சற்று முன்

'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |    'சீயான் 62' வில் ஒப்பந்தமாகியுள்ள துஷாரா விஜயன்!   |    நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக மாறியுள்ள 'மயோன்' பாடல்!   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'கேன் (can)' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அட்டகாசமான 'புஷ்பா: தி ரூல்' டீசர் வெளியாகவுள்ளது!   |    நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி...20 வருட கனவு தற்போது நினைவாகியது!   |    குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்கூல் லீவ் விட்டாச்சு' ஆல்பம் பாடல்!   |    'தி ஃபேமிலி ஸ்டார்' ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர் - தயாரிப்பாளர் தில் ராஜு   |    அரண்மனை முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை!   |    நானி 33 படத்தின் மூலம் மீண்டும் இணைந்த தசரா கூட்டணி!   |    'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |   

சினிமா செய்திகள்

சந்தானம் புதிய படத்தின் முதல் பார்வையை கமல்ஹாசன் வெளியிட்டார்
Updated on : 28 February 2024

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை', உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. 



 



 



'இங்க நான் தான் கிங்கு' என்ற இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை போஸ்டரையும் உலகநாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். 



 



 



அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 



 



 





 



 



சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.



 



 



பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். 



 





 



 



ஒளிப்பதிவு - ஓம் நாராயண் எடிட்டிங் - எம். தியாகராஜன் 

கலை - எம். சக்தி வெங்கட்ராஜ் ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல். 



 



 



பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் - பாபா பாஸ்கர். 



 



 



சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை உலகநாயகன் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். 



 



 



கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கிறார். 2024 கோடை விடுமுறை காலத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா