சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!
Updated on : 11 September 2024

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.



 



தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் , பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு வெற்றிப்படமானது .



 



தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு உலகளவில் நூறு கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.



 



இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியானது.



 



வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.



 



வட இந்திய ஊடகங்கள் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கம், சீயான் விக்ரம் , பார்வதி மற்றும் சக நடிகர்களின் நடிப்பு, ஜீவி பிரகாஷ் இசை  என அனைத்தையும் பாராட்டி வருகின்றனர்.



 



பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் தங்கலான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.



 



இந்தியா முழுவதும் தங்கலான் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் படத்தின் வெற்றியும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா , பா.இரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் மற்றும் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா