சற்று முன்

‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |    விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் & வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் 'கட்டா குஸ்தி 2'   |    குமார சம்பவம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் - நடிகர் குமரன் தங்கராஜன்   |    உலகளவில் எட்டு மொழிகளில் வெளியாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்'   |    சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'   |    கறுமை அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையைக் காட்சிப்படுத்தும் ‘ஈவா’ பாடல்!   |   

சினிமா செய்திகள்

'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!
Updated on : 10 September 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், 'நிழல்கள்' ரவி , 'தலைவாசல்' விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.  கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். 



 



வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வ.கௌதமன், ஈ. குறளமுதன், யு .எம். உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர்.




 



வரும் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக் குழுவினர் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் இப்படத்தை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறார். 



 



இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் வ. கௌதமன், பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடிகர்கள் இளவரசு, கராத்தே ராஜா, தமிழ் கௌதமன், தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளரும் , இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



 



இந்நிகழ்வில் வசனகர்த்தா பாலமுரளி வர்மா பேசுகையில், ''ஒரு திரைப்படம் வெள்ளை தாளில் தொடங்கி வெள்ளித் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தின் பணிகளை தொடங்கிய போது பல கேள்விகளை எதிர் கொண்டோம். அதில் ஒன்று எதற்காக இந்த வேலை? ஏனெனில் நாம் இப்போது நரேட்டிவ் சொசைட்டியில் (Narrative Society) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்கனவே என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, எதை காதில் வாங்கிக் கொண்டிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் தான் நாம் எல்லாவற்றையும் அணுகுகிறோம். இன்னும் சொல்லப்போனால் காதுகளில் வழியாகத்தான் குரல் கொடுப்பவர்களாக இருக்கிறோம்.‌ அதன் அடிப்படையில் தான் இந்த இனம் பிரச்சாரப் போரில் வீழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழர் தலைவர் உருவாகி வரும் போதெல்லாம் மிக எளிதாக அவர்களை பல்வேறு அவதூறுகளால் வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வீழ்த்தப்பட்ட உண்மையான மக்கள் தலைவர் ஒருவர் தான் அண்ணன் காடுவெட்டி குரு. அவர் வீழ்ந்தாரா என்றால் வீழவில்லை. ஆனால் அவரைப் பற்றி இன்றைக்கு எல்லோர் மனதிலும் எம்மாதிரியான பிம்பம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தால்...! அதை திருத்தி உண்மையான காடுவெட்டி குரு யார், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பவர் எப்படி செயல்பட வேண்டும், தான் நேசித்த மக்களுக்காக ஒரு தலைவன் எப்படி இயங்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய கடமை ஒரு படைப்பாளியாக எமக்கு இருக்கிறது.




 



நாங்கள் மக்கள் தொலைக்காட்சிக்காக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றையும், மாவீரன் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் படைப்பாக உருவாக்கிய போது சென்னையில் உள்ள அலுவலகத்தில் மருத்துவர் ஐயா ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு ஆகியோரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு அவரைப் பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிம்பத்திற்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு குழந்தை போன்றவர். நகைச்சுவை உணர்வு கொண்டவரும் கூட. இவரைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை பற்றி நாங்கள் அந்த தருணத்திலேயே சிந்தித்தோம்.



 



ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் மக்களுக்காக எப்படி செயல்பட வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாது. ஆனால் ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுரங்கம் தோண்டுவதற்கான பணிகளை  திட்டமிட்ட போது அதனை எதிர்த்து தீரமுடன் போராடி, வரவிடாமல் தடுத்தவர் காடுவெட்டி குரு. அரியலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்கவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்துவேன் என்று பேசியவர் காடுவெட்டி குரு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நலனுக்காக செயல்படவில்லை என்று அந்த அலுவலகத்தை பூட்டு போட்டு சாவியை எடுத்துச் சென்றவர் காடுவெட்டி குரு. அழகாபுரத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலையை அமைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் மாலை போட்டு அழைத்து சென்றார். வயல்வெளிகளில் மின் கோபுரம் அமைக்கப்பட்ட போது அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகளுக்காக எதிர்த்துப் போராடினார். இப்படி மக்களுக்காக வாழ்ந்த தலைவர் காடுவெட்டி குரு. மக்களுக்காக வாழ்ந்த காடுவெட்டி குருவின் இந்த முகம் மறைக்கப்பட்டிருக்கிறது.‌ இதனை திட்டமிட்டு மறைத்தார்கள். 37 ஆண்டுகள் அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றிய அவர் தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. சேர்த்துக் கொள்ளவில்லை. தன்னிடம் உள்ளதை விசுவாசம் உள்ள தலைமைக்கும், மக்களுக்கும் செலவழித்தார். மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பணத்தால் விலைக்கு வாங்க முடியாத தலைவராகவும் திகழ்ந்தார். இவ்வளவு நேர்மையான ஒரு தலைவரின் அசலான பிம்பம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. திட்டமிட்டு அவர் மீது வேறொரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.



 



இன்றைக்கு நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நுரையீரல் தொற்று நோய்கள் அதிகம். சிறுநீரக செயலிழப்புகளும் அதிகம். இதற்குக் காரணம் அரியலூரில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகள். இதனால் அப்பகுதியில் காற்று இயல்பை விட அளவுக்கு அதிகமாக மாசுபட்டிருக்கிறது. அங்குள்ள நீரில் பாதரசமும், செலினியமும் இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட அளவைவிட எட்டு மடங்கு அதிகமாக காற்றில் கார்பன் டை ஆக்சைடு கலந்திருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே தெரிவிக்கிறது. நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் இப்படி உடல் உறுப்பு பாதிப்புகளுடன் தான் அப்பகுதியில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த சூழலில் தான் காடுவெட்டி குரு அவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ளாமல் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்தார். தினமும் மக்கள் அங்கு மரணத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து யாராவது போராடினார்களா? இதை எதிர்த்து போராடியவர் தான் காடுவெட்டி குரு. இதை படைப்பின் மூலமாக சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருந்தது. அதனால் தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதே தருணத்தில் இந்த படம் கருத்துகளை மட்டுமே பேசுகிற படமாக இல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாகவும் உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.




 



நடிகர் இளவரசு பேசுகையில், ''விருத்தாசலம் என்பதை அம்மண்ணின் மக்கள் 'விருதாசலம்' என்று பேசுவதை தங்கர் பச்சான் மூலம் தான் முதன்முதலில் கேட்டேன். தங்கர் பச்சான் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவர் தான் கௌதமன். இந்தத் திரைப்படத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.  படப்பிடிப்பிற்காக ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சென்றபோது அங்கு 'கடலை 'விவசாயம் இன்னும் இருப்பதை பார்த்து மகிழ்ந்தேன்.  இயக்குநர் கௌதமனின் உண்மையான உழைப்பும், அவருடைய ஆத்மார்த்தமான ஈடுபாடும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு ஊடகங்களும், ரசிகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.



 



தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''செப்டம்பர் 19ம் தேதி அன்று காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக வெளியிடுகிறோம். இந்தப் படத்தின் தயாரிப்பில் பங்களிப்பு செய்ய ஏன் ஒப்புக்கொண்டேன் என்றால், காடுவெட்டி குரு அப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டவர். கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களை பார்வையிட்டு வருகிறேன். அதில் இடம்பெறும் கமெண்ட்டுகள் மோசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.  ஏனிந்த சாதிய வன்மம் என புரியவில்லை," என்றார்.



 



தயாரிப்பாளர் குறளமுதன் பேசுகையில், ''நான் அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினியர். எனக்கும், சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயக்குநர் கௌதமன் என்னை சந்தித்து சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த மாவீரர் காடுவெட்டி குருவைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் அந்த கதையை சொல்லும்போது நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம். அதன் பிறகு இதனை எப்படி தயாரிப்பது என திட்டமிட்டோம். இந்த படைப்பு மிகப்பெரும் வரலாறாக இருக்க வேண்டும் என்றும், மண்ணை காக்கவும் பெண்ணை காக்கவும் குருவைப் போன்ற ஒரு தலைவர் இருந்தார் என்பதை பதிவு செய்வதற்காகவும் இதை உருவாக்க தீர்மானித்தோம். இதனால் திரள் நிதி (கிரவுட் ஃபண்டிங்) முறையில் இப்படத்திற்காக நிதி திரட்ட தொடங்கினோம்.



 



நாங்கள் வட தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் விகே சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில்  வணிகத்தை நடத்தி வருகிறோம். இதன் உரிமையாளரான நீலமேகம் இதற்கு முழுமையான ஆதரவை வழங்கினார். கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் அளவில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டோம்.‌ அத்துடன் இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதனால் திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகமானது. இந்நிலையில் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களுடன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சரவணன் ராஜும் ஆதரவு தெரிவித்தார்.




 



இந்தப் படத்தை ஒதுக்கிட வேண்டாம். அனைவரும் இந்த படத்தை பாருங்கள். தமிழகத்தில் உள்ள இரு பெரும் சமூகங்கள் ஒன்றிணைந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும். இதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்குநர் கௌதமன் இயக்கியிருக்கிறார். மூன்றாண்டுகள் தவமிருந்து இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். எந்த பாகுபாடும் பார்க்காமல் இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.



 



தயாரிப்பாளர் உமாதேவன் பேசுகையில், ''படையாண்ட மாவீரா என்ற எங்களது முதல் குழந்தையை நாங்கள் பிரசவித்திருக்கிறோம். இப்படத்தைப் பற்றி இயக்குநர் கௌதமன் எங்களிடம் விவாதித்த போது எங்களால் முடியுமா?  என்ற சந்தேகம் தான் எழுந்தது.



 



இன்று நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் பொருளாதாரம் தான் முக்கியம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை போல பொருளாதாரமும் முக்கியமாகிறது. இதன் அடிப்படையில் வி கே வணிக குழுமம் இப்படத்தின் தயாரிப்பில் தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மக்கள் தலைவரின் வரலாற்றை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். இப்படத்தின் பாடல்களுக்காக முதன்முதலாக கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்தபோது எங்களுக்கு தெரியாத, எங்கள் சமுதாயம் கண்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் சொல்லி, அந்த சமுதாயத்தை உயர்த்துகின்ற பாடல்களை எழுதி தருகிறேன் என்று சொன்னார். இதை இங்கு சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.



 



இரு பெரும் சமுதாயங்களாக பிரிந்து கிடக்கும் தமிழகத்தில், இவர்கள் தமிழ் சமுதாயமாக ஒன்றிணைய வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் வ. கௌதமன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதனால் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்களின் பொன்னான கடமை,'' என்றார்.




 



தயாரிப்பாளர் அய்யனார் கண்ணன் பேசுகையில், ''தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன். அத்தகைய மாமனிதனாக வாழ்ந்து மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை, இந்த தமிழ் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கிற மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அத்தனை சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டுகளை, நல்ல செயல்களை இப்படம் பேசுகிறது. இப்படத்தை அவருடன் இணைந்து பயணித்த இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியிருக்கிறார். இது மிகப்பெரிய கூட்டு முயற்சி. நல்ல சினிமாவை தயாரிப்பதற்கு பெரும்பான்மையான நேரத்தில் தயாரிப்பாளர்கள் முன் வர மாட்டார்கள். சினிமாவிற்கு சம்பந்தமில்லாத வேறு துறைகளில் உழைப்பால் முன்னேறியவர்கள் இப்படத்திற்கு உறுதுணையாக நின்றார்கள். இந்த திரைப்பட தயாரிப்பில் மாணவ மாணவிகள் உட்பட பலரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். ஏன் இவ்வளவு மெனக்கடல் என்றால், சமூக நீதிக்காக குரல் கொடுத்த ஒரு தலைவரை, அனைத்து சமுதாயத்திற்கும் தலைவராக திகழ்ந்தவரின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடத்தில் எடுத்து சொல்லப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.



 



குடிதாங்கி எனும் ஊரில் தாழ்த்தப்பட்டவரின் சடலத்தை ஒரு வீதி வழியாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த தருணத்தில் மருத்துவர் ஐயாவின் கட்டளையை ஏற்று காடுவெட்டி குரு அவர்கள் அந்த சடலத்தை தனது தோளில் சுமந்து அந்த வீதி வழியாக சென்றார். அதனால் தான் அவரை மக்கள் மாவீரன் என்று போற்றுகிறார்கள். அத்துடன் அந்த கிராமப் பகுதிகளில் நடைமுறையில் இருந்த இரட்டை குவளை முறையையும் ஒழித்துக் கட்டினார் காடுவெட்டி குரு. அந்த வகையில் சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரு தலைவராகத்தான் காடுவெட்டி குரு திகழ்கிறார். இப்படத்தில் இடம்பெறும் பாடல்களும், படமும் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு தர வேண்டும். மக்கள் தலைவராக மறைந்த காடுவெட்டி குருவை நாம் கொண்டாட வேண்டும்,'' என்றார்.



 



தயாரிப்பாளர் 'கிரியாடெக்' பாஸ்கர் பேசுகையில், ''இயக்குநர் கௌதமனை 2021ம் ஆண்டில் சென்னையில் உணவகம் ஒன்றில் சந்தித்த போது காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க வேண்டும் என தனது படைப்பை பற்றி பேசினார்.  அப்போது நான் தொழில் முனைவோராகவும், கல்வியாளராகவும்  இருந்தேன்.



 



அப்போது தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து மறைக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் பற்றிய ஆய்வினை  சமர்ப்பிக்கலாம் என்ற ஒரு செய்தி கிடைத்தது. சுதந்திர போராட்ட காலத்தை கடந்து சமகாலத்தில் மக்களுக்காக பணியாற்றிய ஏராளமான அரசியல் தலைவர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை கண்டறிந்தோம்.  இவரைப் ப

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா