சற்று முன்

அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |    விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் & வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் 'கட்டா குஸ்தி 2'   |    குமார சம்பவம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் - நடிகர் குமரன் தங்கராஜன்   |    உலகளவில் எட்டு மொழிகளில் வெளியாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்'   |    சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'   |   

சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!
Updated on : 11 September 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார். ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்த்தவர், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நடித்தாலும், ஆட்டம், பாட்டம், ஆக்‌ஷன், நடிப்பு என தனது நவரச திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.



 



எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் ஒரு சில நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வரும் அர்ஜுன் தாஸ், நடிப்பில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக உள்ள படம் ‘பாம்’. ஆக்‌ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், ‘பாம்’ படம் மூலம் முதல் முறையாக காமெடியில் கலக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ், தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார், என்று படக்குழு தெரிவித்துள்ளது.



 


’சில நேரங்களில் சில மனிதர்கள்’ பட புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘பாம்’ திரைப்படம் குடும்பத்தோடு பார்க்க கூடிய கலகலப்பான படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக, தனது மிரட்டலான பார்வை மற்றும் நடிப்பால் மிரட்டிய அர்ஜுன் தாஸ், இந்த படத்தின் மூலம் தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியிருப்பதோடு, தனது நடிப்பு திறமையால் நகைச்சுவைக் காட்சிகளை கூட, வழக்கமான பாணி இல்லாமல், தனது பாணியில் சற்று புதிதாக கையாண்டிருப்பவர், காதல் காட்சிகள் மற்றும் பாடல்களிலும் பட்டையை கிளப்பியிருக்கிறாராம். நிச்சயம் இந்த படம் அர்ஜுன் தாஸுக்கு மட்டும் இன்றி அவரது ரசிகர்களுக்கும் நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.



 



மேலும், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி பல படங்கள் வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பரங்களை வித்தியாசமான வழியில் மேற்கொண்டு வரும் படக்குழு, படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் சாலையில், போகும் நபர்களை துண்டு பிரசுரங்கள் கொடுத்து, “பாம்...பாம்...பாம்...” என்று கூவி கூவி விளம்பரப்படுத்துவதும், தனது கம்பீரமான காந்த குரல் மூலம் நாயகன் அர்ஜுன் தாஸ், படத்தின் புரோமோஷன் பற்றி கேட்பது, போன்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.



 



அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அவர் முதல் முறையாக கமர்ஷியல் காமெடி படத்தில் நாயகனாக நடித்திருப்பதால் ‘பாம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா