சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

அதிரடி ஆக்சன் அதகளத்துடன் வெளியானது பிரபாஸின் 'சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்' டிரெய்லர்!
Updated on : 01 December 2023

ஹோம்பாலே பிலிம்ஸ் சலார்: பார்ட் 1 சீஸ்ஃபயர் படத்தின் டீசர் வெளியான  நாளிலிருந்தே படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது சிறு சிறு அப்டேட்களால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கி வந்த தயாரிப்பாளர்கள்  தற்போது,  இறுதியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்  படத்தின் அதிரடியான ஆக்சன் மிகுந்த டிரெய்லரை, இரவு 7:19 மணிக்கு வெளியிட்டனர்.



 



பிரபாஸ் நடிப்பில்  ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும்  சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்  படத்தின் டிரெய்லர் முழுக்க முழுக்க திரில், அதிரடி மற்றும் ஆக்சன் கலந்த பெரிய விருந்தாக வெளி வந்துள்ளது. பிரசாந்த் நீலின் ஆக்ஷன் நிறைந்த உலகத்தைப் பற்றிய ஒரு பரந்த பார்வையை அளிக்கும் இந்த டிரெய்லர்,  உண்மையிலேயே பார்வையாளர்களாகிய நம் கற்பனையைத் தாண்டி, ஒரு பெரும் உலகைக் காட்டுகிறது. நடிகர் பிரபாஸின்  முத்திரையான அதிரடி  மாஸ் ஆக்ஷன் என அனைத்தையும் இந்த டிரெய்லர் அட்டகாசமாக காட்சிப்படுத்துகிறது.  சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று டிரெய்லர் உறுதிப்படுத்துகிறது.



 



ஹோம்பாலே பிலிம்ஸ், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்   படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா