சற்று முன்

படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |    படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்   |    புத்தாண்டு தினத்தில் வெளியாகயிருக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர்!   |    8 எப்பிசோட்களாக உருவாகும் மிஸ்டரி திரில்லர் இணையத் தொடர் ‘ராகவன் : Instinct'   |    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'ரெட்ரோ' பட சூர்யாவின் தோற்றம்!   |    சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'   |    இயக்குநர் செல்வராகவன் 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் 'மெண்டல் மனதில்'   |    நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி ஃபேண்டஸி திரைப்படம் 'பரோஸ்'   |    சில திட்டங்கள் உங்களை உற்சாகப்படுத்தினாலும் பயமுறுத்தவும் செய்யும் அதுபோல கேம் சேஞ்சர்...   |    கதை, சினிமாவுக்கு எப்படி முக்கியமோ, அதே போல் வாழ்க்கைக்கும் முக்கியம் - எழுத்தாளர் கமலா   |    நடிகர் ஆர்யா அண்ணாநகரில் திறந்து வைத்த பிரியாணி கடை!   |    'THE LEGEND OF CHANDRABABU’ நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!   |    ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும் - தயாரிப்பாளர் சமீர்   |    ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே 'கூரன் ' படத்தின் கதை!   |    2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம்......#ஜீவிபி100 எனும் சாதனை பயணம்!   |   

சினிமா செய்திகள்

’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம்!
Updated on : 27 November 2024

வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே லட்சியமாக கொண்டு ஒருவர் பயணித்திருக்கிறார். 



 



ஆம், தனிமனித எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் இவ்வுலகில், மற்றவர்களைப் பற்றி சிந்தித்ததோடு, சாதனையாளர்களை அங்கீகரித்து கெளரவிக்க வேண்டும் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்தவர் தான் திரு.ஜான் அமலன். திரைத்துறை மட்டும் இன்றி தொழில், விளையாட்டு, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும், என்பதை கனவாக கொண்டிருந்தவர், ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள் ‘ (INDIAN AWARDS) என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்.



 


இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் ’ (INDIAN AWARDS) நிகழ்ச்சியின் 3 வது சீசன் வரும் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நிகழ்வாக, சென்னை, சேத்துபட்டில் உள்ள ‘லேடி ஆண்டாள்’ அரங்கில் நடைபெறுகிறது. இதில், சினிமாத்துறையில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 60 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும், அரசியல், தொழில், விளையாட்டு, மருத்துவம், கல்வி, ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 30 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.



 



மேலும், இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நடிகரும், அரசியல் தலைவருமான திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவாக ‘கேப்டன் விஜயகாந்த்’ என்ற பெயரில் சினிமாத்துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல், சினிமாத்துறையில் கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு.டைமண்ட் பாபு அவர்களின் 40 வது திரையுலக வாழ்க்கையும் கொண்டாடப்படுகிறது.



 


விருதுகள் வழங்குவது மட்டும் இன்றி இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்க இருக்கும் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், இத்தகைய பணியை தமிழக அரசு வழிகாட்டுதல்படி செய்கிறது.



 



‘இந்தியன் விருதுகள் 2024 ’ (INDIAN AWARDS 2024) நடைபெறும் அதே மேடையில், இந்திய அளவில் மிக முக்கியமான அழகுப் போட்டியான ’Mr Miss & Mrs தமிழகம் 2024 - சீசன் 4’ நடைபெற உள்ளது. 



 



3வது ஆண்டாக ‘இந்தியன் விருதுகள் 2024 ’ நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தும் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) நிறுவனம், கடந்த மூன்று வருடங்களாக ’Mr Miss & Mrs தமிழகம்’ அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், வட இந்தியாவில் இத்தகைய அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்த நிலையை, தனது இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிருவனம் மூலம் மாற்றியிருக்கும் திரு.ஜான் அமலன், அவர்கள் கோவாவில் சொகுசு கப்பலில் இந்த அழகுப் போட்டியை இரண்டு முறை நடத்தி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 



விருது விழா, அழகுப் போட்டிகள் ஆகியவற்றை தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் வித்தியாசமாக நிகழ்த்தி மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையின் கவனம் ஈர்த்த திரு.ஜான் அமலன், அவர்கள் தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால்பதிக்கிறார். இதற்காக ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பவர், இந்நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறார்.



 



பெண் சிங்கம் மற்றும் ஆண் சிங்கம் என்ற அர்த்தம் கொண்ட ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனத்தின் அறிமுக விழா நவம்பர் 25 சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், பி.ஆர்.ஓ சங்க தலைவர் டைமண்ட் பாபு, நடிகர் செளந்தரராஜன், நடிகைகள் கோமல் சர்மா, ஷாலு ஷம்மு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.



 


நிகழ்ச்சியில் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனர் திரு.ஜான் அமலன், சினிமாத்துறையில் தயாரிப்பாளராக கால்பதிப்பது பற்றி பேசுகையில், “நான் கல்லூரி படிக்கும் போதே, சினிமா பிரபலங்கள் மற்றும் பிறத்துறைகளில் சாதிப்பவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அவர்களை மிகப்பெரிய அளவில் கெளரவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. குறிப்பாக நடிகர் விஜய் அவர்களுக்கு என் கையால் விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் தீவிர விஜய் ரசிகர் என்பதால் இதை என் லட்சியமாக கூட வைத்திருந்தேன். கல்லூரி முடித்த பிறகு என் ஆசை என்னை தொடர்ந்ததால், இத்துறையை என் எதிர்காலமாக எடுத்துக்கொண்டேன். அதன்படி, ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள்’ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கி வருவதோடு, அழகுப் போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வட இந்தியாவில் அழகுப் போட்டியை நடத்த முடியும் என்பதை முதலில் நிகழ்த்திக் காட்டியது நான் தான்.



 



விருது விழா மற்றும் அழகுப் போட்டி ஆகியவற்றுடன் நின்றுவிடாமல் இப்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால் பதிக்கிறேன். ’லையோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் சார்பில் திரைப்படங்கள் தயாரிக்க இருக்கிறேன். திறமை மிகு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதேபோல், நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் குறைந்த முதலீட்டில், தரமான மற்றும் வித்தியாசமான படைப்பாகவும் இருக்கும்.



 



நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கான கதை தேர்வில் தற்போது ஈடுபட்டுள்ளோம். எங்கள் முதல் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் ஜாலியாக பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, அனைத்து வயதினரையும் தொடர்பு படுத்தும் ஒரு திரைப்படமாகவும் இருக்கும். அப்படம் பற்றிய மற்ற தகவல்கள் இந்தியன் விருதுகள் 2024 நிகழ்ச்சி மேடையில் அறிவிக்கப்படும்.” என்றார்.



 


நடிகர் விஜய்க்கு விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள், ஆனால் அவர் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டாரா..?



 



விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்றாலும், நான் அவரது ரசிகன் தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் நடிகராக இருக்கும் போது அவருக்கு விருது வழங்க வேண்டும், என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை தான் என்னை இந்த துறையில் பயணிக்க வைத்திருக்கிறது. அதேபோல், அவர் சினிமாவில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவராக  அவருக்கு நான் விருது வழங்குவேன், என்று நம்புகிறேன். அதற்கான உயரத்தை அடைய நானும், என் நிறுவனமும் கடுமையாக உழைப்போம்.” என்றார்.



 



இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “விஜய் ரசிகராக இருந்து தற்போது தயாரிப்பாளராகியிருக்கும் ஜான் அமலன் அவருக்கு என் வாழ்த்துகள். அவர் தயாரிப்பாளராக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் சுயநலமும் இருக்கிறது. அதற்கு காரணம், அவர் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர். அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகவும், விருது விழா உள்ளிட்ட நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்துவதில் கெட்டிக்காரர். அவர் சினிமாத்துறையில் நிச்சயம் வெற்றி பெறுவார், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.



 



’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் தயாரிக்க இருக்கும் முதல் திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.



 



விருதுக்குரியவர்களை தேர்வு செய்வதற்காக சினிமா, தொழில், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறவர்கள் பற்றிய மக்கள் கருத்து, அவர்கள் பற்றி சமூக வலைதளப்பங்களில் வெளியாகும் விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் உள்ளிட்டவைகளை வைத்து இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா