சற்று முன்

1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கிய பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு!   |    விஜய் சேதுபதி வெளியிட்ட அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான 'ரைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!   |    ஆக்ரோஷமான பாடல்காட்சியோடு தொடங்கிய ‘மலையப்பன்’ படப்பிடிப்பு   |    நான் இயக்குனரானால் யோகி வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் - நடிகர் ரவி மோகன்   |    இந்தக் கதைக்கும் பாக்யராஜ் சாரின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை...   |    எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!   |    மகளிர் நலனுக்காக மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்ச்சி பாடல்!   |    தமிழக முதல்வரை சந்தித்த சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!   |    ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது!   |    25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!   |    45 நாள் ஆக்ஷன் மராத்தான் - இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார் 'ஜான் விக்’ புகழ் JJ Perry!   |    50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று புதிய வரலாறு படைத்த ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’   |    ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!   |    அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'வீர வணக்கம்' பட டிரெய்லர்!   |    30 வருடங்களுக்கு மேலாக சாதனை புரிந்து வரும் நடிகை குட்டி பத்மினிக்கு சாகித்ய அகாடமி விருது!   |    'குற்றம் கடிதல் 2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!   |    மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை கூறும் 'சிங்கா'   |    ‘மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரி   |    டிஸ்கவரி புக் பேலஸ் - MLA திரு.பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார்   |    தீபாவளிக் கொண்டாட்டமாக பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் 'LIK'   |   

சினிமா செய்திகள்

1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கிய பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு!
Updated on : 29 August 2025

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும்,  மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் என அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த அவர் தனது முழு ஆற்றலையும் தந்து உழைத்து வருகிறார்.



 



மிகுந்த பெருமையுடன், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க,  விருத்தி சினிமாஸ், மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக  உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் கிளிம்ப்ஸே, ராம் சரண் மேக் ஓவர் புகைப்படங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளன.



 



இந்நிலையில், படக்குழு மைசூரில் குளோபல் ஸ்டார்  ராம் சரண் பங்கேற்க, பிரம்மாண்டமான பாடலைக் காட்சிப்படுத்த தொடங்கியுள்ளது. பிரபல நடன அமைப்பாளர் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் இசையமைத்த இந்த மாஸ் பாடல், மிகப்பெரிய அளவில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் படமாக்கப்படுகிறது. ராம் சரண் தனது தனித்துவமான கவர்ச்சி மற்றும் ஆற்றல்மிகு நடன அசைவுகளால் ரசிகர்களை கவர, இந்தப் பாடல் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும், ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டமாகவும் அமைய உள்ளது.



 



நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகத்தில் இருந்தாலும், “பெத்தி” குழுவினர் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.



 



இந்தப் படத்தில் முன்னணி கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும் ஜகபதி பாபு (Jagapathi Babu) மற்றும் திவ்யேந்து ஷர்மா ( Divyendu Sharm) முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.



 



பிரபல ஒளிப்பதிவாளர் R. ரத்தினவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.



 



பெத்தி 2026 மார்ச் 27 அன்று பான்-இந்திய ரிலீசாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா