சற்று முன்

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |   

சினிமா செய்திகள்

நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!
Updated on : 16 August 2025

நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது வைரலாகி வருகிறது. மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து, படம் மெகா ஹிட்டாகும் என்கிற எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது.



 



ரசிகர்களால் பெரிதும்  விரும்பப்படும் நிவின் பாலி – நயன்தாரா எனும் நட்சத்திர ஜோடி மீண்டும் இணையும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் ( George Philip Roy)மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். Maverik Movies Pvt. Ltd தயாரிப்பில், நிவின் பாலியின் ஹோம் பேனரான Pauly Jr. Pictures மற்றும் Rowdy Pictures Pvt. Ltd. இணைந்து தயாரிக்கின்றன.



 



நேற்று வெளியான அசத்தலான டீசர், பள்ளி வாழ்க்கையின் வண்ணமயமான வாழ்க்கையையும், பரபரப்பான உலகையும் சித்தரிக்கிறது. மேலும் மாணவர்களை மையமாகக் கொண்டு கதை நகரும் என்பதை டீசர் வெளிப்படுத்தியுள்ளது. காமெடி, வேடிக்கை, அதிரடி, சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் கலந்த கமெர்ஷியல் எண்டர்டெய்னர் என டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



 



நிவின் பாலி தனது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும்  துறுதுறுப்புடன் குறும்பு மிக்க  ஹரி என்ற கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். அதேசமயம், நயன்தாரா ஒரு வலிமையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது கதைக்கு பெரும் சுவாரஸ்யத்தை சேர்க்கும் அம்சமாக அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளியாகிய ப்ளாக்பஸ்டர் “லவ் ஆக்சன் டிராமா” திரைப்படத்திற்குப் பின், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிவின் பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணைந்துள்ள இந்தப்படம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.



 



படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜனகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, கீரண் கொண்டா, காமருதீன் K உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.



 



மேலும், மலையாளத் திரையுலகில் இருந்து அஜு வர்கீஸ் (Aju Varghese), ஷரஃபுதீன் (Sharafudheen), சுரேஷ் கிருஷ்ணா, மல்லிகா சுகுமாரன், லால், ஜகதீஷ், ஜானி ஆன்டனி ஆகியோர் இணைந்துள்ளதால், இந்த ஆண்டு வெளிவரும் மிக அதிக நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா