சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை விஜய் மில்டன் சார் கொடுத்துள்ளார் - நடிகை மேகா ஆகாஷ்!
Updated on : 29 July 2024

ஸ்டைலிஷ் கதாநாயகி, பக்கத்துவீட்டுப் பெண் என பலதரப்பட்ட  கதாபாத்திரங்களுக்குப் பொருந்திப் போகும் கதாநாயகிகளை தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளத்தோடு வரவேற்பார்கள். அப்படிபட்ட திறமையான நடிகைகளில் மேகா ஆகாஷும் ஒருவர். ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார்.



 



படம் குறித்தானத் தனது அனுபவங்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார், “விஜய் மில்டன் சார் எப்போதும் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரங்களைத் தருவார். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்காக என்னை அணுகியபோது, கதையைக் கேட்கும் முன்பே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் எனக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைக்கிறது என்பதுதான். நான் நினைத்தது போலவே, படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. நடிகராக என் திறமையை வெளிப்படுத்த இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. 



 



என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் மில்டன் சார் கொடுத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மேலும், இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும், குறிப்பாக விஜய் ஆண்டனி சார், விஜய் மில்டன் சார் மற்றும் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.



 



’மழை பிடிக்காத மனிதன்’ படத்தை இயக்குநர் விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா