சற்று முன்

இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |    21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |   

சினிமா செய்திகள்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025
Updated on : 22 September 2025

இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI) வரும் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளதை அறிவிப்பதில்  பெருமை கொள்கிறது. 



 



35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள், 5 ஆண்டு இடைவெளி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெறும். இந்த சாம்பியன்ஷிப்பில் போட்டியில் 30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியின் நோக்கம், உலக மாஸ்டர்ஸ் தடகளத்தின் வழியாக போட்டித் திறனின் மூலம் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதே ஆகும்.



 



முதலில் இந்தோனேஷியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி, ஜூலை 2025-இல் இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. நவீன விளையாட்டு வசதிகள் மற்றும் தமிழக அரசின் உறுதியான ஆதரவுடன் சென்னை இயல்பான தேர்வாக அமைந்தது. இதற்கு முன்னர் 2000, 2006-ஆம் ஆண்டுகளில் இப்போட்டிகளை பெங்களூரில் இந்தியா வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து, இப்போது மூன்றாவது முறை இந்தியா இப்போட்டியை நடத்துகிறது.



 



“தமிழக துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலினிடம் நாங்கள் அணுகியபோது, அவர் உடனே முழு ஆதரவை வழங்கி, போட்டி அமைப்பு குழுவின் Chief Patron ஆகச் சேர ஒப்புக் கொண்டார்,” என இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI)  பொதுச்செயலாளர் திரு. டேவிட் பிரேம்நாத் தெரிவித்தார்.



 



பிரபல தமிழ்த்திரைப்பட நடிகர் ஆர்யா இப்போட்டியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தேசிய சாம்பியனும், தமிழ்நாடு தடகள சங்கச் செயலாளருமான செல்வி. லதா தொழில்நுட்ப இயக்குநராக பணியாற்றவுள்ளார். திரு. மேகநாத ரெட்டி, Member Secretary, SDAT மற்றும் இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI)  துணைத் தலைவர் திரு. செண்பகமூர்த்தி M ஆகியோரும் உறுதுணையாக உள்ளனர்.



 



இந்த நிகழ்வில் உலக மாஸ்டர்ஸ் தடகள தலைவர் மார்கிரிட் ஜங் (ஜெர்மனி), செயலாளர் ஜுவான் ஓர்டோனெஸ் (மெக்சிகோ), ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சங்க தலைவர் விவாட் விக்ரந்தநோரோஸ் (தாய்லாந்து) மற்றும் செயலாளர் எஸ். சிவபிரகாசம் (மலேசியா) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.



 



2023-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த போட்டியில் இந்தியா 264 பதக்கங்களை வென்றது. இந்த முறை தாயகத்தில் 2,500 வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய அணியை வெளியிட்டு அந்த சாதனையை மிஞ்சுவதே இந்தியாவின் குறிக்கோள்.



 



“துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலினின் நிலையான ஆதரவிற்கும், பிராண்ட் தூதராக இணைந்த நடிகர் ஆர்யாவுக்கும் நன்றி. மறக்க முடியாத சாம்பியன்ஷிப் நடத்துவதற்காக அயராது உழைக்கும் குழுவினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி,” என திரு. டேவிட் பிரேம்நாத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா