சற்று முன்

ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் ஜவான் படத்தின் 'ஆராராரி ராரோ' இசை வீடியோ!   |    மீண்டும் போலீஸ் அதிகாரியாக 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!   |    மலையாள திரைஉலகில் அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் 'லைக்கா நிறுவனம்'   |    ரன்பீர் கபூரின் பிறந்தநாள் சிறப்பாக, அனிமல் டீஸர் வெளியிடப்பட்டது!   |    தணிக்கைக் குழு அதிகாரிகளிடமிருந்து 'யு' சான்றிதழுடன் பாராட்டையும் பெற்ற '800' திரைப்படம்!   |    என்னை நான் புரிந்து கொள்ள இந்த படம் உதவி இருக்கிறது” - நடிகர் விதார்த்   |    'செவ்வாய்கிழமை' ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். வித்தியாசமான படம்   |    அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் பாலாவின் அடுத்த படைப்பு !   |    தன் பாலின சேர்க்கையாளர்களின் உணர்வுகளை கூறும் படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'   |    ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்டம்!   |    'சந்திரமுகி 2' க்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ்!   |    ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பிரமாண்டமான புதிய திரைப்படம்!   |    திரைப்படம் நடிக்காமல் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? - சுப வீரபாண்டியன்   |    வேல்ஸ் சர்வதேச விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஷாட் பூட் த்ரீ' பட நடிகர்கள்!   |    துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படப்பிடிப்பு ஆரம்பம்!   |    நவரசநாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர் தான் - இயக்குனர் ஜெயமுருகன்   |    'ஜவான்' திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்த ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை   |    இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூறவாளியாக அடித்து தூள் கிளப்பி வரும் 'ஜவான்'   |    'ஜவான்' படத்திற்காக டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!   |    ஸ்ருதிஹாசன் - கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய இசை படைப்பு   |   

சினிமா செய்திகள்

தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் “ஹர்காரா” ஃபர்ஸ்ட் லுக்!
Updated on : 03 June 2023

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ அவரே நடித்து இயக்கியிருக்கும் ஹர்காரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக்  கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தமிழ்நாடு தபால் துறை தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார். 



 



நாயகனின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் எனும் டேக்லைனுடன், வெளியாகியிருக்கும் “ஹர்காரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  மேலும் படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது ஃபர்ஸ்ட்லுக். 



 



வி 1 மர்டர் கேஸ் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ  இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையைச் சொல்லும் பின்னணியில் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 



 



தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும்,   அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின்  கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது. 



 



படத்தினால் ஈர்க்கப்பட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்நாடு தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி சாருகேசி வெளியிட்டார். 



 



மேலும் படம் குறித்து அவர் கூறுகையில்.., ". பல நூற்றாண்டுகளாக தகவல் தொடர்புக்கான   ஒரு ஊடகமாக சேவை செய்யும் அஞ்சல் துறை, நமது குடிமக்களின் இதயங்களில் எப்போதும் சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. தபால்காரர்களின் சிறப்பான பங்களிப்பை கவுரவிப்பதற்கும், அவர்களின் பயணம், சவால்கள் மற்றும் வெற்றிகள் குறித்து வெளிச்சமிட்டு காட்டுவதற்கும் இந்த திரைப்படம் ஒரு வாய்ப்பாகும். இப்படிப்பட்ட ஒரு சிறந்த படைப்பு மிகப்பெரிய  வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சினிமா முயற்சியானது, நமது அஞ்சல் துறையின் முக்கியத்துவம் மற்றும் தபால்காரர்களால் ஆற்றப்படும் தன்னலமற்ற சேவையைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு  தெரியப்படுத்தும் என்றார்.



 



இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக  நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி  நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 



 



இப்படத்தின் இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா