சற்று முன்

முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது   |    ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’   |    டார்க் சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் ‘மண்டவெட்டி’ – படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு   |    Insomniac’s Dream Creations தயாரிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பூஜையுடன் தொடங்கியது!   |    மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |   

சினிமா செய்திகள்

ஆண்ட்ரியாவின் இந்த பதிலால் ஏமாற்றம் அடைந்த நிருபர்கள்!
Updated on : 02 September 2024

நேற்று சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக் ரேட்ஸ் (Shecratas) கடை திறப்பு விழா நடைபெற்றது. 



 



நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். இந்தக் கடை பெண்களுக்கான அனைத்து விதமான பிராண்டுகளின் உள்ளாடைகளும் கிடைக்கும் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.



 



கடையைத் திறந்து வைத்து ஆண்ட்ரியா பேசும்போது,



"நான் இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன்.இதை வடிவமைத்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. இது மாறிவரும் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று. இது நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஒன்று.இது பெண்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது.ஆண்கள் தங்கள் உறவினர்களுக்கு, பெண் நண்பர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்." என்றார். 



 



ஆண்ட்ரியாவிடம் ஒரு நிருபர் ஹேமா கமிஷன் பற்றியும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதை பற்றி ஒரு கேள்வி எழுப்பினார் .அதற்கு "அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் "என்று தவித்துவிட்டார். நோ கமெண்ட்ஸ் என்பது அவரது பதிலாக இருந்தது குறித்து நிருபர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எப்போதும் தைரியமாக கருத்துக்களை வெளியிடும் ஆண்ட்ரியா இப்படிக் கூறியது நிருபர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது .



 



இந்த கடைத் திறப்பு விழாவினை ஒட்டி ஏராளமான பிரமுகர்கள் வந்து  இதன் நிறுவனர் ஹனீப் அவர்களுக்கும் புதிய நிறுவனத்திற்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா