சற்று முன்

'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |    இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது 'ஆபிரகாம் ஓஸ்லர்'!   |    அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கும் அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படம்!   |    தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் Behindwoods   |    டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள் - நடிகர் கலையரசன்   |    பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் - நடிகர் ஜெகன்   |    பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!   |    பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில் - எஸ்.எஸ்.கார்த்திகேயா   |    திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட 'திருட்டு பாடம்' டீஸர்   |    காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும் - நடிகை ஆண்ட்ரியா   |    பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |   

சினிமா செய்திகள்

மிரள வைக்கும் மோஷன் வீடியோவுடன் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
Updated on : 28 May 2023

குளோபல் ஸ்டார்  நடிகர் ராம் சரண், 'வி மெகா பிக்சர்ஸ்' என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளார்.  தனது நண்பரான விக்ரம் ரெட்டியின் UV கிரியேஷன்ஷுடன் இணைந்து ரசிகர்களுக்கு தனித்துவமான கதைகளை அளிப்பதுவும்,  அதே வேளையில், திரையுலகில் புதிய திறமைகளை உருவாக்குவது மற்றும் ஊக்குவிப்பதுவே இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்பது தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற ப்ளாக்பஸ்டர் படைப்புகளை வழங்கிய  தனித்துவமான தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள் இணைந்து தங்களது முதல் பிரமாண்ட படைப்பை அதிரடியாக அறிவித்துள்ளனர்.



 



'வி மெகா பிக்சர்ஸ்' மற்றும் 'அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்' ஆகிய நிறுவனங்கள்  தங்களது முதல் திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தை இணைந்து  வழங்குவதில் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த கூட்டணியின் இந்த முதல் முயற்சியில், திறமையான நடிகர்கள் மற்றும் திறமையான  தொழில் நுட்ப குழுவினருடன் ஒரு சிறந்த நட்சத்திரக் குழுவாக இப்படம் இருக்கும் என ரசிகர்களிடம் உத்தரவாதம் அளிக்கும்  வகையில்,  இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் வம்சி கிருஷ்ணா  இயக்குவதாக அறிவித்துள்ளனர், மேலும் டைனமிக் ஹீரோ நிகில் சித்தார்த்தா மற்றும் மூத்த நடிகர் அனுபம் கெர் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 



 



அனைவராலும் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பு, குளோபல் ஸ்டார் ராம் சரண் அவர்களின் வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ஆகியவற்றின் சமூக ஊடக கணக்குகள் வழியாக அழகான வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. 



 



இந்திய பார்வையாளர்களை மீண்டும் ஒரு பெரும் சகாப்தத்திற்கு அழைத்துச் சென்று அவர்களின் இதயத்தைத் தொடும் அளவிற்கு ஒரு அனுபவத்தை இப்படம் வழங்கும்.  லண்டனில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டீசர் படத்தின் களத்தை சொல்வதாக அமைந்துள்ளது. தி இந்தியா ஹவுஸைச் சுற்றி அரசியல் கொந்தளிப்பு நிலவும் சூழலில்,  ஒரு காதல் கதையை இப்படம்  சொல்கிறது. எரியும் இந்தியா ஹவுஸின் பிரமாண்ட காட்சியுடன் இந்த டீசர் முடிவடைகிறது. 



 



வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இடையேயான கூட்டணி இந்திய திரையுலகில் மிக சக்திவாய்ந்த கூட்டணியின் துவக்கத்தை குறிக்கிறது.



 



குளோபல் ஸ்டாராக அறியப்படும் ராம் சரண் தேசத்தை பெருமைப்படுத்தி மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் கொண்ட சினிமாவை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன்  சிறந்த தயாரிப்பாளராக இருப்பார் என்று அபிஷேக் அகர்வால் பாராட்டியுள்ளார்.



 



இந்திய சினிமாவை மட்டுமின்றி உலகையே அதிர வைக்கும் இந்த அற்புதமான திரைப்படம்  குறித்த கூடுதல் அறிவிப்புகளுக்கு  அனைவரும் காத்திருக்கவும். விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அவை வெளியாகும்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா