சற்று முன்

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்   |    இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |   

சினிமா செய்திகள்

புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!
Updated on : 22 April 2024

இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு 'கல்கி 2898 AD'. ஒரு அற்புதமான புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக தயாராகி இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் தருணத்தில், 'கல்கி 2898 AD' படத்தில் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் ஏற்றிருக்கும் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிடும் நிகழ்வு, மத்திய பிரதேச மாநிலத்தின் புனித நகரமான நெமாவார் தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமையப் பெற்றிருக்கும் வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது ரசிகர்களும், படக்குழுவினரும்,  ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.



 



அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான இடமாக நெமாவாரை தேர்ந்தெடுத்தது.. இக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இன்றும் அஸ்வத்தாமா.. நெமாவார் மண்ணில் நடமாடுவதாக மக்களிடத்தில் நம்பிக்கை இருக்கிறது.



 



இதனிடையே அமிதாப்பச்சன் தனது கதாபாத்திரத்தின் ஒரு காட்சியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதுடன்,  '' இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.‌ தரமான தயாரிப்பு.. நேர்த்தியான முறையில் செயல்படுத்தும் திட்டம்.. நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாதது'' என்றும் பகிர்ந்து கொண்டார்.



 



'கல்கி 2898 AD' கடந்த ஆண்டு சான் டியாகோ காமிக் கானில் அதன் அற்புதமான அறிமுகத்திற்குப் பிறகு அதிர்வலைகளை உருவாக்கி, உலக அளவில் கவனத்தைக் கவர்ந்து, அங்கீகாரத்தை பெற்றது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில்,, 'கல்கி 2898 AD'  ஒரு பன்மொழி திரைப்படமாக தயாராகிறது. இந்தத் திரைப்படம் புராணங்களால் ஈர்க்கப்பட்டு எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைவு கதையாக உருவாகி இருக்கிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா