சற்று முன்

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |   

சினிமா செய்திகள்

ஆக்ரோஷமான பாடல்காட்சியோடு தொடங்கிய ‘மலையப்பன்’ படப்பிடிப்பு
Updated on : 28 August 2025

சன்லைட் மீடியா நிறுவனம் சார்பில் ஏழுமலை எஸ்.சந்திரசேகர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் குருச்சந்திரன் இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மலையப்பன்’. மதுரை மாவட்ட கிராமம் மற்றும் மக்களின் வாழ்வியல் சார்ந்த கதையாக உருவாகும் இப்படத்தின் மூலம் இயக்குநராகவும், நாயகனாகவும் அறிமுகமாகும் குருச்சந்திரன், பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 



`குருச்சந்திரன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபல இயக்குநர்கள் சுப்பிரமணிய சிவா, பேரரசு, ஷரவண சுப்பையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 



 





 



’லோக்கல் சரக்கு’ மற்றும் ‘கடைசி தோட்டா’ படங்களுக்கு இசையமைத்த வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கும் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு ரகமாக மக்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தின் பாடல் ஒன்றை பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பாட இருக்கிறார்.



 



 



சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கிய ‘மலையப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏழுமலை நகரில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் நேற்று (ஆகஸ்ட் 27) தொடங்கியது. 



 



 





 



“வேஷங்கட்டிக்கிட்டு...” என்று தொடங்கும் வீரமிக்க மற்றும் உத்வேகம் தரக்கூடிய முதல் பாடல்காட்சியோடு தொடங்கிய படப்பிடிப்பில், இணை இயக்குநர் மூதுரை பொய்யாமொழி, ஆக்‌ஷன் சொல்ல, நடன இயக்குநர் இராம்தாஸ் முருகன் நடன அமைப்பில், இயக்குநரும் கதையின் நாயகனுமான குருச்சந்திரன் சிறப்பாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்து கைதட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றார். 



 



 



படப்பிடிப்பு துவக்க விழாவில் ஏழுமலை திருவள்ளுவர் கல்லூரி தலைவர் பெருமாள், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.ஆர்.பாண்டியன், ஊரின் முக்கிய பிரபல தொழிலதிபர்கள், ஊர் பொதும்மக்கள் மற்றும் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், இணைத் தயாரிப்பாளர்கள் திருப்பூர் செ.செல்வம், கணேஷ் ஸ்டுடியோ கோபி, சா.சுப்பையா, குஜராத் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.



 



 





 



படப்பிடிப்பு தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கேமரா தடம் பதியாத இடங்களில் ஒரே கட்டமாக படமாக்கப்பட உள்ளது. குறிப்பாக இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத மதுரை பகுதிகளையும், அப்பகுதி மக்களின் வாழ்வியலையும் கமர்ஷியல் ஆக்‌ஷன் பாணியில் மட்டும் இன்றி உணர்வுப்பூர்வமாக  சொல்லும் படமாக ‘மலையப்பன்’ உருவாகி வருகிறது.



 



 



தேவராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்க, காதல் மதி பாடல்கள் எழுதுகிறார். ஜெ.சரவணன் படத்தொகுப்பு செய்ய, கிளாமர் சத்யா மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.



 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா