்' மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தைத் தரவுள்ளார். அவரது திரைப் பயணத்தின் இந்த  புதிய அத்தியாயம் திரைப்பட ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தும்படி உருவாகி வருகிறது. 



 



இன்று, (மே 25) நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, எங்கள் தயாரிப்பு நிறுவனம், ஜப்பான் திரைப்படத்தின் சுவாரசியமான சிறப்பு முன்னோட்டத்தை வெளியிடுகிறது. பரபரப்பான இந்த டீஸர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். 



 



அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான சுனில் இந்தத் திரைப்படம் முலம் தமிழில் அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்திய வெற்றிப் படங்கள் பலவற்றின் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்து வருகிறார். இந்திய சினிமாவின் முக்கியமான, முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களில் ஒருவரான ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படக்குழுவினர் உற்சாகமாக படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர்.



 



ஜப்பான் பிரம்மாண்ட தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா