சற்று முன்

‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |    விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் & வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் 'கட்டா குஸ்தி 2'   |    குமார சம்பவம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் - நடிகர் குமரன் தங்கராஜன்   |    உலகளவில் எட்டு மொழிகளில் வெளியாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்'   |    சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'   |    கறுமை அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையைக் காட்சிப்படுத்தும் ‘ஈவா’ பாடல்!   |   

சினிமா செய்திகள்

'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!
Updated on : 10 September 2025

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும்   “தி பாரடைஸ்”  படத்திலிருந்து புதிய  பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது !! 



 



சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் நேச்சுரல் ஸ்டார் நானி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும்  விதமாக தனது புதிய பரிணாமத்துடன் வருகிறார். உலகளாவிய ஆக்சன் படமான ‘தி பாரடைஸ்’ படத்திற்காக, நானி தனது தோற்றத்தை முழுமையாக மாற்றி,  சக்திவாய்ந்த, பீஸ்ட் மோட்  அவதாரத்தில் ‘ஜடல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



 



ஜிம் புகைப்படத்தில், நானி தடிமனான கை, பருமனான உடற்கட்டுடன், உண்மையான ஆக்சன் ஹீரோவாக காட்சியளிக்கிறார். ‘தசரா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, இந்த கதாபாத்திரத்தை மிகுந்த வலிமை மிக்கதாக வடிவமைத்துள்ளார். அதற்காக நானி தினமும் இரண்டு முறை வொர்க்அவுட், ஹெவி ரெசிஸ்டன்ஸ் ட்ரெயினிங், மற்றும் புரோட்டீன் அடிப்படையிலான டயட்டில் ஈடுபட்டு கடுமையாக உழைத்துள்ளார். இது வரை தனது படங்களுக்காக அவர் செய்த மிகப்பெரிய உடற்பயிற்சி இதுவே ஆகும். 



 



முந்தைய காலக்கட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில், நானி இதுவரை தோன்றியிராத ஒரு புதுமையான வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்தின் பெயரான ‘ஜடல்’ அவரின் தனித்துவமான இரட்டை சிகை (twin braids) அலங்காரத்தில் இருந்து உருவானது.



 



தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின்  படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படம் 2026ஆம் ஆண்டு மிகப் பெரிய பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தி பாரடைஸ்’ திரைப்படம் 2026 மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் 8 மொழிகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா