சற்று முன்

நான் இயக்குனரானால் யோகி வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் - நடிகர் ரவி மோகன்   |    இந்தக் கதைக்கும் பாக்யராஜ் சாரின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை...   |    எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!   |    மகளிர் நலனுக்காக மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்ச்சி பாடல்!   |    தமிழக முதல்வரை சந்தித்த சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!   |    ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது!   |    25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!   |    45 நாள் ஆக்ஷன் மராத்தான் - இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார் 'ஜான் விக்’ புகழ் JJ Perry!   |    50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று புதிய வரலாறு படைத்த ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’   |    ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!   |    அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'வீர வணக்கம்' பட டிரெய்லர்!   |    30 வருடங்களுக்கு மேலாக சாதனை புரிந்து வரும் நடிகை குட்டி பத்மினிக்கு சாகித்ய அகாடமி விருது!   |    'குற்றம் கடிதல் 2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!   |    மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை கூறும் 'சிங்கா'   |    ‘மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரி   |    டிஸ்கவரி புக் பேலஸ் - MLA திரு.பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார்   |    தீபாவளிக் கொண்டாட்டமாக பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் 'LIK'   |    சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியீடு!   |    கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |   

சினிமா செய்திகள்

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!
Updated on : 26 August 2025

பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது. முடிவில்லாத கடல், அமைதி, தொலைவு, சொல்லப்படாத காதல் எனப் பல விஷயங்கள் இதில் இருக்கிறது. இவற்றை எல்லாம் பேசும் கடலோர காதல் கதை ’18 மைல்ஸ்’ என்கிறது குழு. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான இந்த உணர்வு

உங்கள் மனங்களை ஊடுருவி ஆன்மாவைத் தொடும். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார்.



 



கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரியும். நாஷின் படத்தொகுப்பும் எம். தேவேந்திரனின் கலை வடிவமைப்பும் நம் உணர்வுகளை தாலாட்டும்.



 



இவற்றை எல்லாம் தாண்டி நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னாவுக்கு இடையிலான காதல் காலம் தாண்டியது. அவர்களின் பார்வையும் மெளனமும் கவிதையாக பார்க்கலாம். இசையின் கடைசி ரிதம் வரையிலும் பாடலை நம் மனதால் உணரலாம்.



 



இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது “காதல் உலகமொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லைகளும் சர்வதேச நீர்நிலைகளும் காதலுக்கு இன்னும் ஒரு தடையாகவே இருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நிகழ்வு ஒன்றை காட்சி படுத்த விரும்பினேன். தற்காலிகமாக தங்குவதற்கு இடம் தேடும் ஒரு அகதி கடலின் சட்டத்தை இயற்றுபவரின் இதயத்தில் இடம் பிடிக்கிறார். மனிதர்களின் உணர்வுகளுக்கு கடலும் அதன் அலையும் மெளன சாட்சியாக எப்போதும் இருக்கும். கடலை போலவே காதல் அழகானது. அதே சமயத்தில் கடலின் ஆழத்தை போல ஆபத்தானதும் கூட! நிலம்தான் இங்கு அரசியல். உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் நிச்சயம் இந்த கதையுடன் இணைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா