சற்று முன்

உலகளவில் எட்டு மொழிகளில் வெளியாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்'   |    சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'   |    கறுமை அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையைக் காட்சிப்படுத்தும் ‘ஈவா’ பாடல்!   |    சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது - தேஜா சஜ்ஜா   |    சிவராஜ்குமார் நடிபில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படம்!   |    இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வரும் துல்கர் சல்மானின் 'லோகா'   |    சயின்ஸ் ஃபிக்ஷன் படமெடுத்தால் அவரை ஏலியனாக நடிக்க வைக்கலாம்... - இயக்குநர் கார்த்திகேயன் மணி   |    முதல் படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள்! - இயக்குநர் ஆர். கே. செல்வமணி   |    1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கிய பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு!   |    விஜய் சேதுபதி வெளியிட்ட அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான 'ரைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!   |    ஆக்ரோஷமான பாடல்காட்சியோடு தொடங்கிய ‘மலையப்பன்’ படப்பிடிப்பு   |    நான் இயக்குனரானால் யோகி வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் - நடிகர் ரவி மோகன்   |    இந்தக் கதைக்கும் பாக்யராஜ் சாரின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை...   |    எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!   |    மகளிர் நலனுக்காக மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்ச்சி பாடல்!   |    தமிழக முதல்வரை சந்தித்த சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!   |    ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது!   |    25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!   |    45 நாள் ஆக்ஷன் மராத்தான் - இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார் 'ஜான் விக்’ புகழ் JJ Perry!   |    50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று புதிய வரலாறு படைத்த ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’   |   

சினிமா செய்திகள்

சிவராஜ்குமார் நடிபில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படம்!
Updated on : 01 September 2025

ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் (Shivarajkumar) தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் ( Sandalwood)  பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் ( Pavan Wadeyar) இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக ( Puneeth Rajkumar.) இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும்  செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது.



 



இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3 அன்று பெங்களூருவில் துவங்குகிறது. அதன் பின் மண்டியா (Mandya) இமாச்சலப் பிரதேசம் ( Himachal Pradesh), மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.



 



பிரபல தயாரிப்பு நிறுவனம் KVN Productions இந்தப் படத்தை தயாரிக்கிறது. பவன் வடேயாருக்கு சொந்தமான Wadeyar Movies மற்றும் வெங்கட் கோனங்கி (Venkat Konanki) தலைமையிலான KVN Productions  இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.



 



சிவராஜ்குமார் நாயகனாக  நடிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக  உருவாகிறது. இதில் ஜெயராம், சாய் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே (Deshpande), பிரகாஷ் பெலவாடி (Prakash Belawadi) போன்ற மூத்த நடிகர்களும், சஞ்சனா ஆனந்த் மற்றும் தீக்ஷித் ஷெட்டி (Dheekshith Shetty) போன்ற இளம் திறமையாளர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.  



 



படம் முழுக்க வணிக அம்சங்களுடன் கூடிய கதைக்களத்தில் அதிரடி ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகிறது. இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் ( Ajaneesh Loknath) இசையமைக்கிறார். ஷஷாங்க் நாராயண் (Shashank Narayan) எடிட்டிங்கை கவனிக்கிறார். சிவராஜ்குமார் – பவன் வடேயார் (Pavan Wadeyar) – KVN Productions ஆகியோரின் முதல் கூட்டணி என்பதால், இயல்பாகவே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா