சற்று முன்
சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!
Updated on : 10 September 2025

Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோர்ட் ரூம் டிராமாவாக இப்படத்தை உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், R சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
சமீபத்திய செய்திகள்
‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்
30 ஏக்கர் பரப்பளவில், இதுவரை இந்திய சினிமா வரலாற்றிலேயே அமைக்கப்படாத மிகப் பெரிய சேரியை பாரடைஸ் படத்திற்காக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், இந்தச் சேரி உருவாக்கப்படவுள்ளது.
நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘தசரா’ மூலம் மாபெரும் வெற்றிபெற்ற திறமையான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக உருவாகிவருகிறது. அதற்காகவே மிகப்பெரிய குடிசைப்பகுதி செட் ஹைதராபாத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.
படக்குழுவின் தகவலின்படி, “பாகுபலி படத்தில் காணப்பட்ட மகிழ்மதி பேரரசை போல், இங்கு குடிசைப்பகுதி பேரரசு உருவாக்கப்படுகிறது. கதாநாயகன் குடிசைப்பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்து, பின்னர் உச்சத்துக்குச் செல்வதை படத்தில் காண்பிக்கின்றனர். அவ்வளவு பெரிய கதைப் பயணத்தை காட்டுவதற்காகவே இந்த மாபெரும் செட் அமைக்கப்படுகிறது. அந்த குடிசைப்பகுதியின் மையத்தில் ஒரு பெரிய வளைவு (Arch) இருக்கும். இதனை நாம் அண்மையில் வெளியான அறிவிப்பு வீடியோ மற்றும் போஸ்டர்களில் பார்த்தோம். அந்த வளைவு கதாநாயகனின் பேரரசின் அடையாளமாக அமையும்.” என்று கூறப்படுகிறது.
இந்த செட் அமைப்பு பாகுபலி படத்தில் காணப்பட்ட மாபெரும் மகிழ்மதி பேரரசின் அளவுக்கு இணையானதாக இருக்கும், ஆனால் இங்கு பிரமாண்ட அரண்மனைகளுக்குப் பதிலாக ஆங்காங்கே ஆர்ப்பரிக்கும் குடிசைப்பகுதிகள் காணப்படும். இதன் மூலம் ‘ஸ்லம்ஸ்களின் பாகுபலி’ செட்டை பார்வையாளர்களுக்காக படக்குழு உருவாக்கி வருகின்றனர்.
தனித்துவமான திறமை கொண்ட ஸ்ரீகாந்த் ஓடேலா, ‘தி பாரடைஸ்’ மூலமாக மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கிறார். முன்னதாக சுகுமார் இயக்கிய ‘நன்னக்கு பிரேமதோ’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ படங்களில் உதவி இயக்குநராகவும், பின்னர் இயக்குநராக தனது முதல் படமான ‘தசரா’வில் 100 கோடியை கடந்த வசூலுடன் விமர்சகர்களின் பாராட்டையும், நடிகர் நானியின் கரியரில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றார். மிகக் குறைந்த காலத்தில் சினிமா உலகில் தனக்கென முத்திரை பதித்திருக்கும் அவர், ‘தி பாரடைஸ்’ மூலம் மேலும் உயரத் தயாராகி வருகிறார்.
பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் இப்படத்திற்கு, ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். முன்னதாக அனிருத் மற்றும் அர்ஜுன் சாண்டி ஆகியோரின் குரலில் வெளிவந்த பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SLV சினிமாஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம், ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் 2026 மார்ச் 26 அன்று, உலகமெங்கும் பிரம்மாண்டமாக அளவில் வெளியிடப்படுகிறது. 8 மொழிகளில்—இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ், வங்காளம், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. உலகளாவிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, ரசிகர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கவிருக்கிறது.
அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!
பாக்யஸ்ரீ போஸ், இந்தாண்டு துபாயில் நடைபெற்ற SIIMA விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதை கைப்பற்றி, வெள்ளித்திரையில் தன் வருகையை அழுத்தமாக பதித்துள்ளார் !!
தென்னிந்திய திரைப்பட உலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போஸ், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, முழு திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார்.
தற்போது, துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் காந்தா, மேலும் ராம் பொத்தினேனி ஜோடியாக நடிக்கும் “ஆந்திரா கிங் தாலுகா” உள்ளிட்ட பல்வேறு படங்கள் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன. இந்த வரிசையோடு, தென்னிந்தியாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள அவர் தன்னம்பிக்கையுடன் வலம்வருகிறார்.
ஔரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ, மிகச்சிறந்த நடிகையாக வேண்டுமென்கிற தன் கனவை அடைய, விடாமுயற்சியுடன் உழைத்து வருகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பை வழங்க வேண்டும் என்ற ஆவலுடன் உழைத்து வருகிறார்.
SIIMAவில் சிறந்த அறிமுக நடிகை விருது வென்றிருப்பது, இந்த பன்முகத் திறமை கொண்ட நடிகை பாக்யஸ்ரீ போஸுக்கு ஒரு தொடக்கமே. அவரை பெரும் திரையில் கண்டு ரசிக்க, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்திலிருந்து புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது !!
சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் நேச்சுரல் ஸ்டார் நானி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தனது புதிய பரிணாமத்துடன் வருகிறார். உலகளாவிய ஆக்சன் படமான ‘தி பாரடைஸ்’ படத்திற்காக, நானி தனது தோற்றத்தை முழுமையாக மாற்றி, சக்திவாய்ந்த, பீஸ்ட் மோட் அவதாரத்தில் ‘ஜடல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜிம் புகைப்படத்தில், நானி தடிமனான கை, பருமனான உடற்கட்டுடன், உண்மையான ஆக்சன் ஹீரோவாக காட்சியளிக்கிறார். ‘தசரா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, இந்த கதாபாத்திரத்தை மிகுந்த வலிமை மிக்கதாக வடிவமைத்துள்ளார். அதற்காக நானி தினமும் இரண்டு முறை வொர்க்அவுட், ஹெவி ரெசிஸ்டன்ஸ் ட்ரெயினிங், மற்றும் புரோட்டீன் அடிப்படையிலான டயட்டில் ஈடுபட்டு கடுமையாக உழைத்துள்ளார். இது வரை தனது படங்களுக்காக அவர் செய்த மிகப்பெரிய உடற்பயிற்சி இதுவே ஆகும்.
முந்தைய காலக்கட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில், நானி இதுவரை தோன்றியிராத ஒரு புதுமையான வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்தின் பெயரான ‘ஜடல்’ அவரின் தனித்துவமான இரட்டை சிகை (twin braids) அலங்காரத்தில் இருந்து உருவானது.
தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் 2026ஆம் ஆண்டு மிகப் பெரிய பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தி பாரடைஸ்’ திரைப்படம் 2026 மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் 8 மொழிகளில் வெளியாகிறது.
பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்
உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்த ஜானர்களில் ஒன்று ரொமாண்டிக் காமெடி. அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட் ஸ்டுடியோஸ். சமீபத்தில், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிய பூஜையுடன் படம் தொடங்கியது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுப்ரிதா நடிக்கிறார். இவர்களுடன் ஜென்சன் திவாகரும் நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ப்ரீத்தி கரிகாலன் பகிர்ந்து கொண்டதாவது, "எல்லோரும் தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளும்படியான தோற்றம் விக்ரமனிடம் உள்ளதாலேயே அவரை இந்தக் கதைக்கு தேர்ந்தெடுத்தேன். இந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் நேர்மையையும் விக்ரமன் நிச்சயம் திரையில் சரியாக பிரதிபலிப்பார்" என்றார்.
படத்தின் கதை குறித்து கேட்டபோது, "இன்றைய பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாக்குகிறோம். இசையும் விஷூவலும் அருமையாக இருக்கும். எளிமையான அதே சமயம் தனித்துவமான கதையாக உருவாகிறது" என்றார்.
படப்பிடிப்பு செப்டம்பர் 10 ஆம் தேதியில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கிறது. ஒரே ஷெட்யூலாக முடிய இருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ரொமாண்டிக் காமெடி அனுபவத்தை கொடுக்கும்.
மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'
ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'.
விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது திரையரங்க மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
முன்னணி திரைக் குழுமமான பிவிஆர் சினிமாஸ் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது. மனதைத் தொடும், மக்களின் மொழியை பேசும் திரைப்படமான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மறு வெளியிட்டின் போதும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெறும் என்று தயாரிப்பாளர்களான ஏ ஆர் என்டர்டெயின்மென்ட், டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிவிஆர் சினிமாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ரதன் இசையமைத்திருந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்திற்கு மெய்யேந்திரன் கே ஒளிப்பதிவு மேற்கொள்ள பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு செய்திருந்தார். வசனங்களை மணிகண்டன் கே எழுத ஏ ஃபெலிக்ஸ் ராஜா மற்றும் மனோஜ் குமார் கலை இயக்கத்தை கையாண்டிருந்தனர். நடனம்: தினேஷ் மற்றும் ஸ்ரீகிருஷ்; பாடல்கள்: சினேகன், ஆர் ஜே விஜய், மாதேவன், ராகேந்து மெளலி மற்றும் எம் சி சேத்தன்; உடைகள் வடிவமைப்பு: பிரியா ஹரி மற்றும் பிரியா கரன்; சவுண்ட் எபெக்ட் மற்றும் டிசைன்: சூரேன் ஜி மற்றும் அழகியக்கூத்தன்; டி ஐ: சேது செல்வம்; வி எஃப் எக்ஸ்: அக்ஷா ஸ்டுடியோஸ்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; பப்ளிசிட்டி டிசைன்ஸ்: என்டாக்கீஸ்; ஸ்டில்ஸ்: சந்துரு; சப்டைட்டில்ஸ்: ரேக்ஸ்.
ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியிடுகிறது.
'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், 'நிழல்கள்' ரவி , 'தலைவாசல்' விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள்.
வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வ.கௌதமன், ஈ. குறளமுதன், யு .எம். உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர்.
வரும் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக் குழுவினர் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் இப்படத்தை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் வ. கௌதமன், பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடிகர்கள் இளவரசு, கராத்தே ராஜா, தமிழ் கௌதமன், தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளரும் , இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வசனகர்த்தா பாலமுரளி வர்மா பேசுகையில், ''ஒரு திரைப்படம் வெள்ளை தாளில் தொடங்கி வெள்ளித் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தின் பணிகளை தொடங்கிய போது பல கேள்விகளை எதிர் கொண்டோம். அதில் ஒன்று எதற்காக இந்த வேலை? ஏனெனில் நாம் இப்போது நரேட்டிவ் சொசைட்டியில் (Narrative Society) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்கனவே என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, எதை காதில் வாங்கிக் கொண்டிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் தான் நாம் எல்லாவற்றையும் அணுகுகிறோம். இன்னும் சொல்லப்போனால் காதுகளில் வழியாகத்தான் குரல் கொடுப்பவர்களாக இருக்கிறோம். அதன் அடிப்படையில் தான் இந்த இனம் பிரச்சாரப் போரில் வீழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழர் தலைவர் உருவாகி வரும் போதெல்லாம் மிக எளிதாக அவர்களை பல்வேறு அவதூறுகளால் வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வீழ்த்தப்பட்ட உண்மையான மக்கள் தலைவர் ஒருவர் தான் அண்ணன் காடுவெட்டி குரு. அவர் வீழ்ந்தாரா என்றால் வீழவில்லை. ஆனால் அவரைப் பற்றி இன்றைக்கு எல்லோர் மனதிலும் எம்மாதிரியான பிம்பம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தால்...! அதை திருத்தி உண்மையான காடுவெட்டி குரு யார், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பவர் எப்படி செயல்பட வேண்டும், தான் நேசித்த மக்களுக்காக ஒரு தலைவன் எப்படி இயங்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய கடமை ஒரு படைப்பாளியாக எமக்கு இருக்கிறது.
நாங்கள் மக்கள் தொலைக்காட்சிக்காக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றையும், மாவீரன் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் படைப்பாக உருவாக்கிய போது சென்னையில் உள்ள அலுவலகத்தில் மருத்துவர் ஐயா ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு ஆகியோரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு அவரைப் பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிம்பத்திற்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு குழந்தை போன்றவர். நகைச்சுவை உணர்வு கொண்டவரும் கூட. இவரைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை பற்றி நாங்கள் அந்த தருணத்திலேயே சிந்தித்தோம்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் மக்களுக்காக எப்படி செயல்பட வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாது. ஆனால் ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுரங்கம் தோண்டுவதற்கான பணிகளை திட்டமிட்ட போது அதனை எதிர்த்து தீரமுடன் போராடி, வரவிடாமல் தடுத்தவர் காடுவெட்டி குரு. அரியலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்கவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்துவேன் என்று பேசியவர் காடுவெட்டி குரு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நலனுக்காக செயல்படவில்லை என்று அந்த அலுவலகத்தை பூட்டு போட்டு சாவியை எடுத்துச் சென்றவர் காடுவெட்டி குரு. அழகாபுரத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலையை அமைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் மாலை போட்டு அழைத்து சென்றார். வயல்வெளிகளில் மின் கோபுரம் அமைக்கப்பட்ட போது அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகளுக்காக எதிர்த்துப் போராடினார். இப்படி மக்களுக்காக வாழ்ந்த தலைவர் காடுவெட்டி குரு. மக்களுக்காக வாழ்ந்த காடுவெட்டி குருவின் இந்த முகம் மறைக்கப்பட்டிருக்கிறது. இதனை திட்டமிட்டு மறைத்தார்கள். 37 ஆண்டுகள் அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றிய அவர் தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. சேர்த்துக் கொள்ளவில்லை. தன்னிடம் உள்ளதை விசுவாசம் உள்ள தலைமைக்கும், மக்களுக்கும் செலவழித்தார். மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பணத்தால் விலைக்கு வாங்க முடியாத தலைவராகவும் திகழ்ந்தார். இவ்வளவு நேர்மையான ஒரு தலைவரின் அசலான பிம்பம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. திட்டமிட்டு அவர் மீது வேறொரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.
இன்றைக்கு நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நுரையீரல் தொற்று நோய்கள் அதிகம். சிறுநீரக செயலிழப்புகளும் அதிகம். இதற்குக் காரணம் அரியலூரில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகள். இதனால் அப்பகுதியில் காற்று இயல்பை விட அளவுக்கு அதிகமாக மாசுபட்டிருக்கிறது. அங்குள்ள நீரில் பாதரசமும், செலினியமும் இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட அளவைவிட எட்டு மடங்கு அதிகமாக காற்றில் கார்பன் டை ஆக்சைடு கலந்திருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே தெரிவிக்கிறது. நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் இப்படி உடல் உறுப்பு பாதிப்புகளுடன் தான் அப்பகுதியில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த சூழலில் தான் காடுவெட்டி குரு அவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ளாமல் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்தார். தினமும் மக்கள் அங்கு மரணத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து யாராவது போராடினார்களா? இதை எதிர்த்து போராடியவர் தான் காடுவெட்டி குரு. இதை படைப்பின் மூலமாக சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருந்தது. அதனால் தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதே தருணத்தில் இந்த படம் கருத்துகளை மட்டுமே பேசுகிற படமாக இல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாகவும் உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகர் இளவரசு பேசுகையில், ''விருத்தாசலம் என்பதை அம்மண்ணின் மக்கள் 'விருதாசலம்' என்று பேசுவதை தங்கர் பச்சான் மூலம் தான் முதன்முதலில் கேட்டேன். தங்கர் பச்சான் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவர் தான் கௌதமன். இந்தத் திரைப்படத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பிற்காக ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சென்றபோது அங்கு 'கடலை 'விவசாயம் இன்னும் இருப்பதை பார்த்து மகிழ்ந்தேன். இயக்குநர் கௌதமனின் உண்மையான உழைப்பும், அவருடைய ஆத்மார்த்தமான ஈடுபாடும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு ஊடகங்களும், ரசிகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''செப்டம்பர் 19ம் தேதி அன்று காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக வெளியிடுகிறோம். இந்தப் படத்தின் தயாரிப்பில் பங்களிப்பு செய்ய ஏன் ஒப்புக்கொண்டேன் என்றால், காடுவெட்டி குரு அப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டவர். கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களை பார்வையிட்டு வருகிறேன். அதில் இடம்பெறும் கமெண்ட்டுகள் மோசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனிந்த சாதிய வன்மம் என புரியவில்லை," என்றார்.
தயாரிப்பாளர் குறளமுதன் பேசுகையில், ''நான் அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினியர். எனக்கும், சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயக்குநர் கௌதமன் என்னை சந்தித்து சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த மாவீரர் காடுவெட்டி குருவைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் அந்த கதையை சொல்லும்போது நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம். அதன் பிறகு இதனை எப்படி தயாரிப்பது என திட்டமிட்டோம். இந்த படைப்பு மிகப்பெரும் வரலாறாக இருக்க வேண்டும் என்றும், மண்ணை காக்கவும் பெண்ணை காக்கவும் குருவைப் போன்ற ஒரு தலைவர் இருந்தார் என்பதை பதிவு செய்வதற்காகவும் இதை உருவாக்க தீர்மானித்தோம். இதனால் திரள் நிதி (கிரவுட் ஃபண்டிங்) முறையில் இப்படத்திற்காக நிதி திரட்ட தொடங்கினோம்.
நாங்கள் வட தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் விகே சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில் வணிகத்தை நடத்தி வருகிறோம். இதன் உரிமையாளரான நீலமேகம் இதற்கு முழுமையான ஆதரவை வழங்கினார். கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் அளவில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டோம். அத்துடன் இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதனால் திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகமானது. இந்நிலையில் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களுடன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சரவணன் ராஜும் ஆதரவு தெரிவித்தார்.
இந்தப் படத்தை ஒதுக்கிட வேண்டாம். அனைவரும் இந்த படத்தை பாருங்கள். தமிழகத்தில் உள்ள இரு பெரும் சமூகங்கள் ஒன்றிணைந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும். இதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்குநர் கௌதமன் இயக்கியிருக்கிறார். மூன்றாண்டுகள் தவமிருந்து இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். எந்த பாகுபாடும் பார்க்காமல் இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
தயாரிப்பாளர் உமாதேவன் பேசுகையில், ''படையாண்ட மாவீரா என்ற எங்களது முதல் குழந்தையை நாங்கள் பிரசவித்திருக்கிறோம். இப்படத்தைப் பற்றி இயக்குநர் கௌதமன் எங்களிடம் விவாதித்த போது எங்களால் முடியுமா? என்ற சந்தேகம் தான் எழுந்தது.
இன்று நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் பொருளாதாரம் தான் முக்கியம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை போல பொருளாதாரமும் முக்கியமாகிறது. இதன் அடிப்படையில் வி கே வணிக குழுமம் இப்படத்தின் தயாரிப்பில் தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மக்கள் தலைவரின் வரலாற்றை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். இப்படத்தின் பாடல்களுக்காக முதன்முதலாக கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்தபோது எங்களுக்கு தெரியாத, எங்கள் சமுதாயம் கண்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் சொல்லி, அந்த சமுதாயத்தை உயர்த்துகின்ற பாடல்களை எழுதி தருகிறேன் என்று சொன்னார். இதை இங்கு சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இரு பெரும் சமுதாயங்களாக பிரிந்து கிடக்கும் தமிழகத்தில், இவர்கள் தமிழ் சமுதாயமாக ஒன்றிணைய வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் வ. கௌதமன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதனால் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்களின் பொன்னான கடமை,'' என்றார்.
தயாரிப்பாளர் அய்யனார் கண்ணன் பேசுகையில், ''தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன். அத்தகைய மாமனிதனாக வாழ்ந்து மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை, இந்த தமிழ் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கிற மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அத்தனை சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டுகளை, நல்ல செயல்களை இப்படம் பேசுகிறது. இப்படத்தை அவருடன் இணைந்து பயணித்த இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியிருக்கிறார். இது மிகப்பெரிய கூட்டு முயற்சி. நல்ல சினிமாவை தயாரிப்பதற்கு பெரும்பான்மையான நேரத்தில் தயாரிப்பாளர்கள் முன் வர மாட்டார்கள். சினிமாவிற்கு சம்பந்தமில்லாத வேறு துறைகளில் உழைப்பால் முன்னேறியவர்கள் இப்படத்திற்கு உறுதுணையாக நின்றார்கள். இந்த திரைப்பட தயாரிப்பில் மாணவ மாணவிகள் உட்பட பலரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். ஏன் இவ்வளவு மெனக்கடல் என்றால், சமூக நீதிக்காக குரல் கொடுத்த ஒரு தலைவரை, அனைத்து சமுதாயத்திற்கும் தலைவராக திகழ்ந்தவரின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடத்தில் எடுத்து சொல்லப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
குடிதாங்கி எனும் ஊரில் தாழ்த்தப்பட்டவரின் சடலத்தை ஒரு வீதி வழியாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த தருணத்தில் மருத்துவர் ஐயாவின் கட்டளையை ஏற்று காடுவெட்டி குரு அவர்கள் அந்த சடலத்தை தனது தோளில் சுமந்து அந்த வீதி வழியாக சென்றார். அதனால் தான் அவரை மக்கள் மாவீரன் என்று போற்றுகிறார்கள். அத்துடன் அந்த கிராமப் பகுதிகளில் நடைமுறையில் இருந்த இரட்டை குவளை முறையையும் ஒழித்துக் கட்டினார் காடுவெட்டி குரு. அந்த வகையில் சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரு தலைவராகத்தான் காடுவெட்டி குரு திகழ்கிறார். இப்படத்தில் இடம்பெறும் பாடல்களும், படமும் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு தர வேண்டும். மக்கள் தலைவராக மறைந்த காடுவெட்டி குருவை நாம் கொண்டாட வேண்டும்,'' என்றார்.
தயாரிப்பாளர் 'கிரியாடெக்' பாஸ்கர் பேசுகையில், ''இயக்குநர் கௌதமனை 2021ம் ஆண்டில் சென்னையில் உணவகம் ஒன்றில் சந்தித்த போது காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க வேண்டும் என தனது படைப்பை பற்றி பேசினார். அப்போது நான் தொழில் முனைவோராகவும், கல்வியாளராகவும் இருந்தேன்.
அப்போது தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து மறைக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் பற்றிய ஆய்வினை சமர்ப்பிக்கலாம் என்ற ஒரு செய்தி கிடைத்தது. சுதந்திர போராட்ட காலத்தை கடந்து சமகாலத்தில் மக்களுக்காக பணியாற்றிய ஏராளமான அரசியல் தலைவர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை கண்டறிந்தோம். இவரைப் ப
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு
நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ரவி மோகன், “நான் இயக்குனராகி விட்டேன்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் யோகி பாபுவை நாயகனாக வைத்து முதன்முறையாக இயக்கவிருக்கும் படம் தான் “An Ordinary Man”.
அவர் படம் இயக்குவது குறித்து அவருடைய அண்ணன் மோகன் ராஜா நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், அந்த விழாவிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கார்த்தி, நடிகர் டாக்டர் சிவராஜ் குமார், நடிகை ஜெனிலியா மற்றும் அனைத்து பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
யோகிபாபு பேசும்போது, கோமாளி படத்தில் பணியாற்றும்போது ரவி நான் படம் இயக்கினால் நீங்கள் தான் ஹீரோ என்று கூறினார். ஆறு வருடம் கழித்தும் அதை மறக்காமல் இன்று நிறைவேற்றி இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் ரவி மோகன் இயக்கவிருக்கும் “An Ordinary Man” படத்தின் ப்ரோமோ ரவி மோகன் அவர்களின் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் ப்ரோமோ ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம் சேர்த்துள்ளது.
இப்படத்தில் ஜெய் சாரோலா ஒளிப்பதிவு செய்ய, ஹைட்ரோ இசை அமைக்கிறார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப குழுவின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!
நமது வரலாற்றிலும் இதிகாசங்களிலும் நிறைந்த வாயுபுத்ரா, காலத்தை மீறும் அபிநவ புராண வீரனின் காவியக் கதையைப் பேசுகிறது. வலிமையிலும் பக்தியிலும் அசைக்க முடியாத அந்த நிரந்தர போர்வீரனின் வரலாறு இப்போது திரைக்கு வருகிறது. அதோடு, மலைகளையே நகர்த்திய பக்தியின் கதையும், தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக அமைந்த ஹனுமான் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், தியாகமும் இந்த காவியத்தில் வெளிவரவுள்ளது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி (Chandoo Mondeti) இயக்கத்தில், சூர்யதேவர நாக வம்சி (Suryadevara Naga Vamsi) மற்றும் சாய் சௌஜன்யா (Sai Soujanya) தயாரிப்பில் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் (Fortune Four Cinemas) சார்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த மாபெரும் படைப்பு, வரலாறும் பக்தியும் நவீன காட்சியமைப்பும் சங்கமிக்கும் அபூர்வமான அனுபவத்தை தரவுள்ளது.
மாபெரும் 3D அனிமேஷன் சினிமா அனுபவமாக, வாயுபுத்ரா இந்து மதத்தின் நித்திய காவியமான ஹனுமான் கதையை, 2026 விஜயதசமி பண்டிகை வெளியீடாக, உலகம் முழுவதும், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கொண்டு வருகிறது.
லங்கையை எரிய விட்டு, மலையின்மேல் உயர்ந்து நிற்கும் ஹனுமான் உருவத்தை கொண்ட சக்திவாய்ந்த அறிவிப்பு போஸ்டர், இத்திரைப்படம் தரப்போகும் காவிய அனுபவத்தையும், ஆன்மிக ஆழத்தையும் சரியாக பிரதிபலிக்கிறது. இது ஒரு சாதாரண படம் அல்ல, திருக்கோயில்களும் திரையரங்குகளும் ஒன்றிணையும் ஒரு அற்புத நிக்ழவாக, இப்படம் இதுவரை காணாத பக்தி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது.
சிந்து மொண்டேட்டியின் தொலைநோக்குமிக்க கதை சொல்லலும், நாக வம்சியின் தயாரிப்பு நுணுக்கங்களும் இணைந்து, வாயுபுத்ரா இந்திய சினிமாவின் மிக முக்கிய படைப்பாக உருவாகிறது. இதயம் தொடும் கதை சொல்லலையும், கண்கவர் 3D அனிமேஷன் காட்சியமைப்பையும் இணைத்து, நமது பண்பாட்டு அடையாளங்களில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் பெற்ற ஹனுமானின் உலகத்தை பார்வையாளர்களுக்கு நேரடியாக வழங்கவுள்ளது.
படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'
மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பான்-இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)”, படத்தின், மிக முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இயக்குநர் ரோஹித் KP ( Rohith KP) இயக்கத்தில், K. நிரஞ்சன் ரெட்டி (K Niranjan Reddy ) – சைதன்யா ரெட்டி (Chaitanya Reddy ) ஆகியோர் தயாரிப்பில், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் ₹125 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இது சாய் துர்கா தேஜ் அவர்களின் இதுவரையிலான திரைப்படப் பயணத்தில், மிகப்பெரிய திரைப்படமாகும்.
செப்டம்பர் மாதத்தின் மத்தியில் துவங்கும் படப்பிடிப்பில், பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கும் அதிரடியான ஆக்ஷன் சீக்வன்ஸ்கள் படமாக்கப்படவுள்ளது. இதில் சாய் துர்கா தேஜ், ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் மோதும் காட்சிகள் படமக்காப்படவுள்ளது. படத்தின் சினிமா அனுபவத்தை உயர்த்தும் வகையில், விரிவான CGI பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சாய் துர்கா தேஜ், தனது முழுமையான அர்ப்பணிப்புடன், சம்பராலா ஏடிகட்டு (Sambarala Yeti Gattu) படத்திற்காக உழைத்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு புதிய திருப்புமுனையாகவும், உணர்ச்சிகரமான சவாலான கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.
முதலில் தசரா வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்தாலும், தொழில்துறை வேலைநிறுத்தம் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவிக்க உள்ளனர்.
ஹனுமேன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மிகச் சிறப்பான திட்டங்களில் ஒன்றாக SYG உருவாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள சம்பராலா ஏடிகட்டு, ஒரு முக்கியமான பான்-இந்தியா ஆக்சன் -டிராமாவாக ரசிகர்களை கவரத் தயாராகி வருகிறது.
நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’
மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மோஷன் போஸ்டரிலேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது. அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ படத்தின் மைய கதாப்பாத்திரமாக, நிவின் பாலி உள்ளதை இந்த மோஷன் போஸ்டர் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையில் நிவின் பாலி எவ்வாறு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தப்போகிறார் என்பதைக் காண, ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த திரைப்படத்தை சமீபத்தில் ‘கருடன்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய அருண் வர்மா இயக்குகிறார். கதை, திரைக்கதை பிரபல எழுத்தாளர்கள் ஜோடி பாபி & சஞ்சய் ( Traffic ) எழுதியுள்ளனர். Magic Frames நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்தில் நிவின் பாலிக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ், சங்கீத பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் அபிமன்யு திலகன், அசீஸ் நெடுமங்காடு, அஷ்வத் லால் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் படமாக்கப்பட்டிருக்கும் ‘பேபி கேர்ள்’, விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் நிவின் பாலியின் அழுத்தமான நடிப்புடன், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரில்லர்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா